மாசுக்கோவின் மறைமுதுவர் கிரீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீல்
மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர்
மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர் கிரீல், பெப்ரவரி 1, 2009 அன்று பொறுப்பேற்றபோது
சபைஉருசிய மரபுவழித் திருச்சபை
ஆட்சி பீடம்மாசுக்கோ
ஆட்சி துவக்கம்1 பெப்ரவரி 2009
ஆட்சி முடிவுநடப்பில்
முன்னிருந்தவர்அலெக்சி II
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு7 ஏப்ரல் 1969
ஆயர்நிலை திருப்பொழிவு14 மார்ச்சு 1976
நிக்கோடிம் (ரோடோவ்)-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்விளாடிமிர் மிக்கைலோவிச் குண்ட்யாயேவ்
பிறப்பு20 நவம்பர் 1946 (1946-11-20) (அகவை 77)
லெனின்கிரேடு, சோவியத் ஒன்றியம்

கிரீல் (Kirill, அல்லது Cyril, பிறப்புப் பெயர்: விளாடிமிர் மிக்கைலோவிச் குண்ட்யாயேவ், பிறப்பு: 20 நவம்பர் 1946) உருசிய மரபுவழித் திருச்சபை சேர்ந்த ஆயராவார். இவர் பெப்ரவரி 1, 2009இல் உருசிய மரபுவழித் திருச்சபையின் மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைமுதுவராவதற்கு முன்னதாக கிரீல் இசுமோலென்ஸ்க், கலினின்கிராடு பேராயராக திசம்பர் 26, 1984 முதல் இருந்துள்ளார். உருசிய மரபுவழித் திருச்சபையின் வெளித் தேவாலங்களினுடனான உறவுகள் துறைத் தலைவராக இருந்துள்ளார்; 1989 முதல் புனித மதக்குருமார்களின் குழுவில் (Holy Synod) நிரந்தர அங்கத்தினராக உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]