உள்ளடக்கத்துக்குச் செல்

மாக்கின்டாசு கிளாசிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Macintosh Classic
Macintosh Classic
உருவாக்குனர்Apple Inc
வகைDesktop
வெளியீடு தேதிOctober 15, 1990
அறிமுக விலைUS$999
நிறுத்தம்September 14, 1992
இயங்கு தளம்6.0.76.0.8L, 7.07.5.5
நுண்செயலிMotorola 68000 8 MHz

Macintosh Classic ஆனது Apple நிறுவனத்தால் ஒரு தனி நபர் கணினியாக oct 15, 1990 அன்று அறிமுகபடுத்தபட்டது.இது $1000 இற்கும் குறைவாக விற்கபட்ட முதலாவது "Apple Macintosh" கணினி ஆகும்."Macintosh Plus" "Macintosh SE" இன் வெற்றியே Macintosh Classic உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது.மேலும் Macintosh இன் முன்னைய கணிணிகளில் இருந்த 9 இஞ்சி(9 inch) monochrome CRT கணினிதிரை, 512x342 பிரிதிறன் (pixel) 4mb நினைவகம் போன்றனவே இதிலும் காணப்பட்டது.68010 CPU , உயர் நினைவக திறன்(capasity)அல்லது வர்ண திரை,இணக்க தன்மை போன்ற புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில்லை என Apple நிறுவனம் முடிவெடுத்து இருந்தது.இதனால் இது விலை குறைந்த ஒரு Apple இன் தயாரிப்பாக காணபட்டது. மேலும் பல மேம்படுத்தல்களுக்கு பிறகு இது இதன் முன் வெளிவந்த Macintosh Plus இலும் 25 % வேகமாக இயங்கியதுடன் ஒரு Apple Super Drive [9 cm](3.5 inches) ம் தன்னகத்தே கொண்டிருந்தது.

இது 1984 ஆம் ஆண்டு Jerry Manock மற்றும் Terry Oyama வினால் இணைந்து உருவாக்கப்பட்ட Macintosh 128k தொழில்முறை வடிவமைப்பினை தழுவி இருந்தது.

Apple ஆனது இரு பதிப்புகளை வெளிவிட்டது அவை $1000–$1500 வரையான வீச்சுக்குள் காணப்பட்டது செயலி (Processor) இன் செயல்திறன் மெதுவாக இருந்தமை விரிவாக்கும் துளைகள் இல்லாமையும் பற்றி விமர்சகர்களின் கருத்து காணபட்டது

மேலும் இக் classic கணிணி ஆனது , சொல் செயலாக்க (Word Processing),விரிதாள்(Spreadsheet), தரவுத்தளம்(Database) ,போன்றவற்றிற்கே உபஜோகமனது என்ற கருத்து காணப்பட்டது ஆனால் குறைந்த விலை,கல்விக்கான மென்பொருள் காணபட்டமை என்பன இது கல்வி துறை சார்ந்து புகழ் அடைய வழி கோலியது இது இறுதியாக 1991 ல் Macintosh Classic ii ஆக விற்கபட்டது.ஆயினும் அதனை தொடர்ந்து ஒரு வருட கால பகுதியில் இதன் உருவாக்கம் இடை நிறுத்தபட்டது

வரலாறு

[தொகு]

அபிவிருத்தி

[தொகு]

Apple நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஆன Steve Jobs 1985 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை விட்டு பிரிந்த பிரிந்த பின்பு , பொருட்களை உற்பத்தி செய்யும் பொறுப்பானது , முன்னாள் Apple France இன் முகாமையாளரான Jean-Louis Gassée இடம் ஒப்படைக்கபட்டது.இவரிடம் ஒப்படைக்க பட்ட பின் இவர் குறைந்த இலாபத்தை தரும் வகையில் மலிவான கணினிகளை விற்பதை விட உயர் இலாப நோக்கோடு உயர் விலையில் கணினிகளை விற்க வேண்டும் என்பதை விலை/செயற்பாடு விகித கொள்கை(Price/Performance ratio) மூலம் வலியுறுத்தினார்.Apple இன் உயர் மட்ட முகாமைத்துவமும் இதனை ஆமொதித்ததன் விளைவாக தொடர்ச்சியாக Apple கணினிகளின் விலை அதிகரித்து சென்றது

