உள்ளடக்கத்துக்குச் செல்

மகேல ஜயவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஹேல ஜயவர்த்தன இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகேல ஜயவர்தன
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தெனகமகே பிரபோத் மகேல டீ சில்வா ஜயவர்தன
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திம கதி
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 187)ஆகஸ்ட் 2 1997 எ. இந்தியா
கடைசித் தேர்வுடிசெம்பர் 26 2011 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 74)சனவரி 24 1998 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 20 2011 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்10
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 143 412 230 501
ஓட்டங்கள் 11,319 11,512 17,297 14,001
மட்டையாட்ட சராசரி 50.30 33.17 50.13 33.49
100கள்/50கள் 33/45 16/70 49/75 17/87
அதியுயர் ஓட்டம் 374 144 374 163*
வீசிய பந்துகள் 553 582 2,965 1,269
வீழ்த்தல்கள் 6 7 52 23
பந்துவீச்சு சராசரி 49.50 79.71 31.07 49.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/32 2/56 5/72 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
194/– 202/– 294/– 247/–
மூலம்: கிரிக் இன்ஃபோ, மார்ச் 22 2014

தெனகமகே பிரபாத் மகேல தி சில்வா ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன (Denagamage Praboth Mahela de Silva Jayawardene (சிங்களம்: මහේල ජයවර්ධන;(பிறப்பு:மே 27, 1977), என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் அணியில் சிறப்பு மட்டையாளராக கருதப்படுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட இவையால் ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார்.[1] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 374 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வலதுகை மட்டையாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[2] தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மட்டையாளர்களின் மிகச் சிறந்த போட்டியாக இது கருதப்படுகிறது.[3]

1997 ஆம் ஆண்டில்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இலங்கையில் நடந்த தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 374 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்ப்பாட்ட அணியின் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் சற்றுக் குறைவாகவும், ஒருநாள் துடுப்பாட்டத்தில் 30 ஆகவும் உள்ளது. இலஙகைத் துடுப்பட்ட வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல்வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைவான சராசரியைப் பெற்றிருந்தாலும் சிறப்பான வீரராகவே கருதப்படுகிறார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்கு இலங்கை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மற்ற மூன்று வீரர்கள் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்சான் ஆவர். ராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை 3 ஆவது இலக்கிற்கு 5826 ஒட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர். இந்தச் சாதனையை காலி பன்னாட்டு அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இவரும் சகவீரரான குமார் சங்கக்காராவும் இணைந்து 5890 ஒட்டஙகள் எடுத்து தகர்த்தனர். இந்த மைதானத்தில் இவர் விளையாடிய இறுதிப் போட்டி இதுவாகும். இந்த இணையின் 222 ஓட்டங்களில் ஜயவர்தனே 56 ஓட்டங்கள் எடுத்தார்.

2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 ,2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்

2006 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட இவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தலைவராக இவரைத் தேர்வு செய்தத்கு. மேலும் 2007 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட இவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் வீரர்களை ரன் இவுட் இ செய்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[4]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஜெயவர்தன 1977 ல் கொழும்பில் சுனிலா மற்றும் செனரத் ஜெயவர்தன ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு திஷால் எனும் ஒரு தம்பி இருந்தார். இவர் மூளைக் கட்டியால் 16 ஆவது வயதில் இறந்தார்.இது ஜயவர்த்தனை உளவியல் ரீதியாக பாதித்தது. இதனால் இவர் சில காலம் துடுப்பட்டம் விளையாடாமல் இருந்தார்.பயண ஆலோசகரான கிறிஸ்டினா மல்லிகா சிறிசேனாவை, ஜெயவர்தன திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சான்சா ஆர்யா ஜெயவர்தன எனும் ஒர் மகள் உள்ளார்.[5]

சேவைகள்

[தொகு]

