மாங்கல்ய தோஷம் (சோதிடம்)
மாங்கல்ய தோஷம் (Mangala Dosha) அல்லது மங்கள தோஷம் (IAST : Maṅgala-doṣa), என்பது ஸ்க்வா நீக்கம் காரணமாக மங்கல் தோஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் நிலவும் இந்து மத மூடநம்பிக்கை ஆகும்.[1][2] இந்து சோதிடத்தின்படி செவ்வாயின் (அங்காரகன்) ஆதிக்கத்தின் கீழ் பிறந்த பெண்களுக்கு "மாங்கல்ய தோஷம்" ("செவ்வாய் தோஷம்") இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பெண்கள் மாங்கல்ய தோஷமுடையவர் (அல்லது மாங்லிக்) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மூடநம்பிக்கையின் படி, மாங்கல்ய தோஷமுடைய பெண்ணுக்கும் தோஷம் இல்லாதவருக்கும் இடையேயான நடைபெறும் திருமணம் பேரழிவு தரும் என்பதாகும்.[1]
மாங்கல்ய தோஷ மூடநம்பிக்கையை நம்புபவர்கள், ஒரு மாங்கலிய தோஷமுடைய நபர் தங்கள் மாங்கல்ய தோஷம் இல்லாத கணவனின் திருமண வாழ்க்கையின் ஆரம்பக்காலத்தில் மரணத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர். இதனைப் போக்க நிவாரணமாக முதலில் தோஷமுடையவர் ஒரு மரம் (வாழை அல்லது அரச மரம், விலங்கு அல்லது உயிரற்ற பொருள் ஒன்றைத் திருமணம் செய்து கொள்வார்கள். இந்த போலித் திருமண வழக்கம், சடங்கில் பயன்படுத்தப்படும் "துணையினைப்" பொறுத்து வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு நபர் ஒரு மண் பானையை (கும்பா) திருமணம் செய்து கொண்டால், அந்த விழா "கும்ப-விவா" ("பானையுடன் கூடிய திருமணம்") என்று அழைக்கப்படுகிறது. மாங்கல்ய தோஷத்தால் ஏற்படும் அனைத்து தீய விளைவுகளும் "போலித் துணை" மீது ஏற்படும் என்று நம்பப்படுகிறது: இத்தகைய நபர் மாங்கல்ய தோஷத்திலிருந்து இதன் மூலம் விடுவிக்கப்படுகிறார். மேலும் ஒரு மனிதனுடனான இவர்களின் திருமணமானது மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 K. Anand (1965). "An Analysis of Matrimonial Advertisements". Sociological Bulletin (Indian Sociological Society) 14 (1): 69. doi:10.1177/0038022919650106.
- ↑ Shalu Nigam (29 August 2019). Women and Domestic Violence Law in India: A Quest for Justice. Taylor & Francis. p. 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-069203-7.
- ↑ Eleni Gage (2018). Lucky in Love: Traditions, Customs, and Rituals to Personalize Your Wedding. Crown Publishing Group. pp. 34–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-525-57390-6.
- ↑ Roy Bainton (2016). The Mammoth Book of Superstition: From Rabbits' Feet to Friday the 13th. Little, Brown Book Group. pp. 312–313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4721-3747-0.
- ↑ Alisha Haridasani Gupta. "The True Story of My Marriage to a Pot". https://www.nytimes.com/2020/07/09/style/manglik-pot-marriage.html.