ஆரம்பத்தில் $1௦௦௦ இற்கு விற்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் இவரின் கொள்கை மாற்றத்தை தொடர்ந்து $2495 இற்கு வெளியிடபட்டது .இதனை தொடர்ந்தும் விலை அதிகரித்து செல்லும் போக்கே காணப்பட்டது.Macintosh Plus ஆனது $2599 இற்கும் , SE ஆனது அதன் வகை சார்ந்து $2900 அல்லது $3900 இற்கும் , மற்றும் அடிப்படை Macintosh II ஆனது குறைந்தபட்சம் $5500 இற்கும் விற்கப்பட்ட அதேவேளை நவீன வகை கணினிகள் மேலும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.Macintosh IIcx $5369 இற்கும், IIci $6269 இற்கும்,IIfx $9900 இற்கும் விற்கபட்டது.இவை அனைத்தும் கணினித்திரை,விசைப்பலகை, ஆகியன உள்ளடக்கபடாத விலைகள் ஆகும்.1980 களின் பிற்பகுதியில் வர்ண கணினித்திரைகள் மிகவும் விலை உயர்ந்ததாக காணபட்டது. Apple's 14" 640x480 திரை ஒன்றின் குறிக்கபட்ட விலையாக $999 இருந்தது குறிப்பிடதக்கது.மேலும் Apple's ADB விசைபலைகயும் அதே விலையில் குறிக்கபட்டது.Apple இன் பொருட்கள் உயர் தரமும், அதேவேளை உயர் விலையும் உடையதாக காணப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் காணப்பட்ட விலை குறைந்த Apple கணினியாக, பல வருட பழமையான Mac Plus அப்போது கிட்டத்தட்ட $2000 இற்கு விற்கப்பட்டது.

குறைந்த விலை சந்தையை Apple நிராகரித்ததும்,கூடிய விலை சந்தையில் Apple நிராகரிக்கபட்டதும் 1989 Christmas காலத்தில் Apple இன் விற்பனையில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.இதனால் Apple இன் சந்தை பெறுமதி 20% இனால் வீழ்ச்சியடைந்தது.

இதனை தொடர்ந்து 1990 தை இல் Gassee தனது வேலையில் இருந்து விலகினார்.ஆகவே அந்த பொறுப்பு பலரிடம் பிரித்து ஒப்படைக்கபட்டது. அவர்கள் மீள குறைந்த விலை சந்தையையும் கவரும் விதமாக தங்களின் உற்பத்தியை மூன்று வகை ஆக பிரித்தனர்.குறைந்த விலை கணினி.வர்ண திரையுடன் கூடிய குறைந்த விலை கணினி.மற்றும் வர்ண திரையுடன் கூடிய உயர் தர கணினி.இதில் குறைந்த விலை கணினி ஆனது ஆரம்ப கால Macintosh கணினியை ஒத்திருந்தது.

வெளியீடு

[தொகு]

Apple நிறுவனமானது Modular Computer Systems Inc இற்கு $1 மில்லியன் இனை "Classic" எனும் பெயரை பாவிப்பதற்கான 5 வருட ஒப்பந்தத்திற்காக செலுத்தியதாக ஜூலை 10, 1990 அன்று வெளியாகிய MacWEEK எனும் சஞ்சிகை கூறுகிறது.ஆயினும் அது முடிந்த பிறகும் Apple அந்த ஒப்பந்தத்தை புதுபிக்கவில்லை.மேலும் அந்த சஞ்சிகையின் அடிப்படையில் Macintosh Classic ஆனது முன்னர் காணப்பட்ட 8 megahertz Motrola 68௦௦௦ நுண்செயலி,9 இஞ்சி திரை ஆகியவற்றையே கொண்டு இருந்தது.மேலும் இது $1,500 தொடக்கம் $2,150 இற்கு விற்கப்பட்டது.

