மாங்கனீசெலாதோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாங்கனீசெலாதோனைட்டு
Manganiceladonite
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுKMgMn3+Si4O10(OH)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

மாங்கனீசெலாதோனைட்டு (Manganiceladonite) என்பது KMgMn3+Si4O10(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய சிலிக்கேட்டு கனிமமாகும் [3]. இத்தாலி நாட்டின் கடற்கரை மண்டலமான லிகுரியாவின் லா சிபெசியா என்ற துறைமுக நகரத்திலுள்ள செர்சியாரா சுரங்கத்தில் கண்டறியப்பட்ட பல கனிமங்களில் மாங்கனீசெலாதோனைட்டும் ஒன்றாகும் [2][4]. மைகா குழுவைச் சேர்ந்த கனிமம் செலாதோனைட்டை ஒத்த மூவிணைதிற மாங்கனீசு என்று மாங்கனீசெலாதோனைட்டு கனிமம் வகைப்படுத்தப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Lepore, G.O., Bindi, L., Bonazzi, P., Ciriotti, M.E., Di Benedetto, F., Mugnaioli, E., Viti, C., and Zanetti, A., 2015. Manganiceladonite, IMA 2015-052. CNMNC Newsletter No. 27, October 2015, 1226; Mineralogical Magazine 79, 1229–1236
  3. "Manganiceladonite: Manganiceladonite mineral information and data". பார்த்த நாள் 2016-03-13.
  4. "Cerchiara Mine, Borghetto Vara, Vara Valley, La Spezia Province, Liguria, Italy - Mindat.org". பார்த்த நாள் 2016-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசெலாதோனைட்டு&oldid=2806735" இருந்து மீள்விக்கப்பட்டது