மாங்குளம், மதுரை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாங்குளம்
மாங்குளம்
இருப்பிடம்: மாங்குளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°01′51″N 78°20′21″E / 10.030862°N 78.339153°E / 10.030862; 78.339153ஆள்கூறுகள்: 10°01′51″N 78°20′21″E / 10.030862°N 78.339153°E / 10.030862; 78.339153
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


139 மீட்டர்கள் (456 ft)

தற்காலத் தமிழில் மாங்குளம் கல்வெட்டின் செய்திகள்

மாங்குளம் (Mangulam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது மதுரை நகரில் இருந்து கிழக்கே மேலூர் செல்லும் வழியில் 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.[4] மாங்குளத்திற்குத் தெற்கே மதுரை மேற்கு வட்டம், மேற்கே அலங்காநல்லூர் வட்டம், மேற்கே மதுரை கிழக்கு வட்டம், வடக்கே நத்தம் வட்டம் ஆகியன அமைந்துள்ளன.

சிறப்புகள்[தொகு]

இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.[5][6] மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில்[4][7] உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணபடுகின்றன.[8] சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.[6]

மாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டில் இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[9] இங்குள்ள மலையில் காணப்படும் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9] இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[10] இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.[11]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. 4.0 4.1 "Mangulam". Department of Archaeology, Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2017-09-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 பெப்ரவரி 2014.
 5. ஐராவதம் மகாதேவன் (2003). Early Tamil epigraphy from the earliest times to the sixth century A.D.. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-01227-1. http://books.google.co.in/books?id=DZBkAAAAMAAJ&q=mangulam+iravatham+mahadevan&dq=mangulam+iravatham+mahadevan&hl=en&sa=X&ei=aakJU5b-O8mfkAX-ooDQCA&ved=0CCoQ6AEwAA. 
 6. 6.0 6.1 "Kalugumalai". பொன் பல்கலைக்கழகம். மூல முகவரியிலிருந்து 2014-02-27 அன்று பரணிடப்பட்டது.
 7. Gaṇeśa Lālavānī (1991). Jainthology: An Anthology of Articles Selected from the Jain Journal of Last 25 Years. Jain Bhawan. http://books.google.co.in/books?id=LpnXAAAAMAAJ&q=mangulam+Kalugumalai&dq=mangulam+Kalugumalai&hl=en&sa=X&ei=q6oJU9TOKsW8kQW11oHYDg&ved=0CDgQ6AEwAw. 
 8. Prema Kasturi; Chithra Madhavan (2007). South India heritage: an introduction. East West Books (Madras). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-88661-64-0. http://books.google.com/books?id=_HwMAQAAMAAJ. 
 9. 9.0 9.1 "Jaina treasure trove in Mankulam village". தி இந்து. 1 சனவரி 2009. http://www.thehindu.com/todays-paper/jaina-treasure-trove-in-mankulam-village/article365626.ece. 
 10. "மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம்.
 11. "Protected Monuments in Tamil Nadu". Archeological Survey of India. "S. No.8 — Ovamalai Kalvettu (inscriptions)"