மழுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cephalopholis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மழுவன்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cephalopholis
இனம்: வார்ப்புரு:Taxonomy/CephalopholisC. sonnerati
இருசொற் பெயரீடு
Cephalopholis sonnerati
(Valenciennes, 1828)
வேறு பெயர்கள் [2][3]
  • Serranus sonnerati Valenciennes, 1828
  • Epinephelus sonnerati (Valenciennes, 1828)
  • Serranus zananella Valenciennes, 1828
  • Epinephelus janthinopterus Bleeker, 1873
  • Serranus unicolor Liénard, 1874
  • Epinephelus unicolor Bleeker, 1875
  • Cephalopholis purpureus Fourmanoir, 1966
"இலங்கை மற்றும் பர்மா உட்பட பிரித்தானிய இந்தியாவின் விலங்கினங்கள் ", 1889 இலிருந்து விளக்கம்
பசிபிக் பெருங்கடலில் காணப்படும் மீன் மாதிரி

மழுவன் அல்லது தக்காளி மீன் (Cephalopholis sonnerati) என்பது கடல் அக்டினோட்டெரிகீயை இன மீனாகும். இது செரானைடீ குடும்பத்தினைச் சார்ந்த, களவா துணைக்குடும்ப கடல் மீனாகும். இது வெப்பமண்டல இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மழுவன் 10 முதல் 150 மீட்டர் ஆழக் கடலில் காணப்படும். வளர்ந்த மீன்களின் முதுகுத்துடுப்பு வால் வரை நீண்டுள்ளது. முதுகுத் துடுப்பில் 9 முட்களும், 14-16 மென்மையான கதிர்களும் உள்ளன. குத துடுப்பில் 3 முட்களும், 9 மென்மையான கதிர்களும் உள்ளன.[3] வால் துடுப்பு வட்டமாக இருக்கும்.[4] இந்த மீனானது தக்காளிப் பழம்போல சிவப்பாக செக்கச் செவேலென்று இருக்கும். இதன் உடலில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும். இதன் வட்ட வடிவ வாலானது வெள்ளை விளிம்புடன் இருக்கும். இந்த இனம் அதிகபட்சமாக 57 சென்டிமீட்டர்கள் (22 அங்) வரை வளரக்கூடியது. [5] பசிபிக் பெருங்கடல் வாழும் மழுவன் மீன்களானது பொதுவாக வெளிர் சிவப்பு பழுப்பு நிறத்திலிருந்து மஞ்சள் பழுப்பு நிறத்தில் உடலைக் கொண்டுள்ளன. தலை, துடுப்புகள் மற்றும் உடலில் ஏராளமான அடர்பழுப்பு நிற புள்ளிகள் உள்ளன. [3]

பரவல்[தொகு]

மழுவன் மீன்கள் இந்தோ-பசிபிக் கடற் பகுதியில், கிழக்கு ஆபிரிக்காவின் கடற்கரையிலிருந்து ஏடன் வளைகுடாடவிலிருந்து தெற்கு ஆப்பிரிக்காவின் டர்பன் வரை நீண்டுள்ளது; பசிபிக் பெருங்கடலில் இருந்து கிழக்கு தீவு வரை, வடக்கு தெற்கு ஜப்பான் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா வரை காணப்படுகிறது. [1] ஆஸ்திரேலியாவில் இது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹூட்மேன் அப்ரோல்ஹோஸ் முதல் டார்வின், வடக்கு பிரதேசம் மற்றும் கேப் யோர்க் தீபகற்பம், குயின்ஸ்லாந்து முதல் தென்மேற்கு ராக்ஸ், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மான் கடலில் உள்ள லோர்ட் ஹாவ் தீவு வரை காணப்படுகிறது. [6] இது சாகோஸ் தீவு, செங்கடல் அல்லது பாரசீக வளைகுடாவில் காணப்படவில்லை. [1]

வாழ்விடம் மற்றும் உயிரியல்[தொகு]

மழுவன் மீன்களானது ஆழமான கடற்காயல் பாறைகள், பாறை சரிவுகள், கடலோரப் பகுதிகளில் உள்ளது. மீன் குஞ்சுகள் பொதுவாக பஞ்சுயிரி அல்லது பவள தலைகளுக்கு அருகில் காணப்படும். இவை பொதுவாக தனித்து வாழும் இனமாகும். பொதுவாக வளர்ந்த மீன்கள் தூய்மையாக்கி இறால்களுடன் நெருக்கம் பாராட்டும். அந்த இரால்கள் இருக்கும் இடத்தில் இவை இருக்கும். இவை 30 முதல் 100 மீ (98 முதல் 332 வரை) மிதமான ஆழத்தில் வாழ்கின்றன. இது சிறிய மீன்கள் மற்றும் ஓடுடைய கணுக்காலிகளை உணவாக கொள்கிறது. இவற்றில் ஆண் மீன்கள் ம 34 செ.மீ (13 அங்குலம்) பெண் மீன்கள் 28 செமீ (11 அங்குலம்) வரை வளர்கின்றன. [3]

வகைபிரித்தல்[தொகு]

மழுவன் மீனை முதன்முதலில் செரனஸ் சோனெராட்டி என்ற பிரஞ்சு விலங்கியல் வல்லுநரான அச்சில் வலென்சியென்னஸ் (1794-1864) என்பவரால் இந்திய துணைக்கண்டத்தின் புதுச்சேரியில் கண்டு வகைப்படுத்தப்பட்டது.

பயன்பாடு[தொகு]

இந்த இனம் வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இனமாகும். பொதுவாக இவை பிடிபடும் பகுதிகளில் உடனடியாக விற்கப்படுகிறது. மழுவன் மீனை கொக்கி மற்றும் வரிசை, ஈட்டி, மீன்பிடி பொறிகளைப் பயன்படுத்தி பிடிக்கப்படுகிறது. இது ஹாங்காங் நேரடி மீன் சந்தைகளில் கிடைக்கிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Sadovy, Y.; Leung Lap Boon, B. (2018). "Cephalopholis sonnerati". IUCN Red List of Threatened Species 2018: e.T132757A100457871. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T132757A100457871.en. https://www.iucnredlist.org/species/132757/100457871. பார்த்த நாள்: 10 September 2020. 
  2. வார்ப்புரு:Catalogue of Life
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 வார்ப்புரு:Fishbase
  4. Heemstra, P.C.; J.E. Randall (1993). FAO Species Catalogue. Vol. 16. Groupers of the world (family Serranidae, subfamily Epinephelinae). An annotated and illustrated catalogue of the grouper, rockcod, hind, coral grouper and lyretail species known to date. FAO Fish. Synopsis. 125. FAO, Rome. பக். 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-5-103125-8. http://www.fao.org/3/t0540e/t0540e09.pdf. 
  5. "Cephalopholis sonnerati – Tomato Cod". www.reeflifesurvey.com (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
  6. "Cephalopholis sonnerati". Fishes of Australia (in ஆங்கிலம்). Museums Victoria. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழுவன்&oldid=3457338" இலிருந்து மீள்விக்கப்பட்டது