மகிந்த ராசபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஹிந்த ராஜபக்ஷ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மகிந்த ராஜபக்ச
Mahinda Rajapaksa
Mahinda Rajapaksa.jpg
நிறைவேற்று அதிகாரம் கொண்ட 5வது இலங்கை சனாதிபதி
பதவியில்
19 நவம்பர் 2005 – 9 சனவரி 2015
பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன
முன்னவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பின்வந்தவர் மைத்திரிபால சிறிசேன
இலங்கைப் பிரதமர்
பதவியில்
6 ஏப்ரல் 2004 – 19 நவம்பர் 2005
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னவர் ரணில் விக்கிரமசிங்க
பின்வந்தவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
6 பெப்ரவரி 2002 – 2 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
மீன்பிடி மற்றும் கடற்தொழில் அமைச்சர்
பதவியில்
1997–2001
தொழில் அமைச்சர்
பதவியில்
1994–1997
அம்பாந்தோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
15 பெப்ரவரி 1989 – 19 நவம்பர் 2005
பெலியத்தை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
27 மே 1970 – 21 சூலை 1977
முன்னவர் டி. பி. அத்தப்பத்து
பின்வந்தவர் ரஞ்சித் அத்தப்பத்து
பொதுநலவாய நாடுகளின் 11வது தலைவர்
பதவியில்
15 நவம்பர் 2013 – 9 சனவரி 2015
தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
முன்னவர் டோனி அபோட்
தனிநபர் தகவல்
பிறப்பு பேர்சி மகிந்த ராஜபக்ச
18 நவம்பர் 1945 (1945-11-18) (அகவை 72)
வீரகட்டி, தெற்கு மாகாணம், இலங்கை
தேசியம் இலங்கையின் கொடிஇலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) சிராந்தி ராசபக்ச
பிள்ளைகள் நாமல்
யோசித்த
ரோகித்த
படித்த கல்வி நிறுவனங்கள் ரிச்மண்ட் கல்லூரி
நாலந்தா கல்லூரி, கொழும்பு
தேர்ஸ்டன் கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் அரசியல்வாதி, வழக்கறிஞர்
சமயம் தேரவாத பௌத்தம்[1]
இணையம் இணையதள,

பேர்சி மகேந்திர ராசபக்ச அல்லது சுருக்கமாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மஹிந்த ராஜபக்ச, பிறப்பு: நவம்பர் 18, 1945), இலங்கையின் ஆறாவது குடியரசுத் தலைவர். வழக்கறிஞரான இவர் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 2004, ஏப்ரல் 6 முதல் பிரதம மந்திரியாகவும் இருந்தவர். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று பதவியேற்றார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். சனவரி மாதம், 2015 ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி அடைந்தார்.[2].மேலும் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்து விட்டார்.[3] மீண்டும் 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4][5][6][7]

குடும்ப வாழ்க்கை[தொகு]

சிராந்தி ராசபக்ச இவரின் மனைவியாவார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கௌரவ விருதுகள்[தொகு]

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்[8] .

விமர்சனங்கள்[தொகு]

மனித உரிமை மீறல்கள்[தொகு]

இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

 • 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.[9]
 • 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிக்கையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[10]
 • 2006 ஏப்ரல் மாதம் எல்லையற்ற ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் யூலை 2005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.[11]
 • இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் [12] அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார்.[சான்று தேவை]
 • இவர் மீது போர்க்குற்றம் சம்பந்தமான வழக்கு ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்டது.[13][14]

ஆதாரங்கள்[தொகு]

 1. "Mahinda – The early years". President.gov.lk. பார்த்த நாள் 2012-09-28.
 2. http://www.slelections.gov.lk/presidential2015/AIVOT.html
 3. கட்சிப் பதவியிலிருந்து ராஜபட்ச விலகல்
 4. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 5. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 6. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
 7. "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
 8. கௌரவ விருதுகள்
 9. 3 சிங்கள ஊடகவியலாளர்கள் கடத்தல் தமிழ் நெட் அணுகப்பட்டது பெப்ரவரி 11, 2007 (ஆங்கிலத்தில்)
 10. "Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 2006-04-25. http://hrw.org/english/docs/2006/04/25/slanka13262.htm. பார்த்த நாள்: 2006-10-01. 
 11. "Tamilnet editor’s murder still unpunished after one year". எல்லைகளற்ற செய்தியாளர்கள். 2006-04-28. Archived from the original on 2006-08-22. http://web.archive.org/web/20060822091217/http://www.rsf.org/article.php3?id_article=17503. பார்த்த நாள்: 2006-10-01. 
 12. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, (ஆங்கிலத்தில்)
 13. http://www.tamilwin.com/show-RUmryFRZNbeo3.html
 14. http://www.colombotelegraph.com/index.php/war-crime-case-against-mahinda-rajapaksa-dismissed-by-us-court/

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
ரணில் விக்கிரமசிங்க
இலங்கை பிரதமர்
2004–2005
பின்னர்
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னர்
சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கை சனாதிபதி
2005–2015
பின்னர்
மைத்திரிபால சிறிசேன
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_ராசபக்ச&oldid=2472382" இருந்து மீள்விக்கப்பட்டது