ஐப்பசி 15,1990 அன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் அன்றைய Apple CEO ஆன John Sculley $1௦௦௦ ஆரம்ப விலையுடைய Classic ஐ அறிமுகம் செய்தார்.மேலும் அவர் கூறுகையில், புதிய வாடிகையாளர்களை அடையும் நோக்கத்துடன் தாம் வாடிக்கையாளர்கள் அதிகமாக தேவைப்படும் வசதிகளுடன் கூடிய கணினிகளை,குறைந்த விலையில் அழிக்க கூடியதாக தாம் மீள வடிவமைத்ததாகவும் , பழையவற்றிட்கு வெறும் விலையை மட்டும் குறைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.Apple இன் இந்த புதிய யுக்தி இலாபத்தை குறைக்கும் என முதலீட்டாளர்கள் கருதினர்.ஆயினும் சந்தைபடுத்தல் முகாமையாளர் ஆன Brodie Keast இன் கருத்து படி தாங்கள் அதிகளவு மக்களை சென்றடைய தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.ஆயினும் Classic இன் வெளியீட்டை தொடர்ந்து Apple ன் பங்கு விலை 50 சதம்(Cents) ஆல் வீழ்ச்சியடைந்து $27.75 ஆக காணபட்டது.இதற்கு 12 மாதத்திற்கு முன்னர் அதிக பட்சமாக $50.37 இலும் பங்கு ஒன்றின் விலை காணபட்டது குறிபிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அதே நேரம் ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் வெளியிடப்பட்டது.ஜப்பானில் இதன் சில்லறை விலையாக 198,000 யென் ($1,523).இதே பெறுமதிக்கு அங்கு ஒரு Toshiba Dynabook மடிக்கணினியை கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Apple தனது வாடிக்கையாளர்களுக்கு சந்தை படுத்துவதில் $40 மில்லியனை செலவு செய்த போதிலும் உயர் கேள்வியை பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கியது.இதனால் சிங்கப்பூர் மற்றும் ஐயர்லாந்து தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்தல் , கடல் மார்க்கமாக பொருட்களை அனுப்புவதிலும் வேகமாக ஆகாய மார்க்கமாக அனுப்புதல் போன்ற யுக்திகளை கையாண்டது.

Macintosh Classics மற்றும் LCs இரண்டும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கபட முன்பே Scholastic Software மென்பொருள் நிருவனதிற்கு வழங்கபட்டு இருந்தது.அது ஒரு கல்வி சார் மென்பொருள் ஆகும்.அவர்கள் அதனை $800 இற்கு பாடசாலைகளுக்கு விற்பனை செய்தனர்.ஆகவே இதன் பொருட்டு Classic கல்வித்த்துறை சார்ந்து பிரபல்யம் அடைந்தது.

வசதிகள்

[தொகு]

