மவுரா மெக்லாப்ளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மவுரா மெக்லாப்ளின் (Maura McLaughlin) இப்போது மேற்கு வர்ஜீனியா, மார்கன்டவுனில் உள்ள மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையின் பேராசிரியராக உள்ளார். இவர் இளம் அறிவியல் பட்டத்தைப் பென்சில்வேனியா அரசு பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[1] இவர் ஈர்ப்பு அலை ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் துடிமீன்கள் தேட்ட கூட்டுறவு ஆய்வுக் கடப்பாட்டுக்காகவும் பெயர்பெற்றார்.[2]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் பென்சில்வேனியா, ஆர்லாந்தில் வளர்ந்தார்.[3]

இவர் 1994 இல் வானியலிலும் வானியற்பியலிலும் இளம் அறிவியல் பட்டத்தைப் பென்சில்வேனியா அரசு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் 2001இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலிலும் விண்வெளி அறிவியலிலும் பெற்றார். இவர் இப்போது மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியல், இயற்பியல் துறைப் பேராசிரியராக உள்ளார்.[4] இவர் மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியராகவுள்ள தங்கன் உலோரிமரை மணந்தார், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு.[2]

பணிகள்[தொகு]

இவர் ஈர்ப்பு அலைக் கூட்டுறவுக்கான மீநுண்ணலை வான்காணகத்தின் தலைவராக உள்ளார். இந்தக் குழுவுக்குத் தேசிய அறிவியல் அறக்கட்டளை 6.5 மில்லியன் டாலர்களைப் பன்னாட்டு ஆராய்ச்சி, கல்வித் திட்டக் கூட்டுறவின்கீழ் நல்கியுள்ளதுஈது இப்போது தேசிய அறிவியல் அறக்கட்டளை இயற்பியல் முன்னணி மையமாக விளங்குகிறது.[5] இரட்டைத் துடிமீன் அமைப்பைக் கண்டுபிடிப்பிலும் பல புதிய துடிமீன்களின் கண்டுபிடிப்பிலும் முதன்மையானவர் ஆவார்.[4] இவர் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள கிரீன்பாங்கில் அமைந்த துடிமீன் தேட்ட கூட்டுறவு அமைப்பில் தன் நேரத்தைச் செலவிடுகிறார். இந்த அமைப்பு உயர்நிலைப் பள்ளி மாணவர்களை தேசிய கதிர்வானியல் வான்காணகத்துடன் இணைத்து புதிய தகவல்களைக் கண்டுபிடிக்கவும் துடிமீன்களை கண்டறியவும் ஈடுபடுத்துகிறது.[2]

இவர் கிரீன் பாங்கு தொலைநோக்கியையும் அரேசிபோ வான்காணகத்தைப் பயன்கொண்டு துடிவிண்மீன்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.

விருதுகள்[தொகு]

  • காட்டிரெல் அறிஞர் விருது
  • ஆல்பிரெடு பி. சுலோவான் ஆய்வுறுப்பினர்
  • பன்னாட்டு ஆராய்ச்சி, கல்விக் கூட்டுறவுத் திட்ட விருது[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுரா_மெக்லாப்ளின்&oldid=2716080" இருந்து மீள்விக்கப்பட்டது