மாக்டலீனா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்டலீனா
ஆறு
The delta of the Magdalena River
பெயர் மூலம்: Biblical figure Mary Magdalene
நாடு கொலம்பியா
கிளையாறுகள்
 - இடம் Páez River, Saldaña River, La Miel River, Nare River, Cauca River, San Jorge River
 - வலம் Cabrera River, Bogotá River, Negro River, Carare River, Sogamoso River, Cesar River
நகரங்கள் நெய்வா, Girardot, Honda, La Dorada, Puerto Boyacá, Puerto Berrío, Barrancabermeja, Santa Cruz de Mompox, Magangué, Barranquilla
உற்பத்தியாகும் இடம் La Magdalena lagoon [1]
 - அமைவிடம் Colombian Massif, Colombia
 - உயர்வு 3,685 மீ (12,090 அடி)
கழிமுகம் Caribbean Sea
 - அமைவிடம் Barranquilla, Colombia
 - elevation மீ (0 அடி)
நீளம் 1,528 கிமீ (949 மைல்) [2]
வடிநிலம் 2,57,438 கிமீ² (99,397 ச.மைல்)
Discharge for Calamar, Bolívar
 - சராசரி [3]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
Map of the Magdalena River watershed
Map of the Magdalena River watershed
Map of the Magdalena River watershed

மாக்டலீனா ஆறு கொலம்பியா நாட்டின் முக்கிய ஆறாகும்.(எசுப்பானியம்: Río Magdalena, எசுப்பானிய ஒலிப்பு: [ˈri.o maɣðaˈlena]; (ஸ்பானிஷ் மொழியில் ரியோ மாக்டலீனா என்றும்குறைவான பேர்களால் ரியோ கிராண்ட் டே லா மாக்டலீனா என்றும் அழைக்கப் பெறுகிறது). இது கொலம்பியாவின் பிரதான ஆறு 1,528 கி.மீ வடக்காக பாய்கிறது. இது இந்த நாட்டின் மேற்கு பகுதியின் பாதிப் பகுதியில் ஓடுகிறது. வேதாகமத்திலுள்ள மாக்தலீனா மேரி என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு இந்த பெயர் வந்தது. இதன் மணற் திட்டுகள் இவற்றின் முகத் துவார பகுதியில் அடிக்கடி மாறும் தன்மை உடையதாக இருந்தாலும் இதன் கீழ் பகுதியில் இது ஹோண்டா பகுதி வரை போக்கு வரத்திற்கு ஏற்புடையதாக பயனுள்ளதாகக் காணப் படுகிறது. இது மாக்டலீனா ஆற்றுப் பள்ளதாக்கு வழியாக ஓடுகிறது. இதன் வடிகால் பகுதி ஏறக்குறைய 273,000 கி.மீ பரப்பளைவைக் (105,000மைல்கள்) கொண்டதாகக் காணப் படுகிறது. இது இந்நாட்டின் 24% பரப்பளவும் 66% மக்களும் வாழும் பகுதியாகும்

பாடக்கோப்பு[தொகு]

இந்த ஆற்றின் பிரதான பகுதி அல்லது உற்பத்தியாகும் பகுதி கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ளது. அதன் பிறகு அன்டியன் மலைத் தொடரில் உள்ள மத்திய ஓரிணை மலையடுக்குத் தொடர் மற்றும் கிழக்கு ஓரிணை மலையடுக்குத் தொடர்களுக்கு இடையில் ஓடுகிறது. அதன் பிறகு நாட்டின் வட பகுதியில் இரு மலைத் தொடர்களுக்கு இடையில் உள்ள பெரும் பள்ளதாக்கில் மேற்காக ஓடி அங்குள்ள கடற்கரைப் பகுதியில் 100கி.மீ மேற்காக ஓடி மறுபடியும் வடக்கு நோக்கி பாய்ந்து பாரன்குவில்லா என்ற நகரத்தில் உள்ள பாகன் டி ஸென்ஸியா என்று பெயர் வழங்கப் படும் இடத்தில் கரீபியன் கடலில் கலக்கும்.

விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள்[தொகு]

பிரேஸிலுக்கு அடுத்தப் படியாக உலகின் இரண்டாவது உயிரிப் பன்மையம் கொலம்பியாதான். 2016 கணக்கின் படி 56,343 வகையான சிற்றினங்கள் காணப் படுகிறது. இவைகளில் 9,153 வகைகள் இவ்விடத்திற்கே உரிய நிலத்துணை இனங்களாகும். இது ஆர்க்கிட் மற்றும் பறவை இன வைகைகளில் உலக அளவில் முதலாம் இடத்தையும் தாவரங்கள், இருவாழ்விகள் மற்றும் நன்னிர் மீன் இனங்களில் இரண்டாம் இடத்தையும் பனை மரங்கள் மற்றும் ஊர்வன இனங்களில் மூன்றாம் இடத்தையும் பல்லுயிர் பாலூட்டிகளில் நான்காம் இடத்தையும் வகிக்கிறது.

