உள்ளடக்கத்துக்குச் செல்

மஸ்துங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஸ்துங் மாவட்டம்
ضلع مستونگ
مستونگ دمگ
மாவட்டம்
மேல்:தஸ்த் அருகே மலைகள்
கீழ்:கோஹி சில்தான் மலைகள்
பலூசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் மாவட்டம்
பலூசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் மாவட்டம்
ஆள்கூறுகள்: 29°48′N 66°51′E / 29.80°N 66.85°E / 29.80; 66.85
நாடு பாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
கோட்டம்கலாத்
நிறுவப்பட்ட ஆண்டு1991
தலைமையிடம்மஸ்துங்
வருவாய் வட்டங்கள்04
அரசு
  வகைமாவட்ட நிர்வாகி
  நாடாளுமன்றத் தொகுதிNA-261 Surab-cum-Kalat-cum-Mastung
பரப்பளவு
  மாவட்டம்5,896 km2 (2,276 sq mi)
ஏற்றம்
1,701 m (5,581 ft)
மக்கள்தொகை
  மாவட்டம்3,13,271
  அடர்த்தி53/km2 (140/sq mi)
  நகர்ப்புறம்
40,374 (12.89%)
  நாட்டுப்புறம்
2,72,897 (87.11%)
எழுத்தறிவு
  சராசரி எழுத்தறிவு45.97%
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
88200
தொலைபேசி குறியீடு எண்843
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK

மஸ்துங் மாவட்டம் (Mastung District), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் மஸ்துங் நகரம் ஆகும். மஸ்துங் நகரம், குவெட்டாவிற்கு தென்மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

மஸ்துங் மாவட்டத்திற்கு வடக்கே குவெட்டா மாவட்டம், தெற்கே கலாத் மாவட்டம், கிழக்கே கட்சி மாவட்டம், தென்மேற்கே நுஸ்கி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

மஸ்துங் மாவட்டம் தஸ்த் மஸ்துங் வட்டம், மஸ்துங் வட்டம், காத் கூச்சா வட்டம் மற்றும் கர்திகேப் வட்டம் என 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,695 குடியிருப்புகள் கொண்ட மஸ்துங் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,13,271 ஆகும். பாலின விகிதம் 113.70 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 45.97% ஆகும்.[4][5]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,09,539 (35.07%) ஆக உள்ளனர்.[6] 40,374 (12.89%) மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[4] சமயச் சிறுபான்மையோர் 1,696 (0.54%) ஆக உள்ளனர்.

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பிராகுயி மொழியை 89.05% பேரும், பலூச்சி மொழியை 7.19% பேரும், பஷ்தூ மொழியை 2.12% பேரும், பிற மொழிகளை 1.64% பேரும் பேசுகின்றனர்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  3. "Tehsils & Unions in the District of Mastung". National Reconstruction Bureau - Government of Pakistan website. 2012-02-09. Archived from the original on 9 February 2012. Retrieved 28 March 2023.
  4. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்துங்_மாவட்டம்&oldid=4303351" இலிருந்து மீள்விக்கப்பட்டது