மக்காவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாக்காவோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

22°10′00″N 113°33′00″E / 22.16667°N 113.55000°E / 22.16667; 113.55000

மக்காவு
澳門特別行政區
àomén tèbié xíngzhèngqū
Região Administrativa Especial de Macau
மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு
மக்காவுவின் கொடி மக்காவுவின் Coat of arms
நாட்டுப்பண்
தன்னார்வலர்களின் படையணி
Location of மக்காவுவின்
தலைநகரம் எதுவுமில்லை[1]
பெரிய பிரெகேசியா Our Lady of Fatima Parish
ஆட்சி மொழி(கள்) சீனம், போர்த்துக்கீசம்
அரசு
 -  தலைமை அதிகாரி எட்மண்ட் ஹோ ஹாவு-வா
அமைப்பு
 -  போர்த்துக்கல்லினால் ஆக்கிரமிக்கப்பட்டது 1557 
 -  போர்த்துக்கேய குடியேற்ற நாடு ஆகஸ்ட் 13, 1862 
 -  ஆட்சி ஒப்படைப்பு
டிசம்பர் 20, 1999 
பரப்பளவு
 -  மொத்தம் 28.6 கிமீ² (தரப்படுத்தப்படவில்லை)
11.04 சது. மை 
 -  நீர் (%) 0
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 520,400 (167வது)
 -  2000 குடிமதிப்பு 431,000 
 -  அடர்த்தி 17,310/கிமீ² (2வது)
44/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $14.3 பில்லியன் (139வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $28,436 (2006)
ம.வ.சு (2004) Straight Line Steady.svg0.909 (உயர்) (25வது)
நாணயம் மக்கானிய பட்டாக்கா (MOP)
நேர வலயம் மக்காவு நேரம் (ஒ.ச.நே.+8)
இணைய குறி .mo
தொலைபேசி +853
மக்காவுவின் வரைபடம்

மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு (Macau Special Administrative Region), பொதுவாக மாக்காவு (Macau அல்லது Macao), என்பது மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது ஹாங்காங் ஆகும். இது டிசம்பர் 20, 1999 இல் அமைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே குவாங்டொங் மாகாணம், கிழக்கு, மற்றும் தெற்கில் தென்சீனக் கடல் ஆகியன அமைந்துள்ளன. இதன் மேற்குப்பகுதியில் பேர்ள் ஆறு ஓடுகிறது. புடவைத் தொழில், இலத்திரனியல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இங்கு மிக முக்கிய பொருளாதார வளத்தைத் தருகின்றன.

போர்த்துக்கீச வியாபாரிகள் முதன் முதலில் இங்கு 16ம் நூற்றாண்டில் குடியேறினர். பின்னர் இது போர்த்துகலினால் 1999 வரையில் சீனாவுக்குக் கையளிக்கப்படும் வரையில் ஆளப்பட்டு வந்தது. சீன-போர்த்துக்கல் ஒப்பந்தத்தின்படி மக்காவு முழுமையான சுயாட்சியுள்ள அமைப்பாக குறைந்தது 2049 ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என இரு தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. "ஒரு நாடு, இரண்டு ஆட்சிகள்" என்ற கொள்கைப்படி மக்காவுவின் எல்லைப் பாதுகாப்புக்கும் வெளிநாட்டுறவுக்கும் சீனாவின் மத்திய அரசு பொறுப்பாகும். அதே நேரத்தில் மக்காவுக்கு அதன் உள்நாட்டு விவகாரங்களில் (சட்டம், காவற்துறை, நாணயம், வரி போன்றவை) தன்னதிகாரம் இருக்கும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. வரலாற்றுரீதியாக, "Cidade do Nome de Deus de Macau" (மக்காவு தீபகற்பம், Macau Peninsula) தலைநகராக இருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்காவு&oldid=1970770" இருந்து மீள்விக்கப்பட்டது