மாக்தலேனா மோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்தலேனா மோசி
தனிநபர் தகவல்
முழு பெயர்மாக்தலேனா ரூத் அலெக்ஸ் மோசி
பிறப்புநவம்பர் 30, 1990 (1990-11-30) (அகவை 33)
உயரம்1.63 m (5 அடி 4 அங்)
எடை52 kg (115 lb)
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்பிரீஸ்டைல்
பயிற்றுநர்ஜில் தோயல்

மாக்தலேனா ரூத் மோசி (Magdalena Ruth Moshi) (பிறப்பு" 1990 நவம்பர் 30) இவர் ஓர் தன்சானிய நீச்சல் வீரராவார். [1] 2012 கோடைகால ஒலிம்பிக்கில், பெண்கள் 100 மீட்டர் பிரீஸ்டைலில் போட்டியிட்டு, ஒட்டுமொத்தமாக 45 வது இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிவிட்டார். இவர் 2016 கோடைகால ஒலிம்பிக்கில் 50 மீ பிரீஸ்டைல் போட்டியில் பங்கேற்று, 91 போட்டியாளர்களில் 67 வது இடத்தைப் பிடித்தார். ( 29.44 வினாடிகளில்)

இவர் 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 50 மற்றும் 100 மீட்டர் பிரீஸ்டைலில் போட்டியிட்டார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2010 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தார். அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதார அறிவியல் படிப்பதற்காகவும், 2016 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகவும், அதே நேரத்தில் மருத்துவத்தில் உயர்கல்வியையும் முடிக்கவும் அங்கு சென்றார். [3] உடலியல் அல்லது பொது சுகாதாரத்தில் பணியாற்ற தன்சானியா திரும்புவதாக இவர் நம்புகிறார். [4]

குறிப்புகள்[தொகு]

  1. London2012.com பரணிடப்பட்டது 2012-07-23 at the வந்தவழி இயந்திரம்
  2. "Glasgow 2014 - Magdalena Ruth Alex MOSHI Profile". g2014results.thecgf.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.
  3. . 
  4. Osborne, Ben (Summer 2013). "Magdalena's Olympic odyssey". Lumen. அடிலெயிட் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்தலேனா_மோசி&oldid=3030219" இலிருந்து மீள்விக்கப்பட்டது