மாசாணியம்மன் கோயில் சிறப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனைமலை மாசாணியம்மன் கோயில்
பெயர்
பெயர்:மாசாணியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்துார்
கோயில் தகவல்கள்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில்[1] என்பது இந்தியாவின் கோயம்புத்தூரில் அமைந்து காணப்படும் ஒரு அம்மன் ஆலயம் ஆகும்.

சிறப்பு[தொகு]

சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பொழுது அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றார். அப்போது இம்மாயனத்தில் பராசக்தியின் வடிவாய் மாசணியம்மன் இருப்பதை அறிந்து, மயான மண்னைக் கொண்டு அம்பாளை சயன உருவமாக செய்து வழிபட்டுச் சென்றார்.

பெயர்க் காரணம்[தொகு]

இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் "மயானசயனி" என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் "மாசாணி" என்றழைக்கப்படுகிறாள்.

பெண்களின் அம்மன்[தொகு]

இக்கோயிலில் பச்சியம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள் இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக் கொள்ள தீவிைனகள் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும். செவ்வரளி உதிரிப்புமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட பெண்கள்களுக்கு உடல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

மிளகாய் பூச்சு[தொகு]

இந்த கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்துதற்காக வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை நாட்களில் பெண்கள் கூட்டம் கோயிலில் அலைமோதுகிறது. ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து, வெளிப்புறத்தில் இருக்கும் சிறிய மாசாணியம்மன் சிலைக்கு கார மிளகாயை அரைத்து பூசுகின்றனர்.

மிளகாய் வழிபாட்டுக்காகவே பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கோயிலிற்கு வருகை தருகின்றனர். அங்குள்ள வீடுகளில் நகை, பொருள் மாயமாகி விட்டால், வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் செல்வதில்லையாம். ‘பொருள் காணாமல் போய்விட்டது. மாசாணி அம்மனுக்கு மிளகாய் அரைக்க போகிறேன்‘ என்று அக்கம்பக்கத்தில், சுற்றுப்பகுதிகளில் சொல்லுகிறார்கள்.

சான்றுகள்[தொகு]