குறைந்த விலையுடைய கணினி ஆனது 1 MB நினைவகத்தை கொண்டது.இது $999 இற்கு விற்கப்பட்டது.மேலும் இதில் வன்தட்டு நிலை நினைவகம் காணப்படவில்லை.$1,499 இற்கு விற்கப்பட்ட வகை கணினியில் முன்னையதற்கு மேலதிகமாக 1 MB நினைவக விரிவாக்க துளையும் 40 MB வன்தட்டு நிலை நினைவகமும் காணப்பட்டது.இதற்கு முன் வெளிவந்த Macintosh Plus இலும் 25 % வேகமாக இயங்கியதுடன் ஒரு Apple Super Drive [9 cm](3.5 inches) ம் தன்னகத்தே கொண்டிருந்தது.Motorola 68000 நுண்செயலியை இறுதியாக உபயோகித்து உருவாக்க பட்ட Mac கணினியும் இதுவாகும். இதில் இயங்குதளம் பதிப்பு 6.0.7 முதல் இயங்குதளம் பதிப்பு 7.5.5 வரை உபயோகிக்கலாம்.மேலும் Command + Option + X + O இனை விசைபலகை மூலமாக உபயோகித்து இயங்குதளம் பதிப்பு 6.0.3 இற்கும் செல்ல முடியும்.சில விநியோகஸ்தர்கள் Classic உடன் Smartbundle எனப்படும் ஒரு மென்பொருள் தொகுதியையும் வழங்கினர்.இது தனியாக $349 இற்கு விற்கபட்டது இங்கு குறிபிடத்தக்க ஒரு விடயம்.அம் மென்பொருள் தொகுதியில் T/Maker's WriteNow சொல் செயலாக்கி , , Ashton-Tate's Full Impact விரிதாள், RecordHolderPlus தரவுத்தளம் , மற்றும் Silicon Beach Software's SuperPaint 2.0 வண்ணப்பூச்சு என்பவற்றை கொண்டு இருந்தது.

வடிவமைப்பு

[தொகு]

Jerry Manock மற்றும் Terry Oyama ன் Macintosh 128K தொழில்முறை வடிவமைப்பை தழுவி இறுதியாக வெளிவந்த கணினி Macintosh Classic ஆகும்.Macintosh SE' ன் வடிவமைப்பில் உபயோகித்த Snow White design language ன் சிறிய பகுதியை தக்க வைத்து கொண்டனர்.முற்பக்கத்தில் floppy drive இற்கு குறுக்கே காணப்படும் ஒரே நிறமுள்ள பட்டையான கோடு ஆனது SE ன் தாக்கத்தை குறித்து நிற்கிறது.மற்றும் தனித்தன்மையான SE ல் முகப்பில் காணப்பட்ட கோடுகள் Classic ல் உபயோகிக்க படவில்லை.ஒளிப்பொலிவு கட்டுப்பாடு ஆனது ஒரு பிரத்தியேக மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் 1990 களில் முகப்பே காணப்பட்ட ஒரு வளையி ஆனது Apple இற்கான ஒரு அடையாளமாகவே மாறியது.

தர்க்கப்பலகை(Logic Board),மத்திய சுற்றுப்பலகை(Central Circuit Board) என்பன Macintosh SE ன் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு அமைந்து இருந்தது.ஆயினும் surface mount தொழில்நுட்பம் மூலம் அதன் அளவுகள் 9×5 இஞ்சி(23×13 cm) ஆக குறைக்கபட்டு இருந்தன.இது SE இன் அளவுகளிலும் அரைவாசியாகும். இந்த அளவு குறைவாக்கபட்ட வடிவமைப்பு மற்றும் விரிவாக்கும் செருகியை நீக்கியமையும் உற்பத்தி செலவை குறைவாக பேணுவதற்கு வழி அமைத்து கொடுத்தது.

வரவேற்பு

[தொகு]

