மஹுவா மொய்த்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஹுவா மொய்த்ரா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் தபாஸ் பவுல்
தொகுதி கிருஷ்ணா நகர்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016 – 23 மே 2019
முன்னவர் சமரேந்திரநாத் கோஷ்
தொகுதி கரீம்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 5 மே 1975
இந்தியாஇந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பணி அரசியல்வாதி

மஹுவா மொய்த்ரா (பிறப்பு: 5, 1975 ) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணநகரில் இருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி வேட்பாளராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மொய்த்ரா 2016 முதல் 2019 வரை கரிம்பூருக்கான மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார், [2] கடந்த சில ஆண்டுகளாக திரிணாமூல் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு வங்கியாளராக பணியாற்றினார். [3]

கல்வி[தொகு]

மொய்த்ரா தன் பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் முடித்தார். பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்சின், சவுத் ஹாட்லியில் உள்ள மவுண்ட் ஹோல்யோக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார். [4]

தொழில்[தொகு]

மொய்த்ரா நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராக பணியாற்றினார். இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009 இல் லண்டனில் உள்ள ஜே.பி மோர்கன் சேஸ் வங்கயில் தான் வகித்த துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். [5] அதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசில் இணைந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கைப் பெற்ற பேசாசாளராக விளங்கினார். 'காங்கிரசின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரஸ் பொதுமக்களின் சிப்பாய்' என்ற முழக்கத்தை வங்க இளைஞர்களிடம் பிரபலமாக்கினார். பின்னர் உட்கட்சிப் பூசலால் 2010 இல், இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [5] மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கரிம்பூர் தொகுதியில் இருந்து 2016 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] [7]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹுவா_மொய்த்ரா&oldid=2917293" இருந்து மீள்விக்கப்பட்டது