மாகோடோ குமாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாகோடோ குமாதா
Makoto Kumada
இறப்புசூன் 28, 2007(2007-06-28) (அகவை 87)
தேசியம்சப்பானியர்
பணியிடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம், தோசிபா, ஒசாகா நகரப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுமாதா இணைப்பு வினை

மாகோடோ குமாதா (Makoto Kumada) என்பவர் சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 அன்று இவர் பிறந்தார். முதலில் ஒசாகா நகர பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும் பின்னர் 1983 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை சப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்திலும் இவர் பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில், குமாதாவின் குழு பிரான்சில் பணிபுரியும் கோரியூ குழுவுடன் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிக்கல்-வினையூக்கிய குறுக்கு இணைப்பு வினைகளை அறிவித்தது. குமாதா இணைப்பு வினை தற்போது இவரது பெயரைக் கொண்டு அறியப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 ஆம் நாள் குமாதா காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகோடோ_குமாதா&oldid=3030975" இலிருந்து மீள்விக்கப்பட்டது