மழைநீர் பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மழைநீர் பாதுகாப்பு மழைநீர் பாதுகாப்பு என்பது நம் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு சமம்.

நமது கடமை:[தொகு]

நீரின் முக்கியத்தை அறியாதோர், தாயின் முக்கியத்தை அறியாதவரே. நாம் நீரின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தும், அதை பாதுகாப்பதில் அலட்சியத்தை தொடர்கிறோம். மக்களான நாம் நமது எல்லா தேவைகளையுமே அரசாங்கமே பூர்த்தி செய்ய வேண்டும், என எண்ணுதல் கூடாது. நம்மால் முடிந்ததை நாமே செய்து கொள்ள வேண்டும்.

மழைநீர் வீணாதல்:[தொகு]

மழைநீர் சேகரிப்பை பற்றிய செய்திகளை நாம் பல வழிகளில் அறிந்து வைத்துள்ளோம்ஆனால் நாமஇட்ட்டுந்தேஜ் அனைவரும் அதை செயல்படுத்துகிறோமா? மழை பொய்க்கும் காலங்களில் நிலத்தடி நீரை நம்பி வாழ்கிறோம். ஆனால் அந்த நிலத்திற்கும் சொந்தமான மழைநீரை, நாம் நிலத்தில் சேர்பதில்லை. மாறாக புனிதமான மழைநீரை, சாக்கடைகளில் சேர்த்து வீணாக்கிவிடுகிறோம். நாகரீக வாழ்க்கையில், நாம் மண் சாலைகளில் இருந்து தார்சாலைக்கும், சிமென்ட் சாலைக்கும் வந்து விட்டோம். தண்ணீர் சாலைகளில் தேங்குவதில்லை. அதே சமயம், நிலத்திற்கு உள்ளேயும் செல்வதில்லை. வீணாக சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை தண்ணீர் பஞ்சம் வரும் காலங்களில் தான் நாம் உணர்கிறேம். இதற்கெல்லாம் நல்ல தீர்வு, மழைநீர் சேகரிப்பே ஆகும். மழை நீர் நமது உயிர் ஆகும்.

மழைநீரும் நிலத்தடி நீரும்:[தொகு]

அக்காலங்களில் குளங்கள் வெட்ட பட்டதன் காரணம், ஆற்றுநீரையும், மழை நீரையும் தேக்கிவைக்கத்தான். இதனா‌ல் நிலத்தடி நீரின் அளவும் நல்ல நிலையில் இருந்தது. வீட்டு கூரையின் மேல் பெய்யும் மழைநீர் மட்டுமல்லாமல், தெருக்களிலும், பொது இடங்களிலும் கிடைக்கும் மழை நீரை, குளங்களில் சேர்க்க வேண்டும். அல்லது பாதுகாப்பான கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றில் சேர்க்க வேண்டும்.

மகாமகக்குளம்:[தொகு]

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் வற்றி பாலைவனமாக காட்சி அளிப்பது[1]</ref>, எவ்வளவு பெரிய வறட்சியை காட்டுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதன் நான்கு கரைகளில் வாழும் மக்கள், தங்களது வீட்டு மழை நீரை மகாமக குளத்தில் வந்து சேரும் வண்ணம், செய்ய வேண்டும். இதே போல கரைகளில் விழும் மழைநீரும் குளத்தில் வந்து சேரும் வண்ணம் சாலைகளை அமைக்க வேண்டும். இதனால் குளத்தில் தண்ணீரும் தேங்கும். நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மழைநீர்_பாதுகாப்பு&oldid=2831104" இருந்து மீள்விக்கப்பட்டது