மாசச்சூசெட்சு விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாசச்சூசெட்சு விரிகுடா
Cape Cod Bay map.png
மாசச்சூசெட்சின் விரிகுடாக்கள்
அமைவிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
ஆள்கூறுகள்ஆள்கூறுகள்: 42°22′30″N 70°44′58″W / 42.37500°N 70.74944°W / 42.37500; -70.74944
பெருங்கடல்/கடல் மூலங்கள்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
வடிநில நாடுகள் ஐக்கிய அமெரிக்கா
நீர்க் கனவளவுok

மாசச்சூசெட்சு விரிகுடா (Massachusetts Bay) அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மாசச்சூசெட்ஸ் கடற்கரையை உருவாக்கும் விரிகுடா ஆகும்.

விவரணம்[தொகு]

வடக்கில் ஆன் முனையிலிருந்து தெற்கில் பிளைமவுத் துறைமுகம் வரை விரிந்துள்ள இந்த விரிகுடாவின் நீளம் ஏறத்தாழ 42 மைல்கள் (68 km) ஆகும். இதன் வடக்கு,தெற்கு கடலோரங்கள் ஒன்றையொன்று சாய்ந்துள்ளன; இடையில் ஐந்து மைல்கள் தொலைவிற்கு பாஸ்டன் துறைமுகத்திற்கான திறப்பு உள்ளது. இந்த முக்கோணத்தின் அடித்தளத்திலிருந்து பாஸ்டன் துறைமுகத்திற்கான ஆழம் 21 மைல்கள் (34 km) ஆகும். விரிகுடாவின் மிகமேற்கத்திய முனையாக பாஸ்டன் நகரம் உள்ளது.

மாசச்சூசெட்சு விரிகுடாவின் வடக்குக் கடற்கரை பாறையாக ஒழுங்கற்று உள்ளது. தெற்கத்திய கடற்கரை தாழ்நிலமாக, சதுப்பு மற்றும் மணற்பாங்காக உள்ளது. இந்தக் கடலோரமாக பல முனைகளும் தலைநிலங்களும் உள்ளன; கடலோரத்திலிருந்து தள்ளி, குறிப்பாக பாஸ்டன் துறைமுகத்தின் நுழைவில் பல சிறு தீவுகள் உள்ளன. நோவா ஸ்கோசியா முதல் தெற்கில் காட் முனை விரிகுடா வரையுள்ள மேய்ன் வளைகுடாவின் அங்கமாக மாசாச்சூசெட்சு விரிகுடா உள்ளது. காட் முனை விரிகுடா சிலநேரங்களில் மாசச்சூசெட்சின் அங்கமாக கருதப்படுகின்றது. இந்த புரிதலின்படி "மாசச்சூசெட்சு விரிகுடா" ஆன் முனை முதல் காட் முனை வரை உள்ள செவ்வக பெருங்கடல் பகுதியைக் குறிக்கின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]