ஒரு சில விமர்சகர்களின் கருத்து ஆனது செயலி மற்றும் விரிவாக்கும் செருகி இல்லாமை சார்ந்தே காணப்பட்டது. Home Office Computing நிறுவனத்தை சேர்ந்த Liza Schafer,Classic இன் விலை சிக்கனம் மற்றும் இலகு பாவனை பற்றி புகழ்ந்து கூறிய அதேநேரம் திரை அளவு சிறிதாக அமைந்து இருபது தொடர்பாக விமர்சித்திருந்தார். ஏனெனில் அமெரிக்காவில் முழு கடிதம் ஒன்றின் அளவு 8 1⁄2 × 11 இஞ்சிகள் ஆகும்.இது திரை அளவை விடவும் பெரிதாக காணபடுகிறது.உயர் திறன் மற்றும் வரைகலை வேலைபாடுகளுக்காக கொள்வனவு செய்வோர் இதனை வாங்குவது குறித்து எச்சரித்தும் இருந்தார்.இதன் விலையுடன் ஒப்பிடும் போது தொழிற்பாடு ஆனது கவர கூடியதாக உள்ளது என குறிப்பிட்ட அவர் மேலும் தொடர்கையில்,ஆயினும் இதன் தொழிற்பாடு தரவுத்தளம், விரிதாள் மற்றும் சொல் செலயக்கம் ஆகியவற்றிகு மட்டுமே சிறப்பானது என்பதனையும் கூறினார். PC Week சஞ்சிகை இதன் செயலியின் வேகம் குறித்து விமர்சித்தது.இது எழுத்து வடிவம் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட வரைகலை ஆகியவற்றிகே உபயோகமானது.ஆகவே வீட்டு பாவனைக்கு உகந்தது என விமர்சித்தது. PC User சஞ்சிகை இன் ஆய்வானது செயலியின் வேகம் மற்றும் விரிவாக்கும் செருகி இல்லாமை தான் இதன் விலை குறைவாக காணபடுகிறது என்று தெரிவித்தது.ஆயினும் MacWEEK சஞ்சிகையானது இதனை ஒரு நல்ல தயாரிப்பாகவும் Macintosh Plus இற்கான ஒரு சிறந்த மாற்றீடு ஆகவும் , Macintosh இன் உண்மை நோக்கத்தை ஆறரை வருடங்களின் பின் நிறைவேற்றுவதாகவும் Classic இருபதாகவும் கருத்துகளை வெளிவிட்டது.

Robert McCarthy என்பவர் Electronic Learning சஞ்சிகையின் மாசி 1991 பதிப்பில் , "ஆசிரியர்கள்,கல்வித்துறை சார்ந்தவர்கள்,மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் அனைவரும் இந்த விலை குறைந்த Macintosh கணினி பற்றி ஆர்வமாக உள்ளனர்."என்று குறிப்பிடு இருந்தார். மேலும் பலரின் கருத்துகள் அடிப்டையில் Classic கணினியானது பலராலும் விரும்பபட்ட ஒரு Mac கணினியாகும்.இதன் விலை குறைவே இதற்கான காரணமாகும்.இதனால் சந்தையில் இது அனைத்து வீச்சுகளிலும் போட்டி போடும் தன்மையினை கொண்டு இருந்தது.

விவரக்கூற்று

[தொகு]
Component Specification
கணினித்திரை 9 அங்குலங்கள் (23 cm) monochrome CRT கணினித்திரை, 512 × 342 pixel தீர்மானம்.
சேமிப்பிடம் 40 MB SCSI hard disk drive optional, Built-in SuperDrive 3.5 in Floopy Drive
செயலி MHz Motorola 68000
Bus(Computing) வேகம் MHz
RAM MB, விரிவாக்கப்பட கூடியது 2 or 4 MB.
Rom 512  KB
வலையமாக்கம் AppleTalk
மின்கலம் 3.6 V Li மின்கலம்
பரிமானங்கள் 13.2 in × 9.7 in × 11.2 in (33.5 cm × 24.6 cm × 28.4 cm; depth by width by height)
16 lb (7.26 kg)
Port connections ADB (keyboard,mouse)
mini-DIN-8 RS-422 serial ports (printer, modem, AppleTalk)
DB-19 (ext. floppy drive)
DB-25 SCSI connector (ext. hard drive, scanner)
1× 3.5 mm Headphone jack socket
விரிவாக்கும் செருகிகள் none
ஒலி 8-bit mono 22 kHz
Gestalt ID 17 (கணினி அடையாள எண்)
Codename XO [1]

குறிப்புதவி

[தொகு]
  1. Linzmayer, Owen W (1999). Apple Confidential (1st Edition). No Starch Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-886411-31-X.