மவுரீன் இராய்மோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மவுரீன் இராய்மோ
Climate Crisis and Response, Maureen Raymo, 7m16s.jpg
பிறப்பு27 திசம்பர் 1959 (அகவை 62)
லாஸ் ஏஞ்சலஸ்
படித்த இடங்கள்பிரௌன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Wollaston Medal, Guggenheim Fellowship
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்தொல் புவி தட்பவெப்ப நிலையியல்
நிறுவனங்கள்

மவுரீன் இ. இராய்மோ (Maureen E. Raymo) ஓர் அமெரிக்கத் தொல் புவி தட்பவெப்ப நிலையியலாளரும் கடல்சார் புவியியலாளரும் ஆவார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

மவுரீன் இராய்மோ ஓர் இலாமண்ட் ஆய்வுப் பேராசிரியர். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இலாமண்ட்-டெகெர்டி புவிக் காணகத்தில் இயக்குநராக இருந்தார்.மேலும், அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்திலும் அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க்க் கழகத்திலும் ஆய்வுறுப்பினர் ஆவார். ராய்மோ அறிவ்யல் பணிகளுக்காகப் பல பரிசுகலைப் பெற்றுள்ளார். இவர் 2014இல் வொல்லாசுட்டன் பதக்கத்தைப் பெற்ற முதல் பெண்மணியும் ஆவார். இது இலண்டன் புவி இயற்பியல் கழகம் தரும் மிக உயர்ந்த விருதாகும்.[1][2] பிறகு 2014இல் இவர் புவி வேதியியல், புவியியல், புவி இயற்பியல் அறிவைப் பயன்படுத்தித் தொல் காலநிலையியலில் பெருஞ்சிக்கல்களைத் தீர்த்ததற்காக ஐரோப்பியப் புவி அறியல் புலங்கள் ஒன்றியம்இவருக்கு மிலூதின் மிலங்கோவிச் பதக்கத்தை அளித்தது.[3] In 2002, she was included by the illustrated magazine Discover அதன் 2002ஆம் ஆண்டு நவம்பர்மாதப் பதிப்பில் 40 மீலியன் ஆண்டு காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்ததற்காக இவரை 50 அரிய பெண் அறிவிய்லாளர் பட்டியலில் சேர்த்துப் பாராட்டியது [4][5] வொல்லாசுட்டன் பதக்கத்துக்காக இவரைப் பரிந்துரைத்த பேராசிரியர் ஜேம்சு சுகோர்சு ". கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெருந் தாக்கம் விளைவித்தவர்களில் ஒருவர் என்றும் ..மிகமேல்நிலைக்கு உயர விரும்பும் பெண் ஆளுமைகளுக்குச் சிறந்த முற்காட்டுப் பங்களிப்பாளர் என்றும் புகழ்ந்துள்ளார்".[2]

இராய்மோ மேலெழுச்சி வானிலைச் சிதர்வுக் கருதுகோளை வில்லியம் ருடிமன், பிலிப்பு ஃபுரோலிச் ஆகிய இருவருடன் இணைந்து உருவாக்கியதற்காகப் பெயர்பெற்றவர். இந்தக் கருதுகோளின்படி, திபெத்திய சமவெளி போன்ற கண்ட்த் திட்டு மேலெழுச்சி மேர்பரப்புக் குளிர்ச்சியை உருவக்குகிரது.. மலைத்தொடர்கள் உருவாகும்போது மேற்பரப்பில் உள்ள பல கனிமங்கள் வளிமண்டலக் காற்றில் உள்ள கரியமில வளிமத்துடன் வினைபுரிந்து இந்நிகழ்வில் வேதிச் சிதர்வு ஏற்பட்டு வளிமண்டலத்தில் இருந்து கரிம ஓர்வளிமம் CO2 நீக்கப்படுகிறது. இதனால் தரைமட்ட வெப்பநிலை குறைகிறது. இவரும் இவரது குழுவினரும் முதலில் ஆழ்கடல் படிவுகளில் உள்ள சுட்டிரான்சியம் ஓரகத் தனிம விகிதங்களை அளந்து மேலெழுச்சி வானிலைச் சிதர்வுக் கருதுகோளை நிறுவ முயன்றனர். ஆனால் விரைவில் கடலடி சுட்டிரான்சியம் நிலவலில் உள்ள ஐய நிலைகளை உணரலாயினர். இருபது ஆண்டுகட்குப் பிறகும் இன்னமும் இந்தக் கருதுகோள் ஆய்விலும் தொடர்ந்த விவாத்த்திலும் உள்ளது.

இவர் பலதுறைப் பயன்பாட்டு ஆய்வுக்காகவும் பெயர்பெற்றவர்.

இராய்மோவின் நடப்பு ஆய்வுத் திட்டங்களை http://moraymo.us/projects/ எனும் இணையத்தளத்தில் பார்க்கலாம்.

LR04 stack.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுரீன்_இராய்மோ&oldid=2734307" இருந்து மீள்விக்கப்பட்டது