மவுண்ட் டார்வின், சிம்பாப்வே
மவுண்ட் டார்வின் சிம்பாப்வே மஷோனலண்ட் மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
அமைவிடம்
[தொகு]இந்த நகரம் மவுண்ட் டார்வின் மாவட்டத்தில், வடக்கு-கிழக்கு ஜிம்பாப்வே மஷோனலண்ட் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.
கண்ணோட்டம்
[தொகு]மவுண்ட் டார்வின், டவுன் கவுன்சிலின் அலுவலகங்களுக்கும் கூடுதலாக, டவுன் மவுண்ட் டார்வின் மாவட்ட நிர்வாகத்தின் இருப்பிடமும் இந்நகரில் உள்ளது. இந்த நகரம் ஒரு பொது மருத்துவமனையையும், டார்வின் மாவட்ட வைத்தியசாலையையும், ஒரு பொது நோயாளி மருத்துவமனையும் , கரந்த மிஷன் மருத்துவமனையையும் கொண்டுள்ளது.ஒரு நாளைக்கு கரந்த மிஷன் மருத்துவமனை 10 முதல் 20 அறுவை சிகிச்சைகள் மற்றும் தினசரி 200 மற்றும் 300 புற நோயாளிகளுக்கு சிகிச்சை சேவையினை புரிகிறது. இந்நகரில் ZB வங்கி லிமிடெட் உம் , மேலும் ஒரு வணிக வங்கி, இந்நகரத்தில் தனது ஒரு கிளையை பராமரிக்கிறது. மவுண்ட் டார்வின் மோர்ன் டார்வின் விமான நிலையமும் சேவையும் உள்ளது.
வரலாறு
[தொகு]போர்த்துகீசிய ஜெசுட் கோன்சோ டா சில்வேரா 1560 ஆம் ஆண்டில் இங்கு வருகை புரிந்த முதல் ஐரோப்பியர் ஆவர். இவர் தென் ஆப்பிரிக்காவின் ஆரம்பகால ஐரோப்பிய மிஷனரிகளை தொடங்கினார். அதனால் டார்வின் மலைத்தொடர்களில் , டார்வின் மவுண்ட் அருகே 1561 ல் கொல்லப்பட்டார். வேட்டைக்காரர் மற்றும் ஆராய்ச்சியாளரான பிரண்டெரிக் கர்ட்னி ஸலஸ் என்பவர் பிரித்தானிய இயற்கை அறிஞரான சார்லஸ் டார்வின் நினைவாக இந்நகருக்கு டார்வின் மவுண்ட் என பெயரிட்டார்.[சான்று தேவை]
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Mount Darwin, Zimbabwe (1961–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.3 (82.9) |
27.9 (82.2) |
28.0 (82.4) |
27.6 (81.7) |
26.1 (79) |
24.0 (75.2) |
23.8 (74.8) |
26.2 (79.2) |
29.3 (84.7) |
31.5 (88.7) |
30.7 (87.3) |
28.8 (83.8) |
27.7 (81.9) |
தாழ் சராசரி °C (°F) | 18.5 (65.3) |
18.4 (65.1) |
17.1 (62.8) |
14.3 (57.7) |
9.8 (49.6) |
6.6 (43.9) |
6.1 (43) |
8.1 (46.6) |
12.5 (54.5) |
16.7 (62.1) |
18.4 (65.1) |
18.5 (65.3) |
13.8 (56.8) |
மழைப்பொழிவுmm (inches) | 219.0 (8.622) |
185.9 (7.319) |
86.7 (3.413) |
28.9 (1.138) |
5.2 (0.205) |
0.9 (0.035) |
1.2 (0.047) |
0.5 (0.02) |
1.4 (0.055) |
10.3 (0.406) |
64.2 (2.528) |
183.4 (7.22) |
787.6 (31.008) |
சராசரி மழை நாட்கள் | 16 | 14 | 7 | 2 | 1 | 0 | 0 | 0 | 0 | 1 | 7 | 14 | 62 |
ஆதாரம்: World Meteorological Organization[1] |
மக்கள்தொகை
[தொகு]டார்வினின் தற்போதைய மக்கள்தொகை பகிரங்கமாக அறியப்படவில்லை.
2004 ஆம் ஆண்டில், நகரத்தின் மக்கள்தொகை 6,350 என மதிப்பிடப்பட்டது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]பின்வரும் குறிப்பிடத்தக்க நபர்கள் டார்வின் மவுண்டுடன் தொடர்புபட்டுள்ளனர்:
1.ஜாய்ஸ் முஜூரு - ஒரு அரசியல்வாதி; இவர் இங்கே பிறந்தார்.
- கூகுள் வரைபடம்
குறிப்புகள்
[தொகு]- ↑ "World Weather Information Service – Mount Darwin". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.