களத்தில் இருந்து, இவர் ஹோப் புற்றுநோய் திட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் பங்களிப்பு செய்ததற்காக பாராட்டுகளை பெற்றுள்ளார்.[6] இறந்த தனது சகோதரரின் நினைவுகளை மனதில் கொண்டு, இவர் ஹோப்பின் முன்னணி பிரச்சாரகரானார்.[7] இப்போது, இவரது அணியினர் ஆதரவுடன், மகரகமவில் 750-படுக்கை கொண்ட புற்றுநோய் மருத்துவமனை ஒன்றினை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். 2011 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் துடுப்பாட்டச் சுற்றுப்பயணங்கள் காரணமாக, இவர் நடைப்பயணத்தில் பங்கேற்க முடியவில்லை.இதில் 30,000 பேர் பங்களித்தனர்.யாழ்ப்பாணத்தில் 120 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை அரசு கட்டுகிறது.[8] 2016 ஆம் ஆண்டில், சங்ககராவுடன் ஜெயவர்தன ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு பணம் திரட்டுவதற்காக டிரெயில் அஸ் ஒன் என்ற தொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கினார், இது 2011 க்குப் பிறகு இரண்டாவது கட்டமாக இருந்தது. இந்த நடை 6 அக்டோபர் 2016 அன்று பருத்தித்துறையில் தொடங்கி 2 நவம்பர் 2016 அன்று டோண்ட்ரா ஹெட் என்ற இடத்தில் முடிந்தது, இது 28 நாட்கள் 670 கிலோமீட்டர் நடைப்பயணமாக இருந்தது.[9] பல முன்னாள் மற்றும் தற்போதைய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் இந்த நடைப்பயணத்தில் இணைந்தனர். இந்த பயணம் மூலம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியாகப் பெற்றனர்.[8][10] காலியில் உள்ள கராபிட்டி போதனா மருத்துவமனை புற்றுநோயியல் பிரிவை விரிவுபடுத்துவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது.[11]

பயிற்சியாளராக

[தொகு]

ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில், இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் மட்டையாட்ட ஆலோசகராக ஜெயவர்த்தனை இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியம் நியமித்தது. இவர் இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டார், இவர் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்த இங்கிலாந்து பயிற்சி அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இவர் இந்தப் பொறுப்பில் இந்தியாவில் நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபதுக்கு 20 தொடர் வரை பயிற்சியாளராக இருந்தார்.[12]

2017 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 10 வது பதிப்பிற்கு ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மகேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டார்.[13] ராஜீவ் காந்தி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஹைதெராபாத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்சு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லாவுக்கு பதிலாக இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் கில் குல்னா டைட்டன்ஸ் நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளராக 26 மே 2017 அன்று நியமிக்கப்பட்டார். இப்போது இவர் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.[14][15]

சான்றுகள்

[தொகு]
  1. Basevi, Trevor (2005-11-08). "Statistics - Run outs in ODIs". பார்க்கப்பட்ட நாள் 2007-02-05.
  2. [1] highest test score by a right handed batsman
  3. Tracking the misses, Charles Davies, thecricketmonthly.com
  4. Basevi, Travis (8 November 2005). "Statistics – Run outs in ODIs". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2007-02-05.
  5. . 
  6. "Hope".
  7. "Project Hope for Ovarian Cancer - Home". Project Hope for Ovarian Cancer - Home.
  8. 8.0 8.1 "Walking harder than scoring runs for Mahela". The Sunday Times. 30 October 2016.
  9. "Karapitiya Cancer Hospital Foundation Laying Ceremony". Gossip Lanka Hot News. 1 November 2016.
  10. "Big Hug For Mahela". Asian Mirror. 7 October 2016. Archived from the original on 3 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 3 ஜனவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  11. "A 670 km walk commences for expansion of Karapitiya Hospital Oncology Unit". News First. 6 October 2016. Archived from the original on 10 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 3 ஜனவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  12. DOBELL, GEORGE (4 August 2015). "Jayawardene to join England as consultant". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.
  13. "Jayawardene to coach Mumbai Indians". ESPNcricinfo. 4 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  14. mi9cjHqLkv4A5yFA6pfxnN.html "Mahela Jayawardene named coach of Bangladesh Premier League side Khulna Titans". {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Jayawardene to coach Khulna Titans".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேல_ஜயவர்தன&oldid=3602643" இலிருந்து மீள்விக்கப்பட்டது