மழபுல வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கணத்தில் மழபுல வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் வேந்தர், தாம் வெற்றி பெறும்போது தோல்வியுற்ற நாட்டின் செல்வங்களைக் கொள்ளை கொள்வர். இதனைப் பொருளாகக் கொண்டதே "மழபுல வஞ்சி" எனும் இத்துறை.

விளக்கப் பாடல்கள்[தொகு]

இதனை விளக்க, பகைவருடைய நாட்டை வென்ற வீரர் கொள்ளையிட்டு அவர்களது இல்லங்களில் வளம் இல்லை எனும்படி செய்வது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

கூடார்முனை கொள்ளைசாற்றி"
வீடுஅறக்கவர்ந்த வினைமொழிந்தன்று

இதனை விளக்கும் இலக்கணப் பாடல்

களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் - கொளல்மலிந்து
கண்ஆர் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளைஅலற நாடு (புறப்பொருள் வெண்பாமாலை 47)

இதனை விளக்கும் புறநானூற்று இலக்கியப் பாடல்கள் மூன்று. [2]

மேலும் காண்க[தொகு]

புறநானூறு, துறைவிளக்கம்

குறிப்பு[தொகு]

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 80, 81
  2. புறநானூறு 7, 16, 21
  3. புறநானூறு 7
  4. புறநானூறு 16
  5. புறநானூறு 21

உசாத்துணைகள்[தொகு]

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மழபுல_வஞ்சி&oldid=1885493" இருந்து மீள்விக்கப்பட்டது