உள்ளடக்கத்துக்குச் செல்

மாகறல் ஏரி

ஆள்கூறுகள்: 12°26′N 79°26′E / 12.43°N 79.44°E / 12.43; 79.44
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாகறல் ஏரி
அமைவிடம்மாகறல், காஞ்சிபுரம் மாவட்டம், தென்னிந்தியா
ஆள்கூறுகள்12°26′N 79°26′E / 12.43°N 79.44°E / 12.43; 79.44
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு105 எக்டேர் (259.461 ஏக்கர்)
சராசரி ஆழம்1 மீட்டர் (3.281 அடி)

மாகறல் ஏரி (Magaral Lake) என்பது, காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் எனும் கிராமத்தில் இயற்கையாக உருவான நீர்த்தடமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இந்த ஏரியானது, மாகரல், சித்தலப்பாக்கம், பூனைதாங்கல், அரசாணிப்பாளையம் ஆகிய கிராமங்களின் நடுவில் அமைந்துள்ளது.[2] இதன் புவியியல் ஆயத்தொலைவுகள் அட்சரேகை: 12° 42'12.2” N; 12° 42'12.3” N; 12° 42'12.1” N மற்றும் தீர்க்கரேகை: 079° 44’34.0” E; 079° 44’34.0” E; 079° 44’26.8” E. பொதுவாக மாகரல் ஏரி என்று அழைக்கப்படும் இது, ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி அல்ல, மேலும் இந்த நீர்த்தடம் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.[1]

தளத்தின் பண்புகள்

[தொகு]

புவியிடங்காட்டியின் (GPS) ஆயத்தொலைவுகளின் அடிப்படையில், மாகறல் ஏரியின் பரப்பளவு, சுமார் 105 எக்டேர் (259.461 ஏக்கர்) என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஈரநிலம், பருவகால இடைப்பட்ட ஏரி என்ற துணைப்பிரிவில் உள்ள இயற்கை (உள்நாட்டு) வகையைச் சேர்ந்தது. இரண்டாம் நிலைத் தகவல்களின் அடிப்படையில், இந்த நீர்த்தடத்தின் சராசரி ஆழம் 1 மீட்டர் (3.281 அடி) ஆகும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 67 முதல் 69 மீட்டர் வரை உள்ளதாக அறியப்பட்டுள்ளது.[1]

நீர் நிலவரங்கள்

[தொகு]

இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரம் மழைப்பொழிவு, சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வழிந்து வரும் நீர் மற்றும் செய்யாறு ஆற்றிலிருந்து வரும் நேரடி நீர்வரத்து ஆகும். இந்த ஏரியில் உள்ள நீர் பெரும்பாலும் இடைப்பட்ட தன்மையுடையது எனவும், இந்த ஏரியில் இருந்து செல்லும் நீர், சுற்றியுள்ள வேளாண் நிலங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும், மேலும் இந்த நீர் அப்பகுதியின் நிலத்தடி நீரை உயர்த்த உதவுவதாகவும் கருதப்படுகிறது. இந்த ஏரியில் அடர்ந்த நீர் வாழ்த் தாவரங்களால் மூடப்பட்டிருப்பதால், நீரையும் மண்ணையும் சேகரிக்க முடியவில்லை எனவும், இந்த ஏரிக்கு செய்யாறு ஆற்றிலிருந்து நீர் வருவதால், இதில் நன்னீர் உள்ளது, ஆனால் நீர்நிலையை அணுக முடியாததால் ஏரியில் உள்ள நீர் மதிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த ஏரியில் மிதக்கும், நீரில் மூழ்கிய மற்றும் நீரில் இருந்து வெளிவரும் தாவரங்களால் மூடப்பட்டிருந்ததால், இது ஊட்டச்சத்து செறிந்ததாக (Eutrophic) காணப்பவதாகவும், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வரும் வீட்டுக் கழிவுநீர்கள் இந்த ஏரியில் கலப்பதாகவும் கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Criteria for wetland prioritization and frame work for wetland monitoring in the state of Tamil Nadu - Uthiramerur Lake - Page: 244" (PDF). tnswa.tn.gov.in (ஆங்கிலம்). 2022. Retrieved 2025-12-29.
  2. Magaral Lake
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகறல்_ஏரி&oldid=4432598" இலிருந்து மீள்விக்கப்பட்டது