மீன்கள்[தொகு]

மாக்டலீனா ஆற்று வடிநிலம் அங்கு காணப்படும் காகா ஆறு மற்றும் கிளை ஆறுகள் மீன்களின் வளமிக்க பகுதியாகக் காணப் படுகிறது. 2008 கணக்கின் படி இங்கு 203 வகையான மீனினங்கள் காணப் பட்டன. அதன் பிறகு அநேக வகை புதிய இனங்கள் கண்டு பிடிக்கப் பட்டு வருகிறது. அதன் பிறகு அநேக வகையான் புதிய மீன்கள் கண்டு பிடிக்கப் பட்டு வருகிறது. இங்கு வாழும் மீனிங்களில் 55% உள்நாட்டு அல்லது நிலத்துணை மீனினங்களாகும். இவற்றில் நான்கு பேரினங்களும் காணப்படுகிறது. பொதுவாக இங்குள்ள மீனினங்கள் தங்கள் சுற்றுச் சூழலோடு தொடர்புடையதாகக் காணப் படுகிறது. அட்ரடோ ஆறு மற்றும் மரகோயோ ஏரி பகுதிகளில் நன்கு தொடர்புடையதாகக் காணப் படுகிறது. ஆனால் அமேசான்-ஓரினாகோ ஆற்று வடிகாலில் குறைந்த அளவே தொடர்பு கொண்டுள்ளது.

கொலம்பியாவில் ஆற்று வடிகால்களில் தான் அதிக அளவு மீன் உற்பத்தி மர்றும் மீன் வளம் நிறைந்ததாகக் காணப் படுகிறது. ஆனால் 1975-2008 இல் இந்த உற்பத்தி மற்றும் பிடிக்கப் படும் மீன் அளவௌகளில் கொலம்பியா ஒரு பெரும் சரிவைச் சந்தித்தது. மனித கழிவுகள், சுரங்கத் தொழில்கள், வேளாண்மை மற்றும் காடுகளை அழிப்பதால் ஏற்பட்ட வண்டல் மண் படிவுகள் ஆகியவை மாசுபாட்டை ஏற்படுத்தியமையே இந்த வளம் சரிய முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப் படுகிறது. மேலும் இன்னும் அணை கட்டுகள் கட்டப்படுகின்றன இதுவும் ஒரு காரணமாகக் கருதப் படுகிறது.இந்த மாசுக்களின் காரணமாக வாணிப த்திற்கு முக்கியமாக பயன்பட்ட சில வகை மீன்களின் உடலில் கன உலோகங்கள் கண்டறியப் பட்டன. 2002 கணக்கின் படி பத்தொன்பது மீன் வகைகள் அழியும் அச்சுறுத்தலில் இருப்பதாகக் கருதப் படுகிறது.

வரலாறு[தொகு]

இந்த ஆற்றின் தென் அமெரிக்கவிலுள்ள வட பகுதியில் பாயும் புவியியல் அமைப்பைக் காணும்போது இந்த மாக்டலீனா ஆறு கொலம்பியா காலத்திற்கு முன்பே கொலம்பியாவிற்கும் ஈகுவாடருக்கும் இடையில் இருந்திருக்கக் கூடும். காரிப் மொழியைப் பேசக்கூடிய பாஞ்சே மற்றும் யாரிகுயி இன மக்கள் இந்த ஆற்றின் கரையோரம் குடியேறி உள்ளார்கள் அதே வேளையில் இதன் மேற்பகுதி மியூச்கா இன மக்களால் குடியேற்றப் பட்டுள்ளது .அந்தப் பகுதி யுமா ஆறு என்று அழைக்கப் படுகிறது.

மேலும் 16ஆம் நூற்றாண்டில் இன்றைய கொலம்பியாவிற்கு வருகை தந்த ஸ்பானிய வீரர்களும் கண்டுபிடிப்பாளர்களும் இந்த ஆற்றின் மூலமே உள்நாட்டிற்குள் போய் வந்தார்கள். ரொட்ரிகோ டி பஸ்டிடாஸ் என்பவரே இதை கண்டு பிடித்து இதற்கு மாக்டலீனா என்கிற பெயரையும் ஏப்ரல் 1 , 1501இல் வைத்தார்.

சான்றுகள்[தொகு]

பெரிய சமூகங்கள் உள்ள பதினான்கு நாடுகளில் கொலம்பியா ஒன்றாகும்
இந்த நாடு இரண்டு பல்லுயிர் வனப்பகுதிகளைக் கொண்டுள்ளது: 1 - வெப்ப மண்டல 5 - தும்புஸ்-சோகோ-மக்டலேனா
ஜெய்ம் டூக்கு மிருகக்காட்சி சாலையில் ஜாகுவார்,
  1. Restrepo, J.; Kjerfve, B.; Hermelin, M.; Restrepo, J. (2006). "Factors controlling sediment yield in a major South American drainage basin: The Magdalena River, Colombia". Journal of Hydrology 316: 213–232. doi:10.1016/j.jhydrol.2005.05.002. 
  2. "Sistema de informacion Ambiental de Colombia – SIAC" (in Spanish). Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2011-07-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Chapter 14" (PDF). The Pacific and Caribbean Rivers of Colombia: Water Discharge, Sediment Transport and Dissolved Loads. Archived from the original (PDF) on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2011-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்டலீனா_ஆறு&oldid=3567028" இலிருந்து மீள்விக்கப்பட்டது