மவ்லவி நசீர் அகமது டெஹ்லவி
மௌல்வி டெபுடி நசீர் அகமது | |
|---|---|
டெபுடி நசீர் அகமது | |
| பிறப்பு | 6 டிசம்பர் 1833 ரேஹார், பிஜ்னோர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| இறப்பு | 3 மே 1912 டெல்லி, இந்தியா |
| அடக்கத்தலம் | ஷா பாகி பில்லா கல்லறைத் தோட்டம், புது தில்லி ரயில் நிலையத்திற்கு அருகில்[1] |
| புனைபெயர் | டெபுடி நசீர் அகமது |
| தொழில் | நாவலாசிரியர் |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி நிலையம் | ஜாகிர் உசேன் டெல்லி கல்லூரி (டெல்லி கல்லூரி) |
| காலம் | முகலாயக் காலம், பிரித்தானிய இந்தியா |
மவ்லவி நசீர் அகமது டெஹ்லவி (Nazir Ahmad Dehlvi) (6 டிசம்பர் 1833 – 3 மே 1912), டெபுடி நசீர் அகமது என்றும் அறியப்படுபவர், ஓர் உருது நாவலாசிரியர், சமூக மற்றும் மத சீர்திருத்தவாதி மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் சட்டம், தர்க்கம், அறவியல் மற்றும் மொழியியல் போன்ற தலைப்புகளில் 30-க்கும் மேற்பட்ட நூல்களையும்,[2]மிராதுல் உரூஸ், தௌபதுன் நஸூஹ் மற்றும் இப்னுல் வக்த் போன்ற நாவல்களையும் எழுதினார். மேலும், இவர் குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் வளர்ப்பு
[தொகு]நசீர் அகமது 1831-ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னார் மாவட்டத்தில் உள்ள ரேஹார் எனும் இடத்தில் அறிஞர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சாஅதத் அலி கான் ஒரு மதரஸாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஒன்பது வயது வரை, இவர் வீட்டிலேயே பாரசீக மற்றும் அரபு மொழிகளைக் கற்றுக்கொண்டார். பின்னர், பிஜ்னார் துணை ஆட்சியரான நஸ்ருல்லா சாஹேபின் வழிகாட்டுதலின் கீழ் ஐந்து ஆண்டுகள் அரபு இலக்கணத்தைக் கற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mujib, Mumtaz Fakhira, ed. (2012–2013). "Diputy Nazeer Ahmad Number". Fikr-e-Nau (in உருது). புது தில்லி: ஜாகிர் உசேன் டெல்லி கல்லூரி. p. 213.
- ↑ Khan, Mofakhkhar Hussain (2001). The Holy Qur'ãn in South Asia: A bio-bibliographic study of translations of the Holy Qurʼãn in 23 South Asian languages. Bibi Akhtar Prakasani. p. 272.
- ↑ Abbas, Qamar & Ahmad, Dr. Farooq & Qamar, Dua & Abbas, Mujahid & Zia, Ghazala & Abbas, Zafar. Life and Work of Deputy Nazir Ahmed: The First Novelist of Urdu. (2017) p. 214-219