மஹாந்த் பாலாக்நாத்
மஹாந்த் பாலக்நாத் Mahant Balaknath | |
---|---|
பாரளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | கரண் சிங் யாதவ் |
தொகுதி | ஆல்வார் |
8வது தலைமை/மஹாந் நாத சைவம் பிரிவு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 செப்டெம்பர் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஏப்ரல் 1984 கோஹ்கர்னா, பெஹ்ரோர், ராஜஸ்தான் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | சுபாசு யாதவ், ஊர்மிளா தேவி |
வாழிடம்(s) | ரோக்டாஹ், ஹரியானா, இந்தியா |
இணையத்தளம் | yogibalaknath |
மஹாந்த் பாலாக்நாத் (Mahant Balaknath) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தானின் ஆல்வார் மக்களவைத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் (பி.எம்.யூ) வேந்தராவார்.[1] இந்து மதத்தின் நாத சைவப் பிரிவின் 8வது தலைவர்/ மஹாந்த் ஆவார்.[2] 29 ஜூலை 2016 அன்று, யோகி ஆதித்யநாத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் கலந்து கொண்ட ஒரு விழாவில் மகந்த் சந்த்நாத் பாலாக்நாத்தை தனது வாரிசாக அறிவித்தார்.[3][4][5]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் சிறு வயதிலேயே குருமுக் என்று பாபா கெதநாத்தால் பெயரிட்டார்.[6] இவர் 1985 முதல் 1991 வரை (6 வயது வரை) மத்சியேந்திர மகாராஜ் ஆசிரமத்தில் வசித்து வந்தார். அதன் பிறகு மஹந்த் சந்த்நாத்துடன் அஸ்தால் போஹர் மடத்திற்குச் சென்றார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]மக்களவை உறுப்பின்ராக
[தொகு]ராஜஸ்தானின் ஆல்வாரில் இருந்து மக்களவைக்கான பாரதிய ஜனதா வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்ட இவர், 2019ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் பன்வர் ஜிதேந்திர சிங்கை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[7]
சட்டப் பேரரவை உறுப்பினராக
[தொகு]2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் திஜரா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் இமரான் கானை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். எனவே தனது மக்களவை உறுப்பினர் பதவியை துறந்தார். இவர் இராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்கும் போட்டியில் உள்ளார்.[8]
மேலும் காண்க
[தொகு]- மஹந்த் ஸ்ரேயநாத் ஆறாவது தலைவர் / நாத் பிரிவின் மஹந்த்.
- மஹந்த் சந்த்நாத் ஏழாவது தலைவர் / நாத் பிரிவின் மஹந்த்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 27 August 2018. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Cong expects tough contest in pampered constituency". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
- ↑ "महंत चांदनाथ ने तय किया अपना उत्तराधिकारी, मौजूद रहे बाबा रामदेव". अमर उजाला. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
- ↑ "Baba Mast Nath Matth gets New Mahant". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
- ↑ https://www.tribuneindia.com/news/haryana/alwar-mp-dies-three-cms-attend-samadhi-ceremony/468647.html
- ↑ https://www.patrika.com/alwar-news/mahant-balaknath-yogi-history-alwar-loksabha-seat-candidate-balaknath-4354321/
- ↑ https://www.india.com/hindi-news/lok-sabha-elections-2019-india/bjp-announces-candidates-for-lok-sabha-seats-in-rajasthan-mahant-balak-nath-will-contest-from-alwar/amp/#referrer=https://www.google.com&_tf=From%20%251%24s
- ↑ Mahant Balak Nath Yogi: All you need to know about BJP candidate from Rajasthan's Tijara constituency