மல கொழுப்பு சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவத்தில், மல கொழுப்பு சோதனை (Fecal fat test) என்பது கொழுப்பு செரிமானத்தின் பின் உறிஞ்சப்படுவதில் குறை உள்ளதா எனக் கண்டறியும் சோதனையாகும். இத்தகைய குறைபாட்டினால் மலத்தில் கொழுப்புக்கு அதிகமாகக் காணப்படும் (கொழுப்புமலபேதி).

பின்னணி[தொகு]

முன்சிறுகுடலில், உணவு கொழுப்பானது (முதன்மையாக ட்ரைகிளிசரைடுகள் ) கணைய லைபேசு போன்ற நொதிகளால் 1,2-டைஅசைல்கிளிசெரால் மற்றும் தனித்த கொழுப்பு அமிலங்களின் சிறிய மூலக்கூறுகளாகச் செரிக்கப்படுகின்றன. இவை சிறுகுடலின் நடுப்பகுதியின் சுவர் வழியாக உறிஞ்சப்படுகின்றன.[1] உறிஞ்சப்பட்ட கொழுப்பானது வளர்சிதை மாற்றச் சுழற்சியிலும் மற்றும் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கவும் படுகிறது. கொழுப்பு மதிப்புமிக்க ஊட்டச்சத்து என்பதால், மனித மலத்தில் பொதுவாகச் செரிக்கப்படாத கொழுப்பு மிகக் குறைந்த அளவே காணப்படும். இருப்பினும், கணையம் மற்றும் இரைப்பைக் குழாயில் ஏற்படும் நோய்கள் காரணமாகக் கொழுப்பு உறிஞ்சப்படுவது தடைப்படுகிறது.

கீழ்க்கண்ட நோய்கள் கொழுப்பு உறிஞ்சப்படுவதைப் பாதிக்கின்றன:[2]

  • நாள்பட்ட கணைய அழற்சி, சிஸ்டிக் பைப்ரோசிசு மற்றும் ஸ்வாச்மேன்-டயமண்ட் சிண்ட்ரோம் போன்ற நாளமில்லாச் சுரப்பியான, கணைய செயல்பாட்டின் கோளாறுகள் (இதனால் கணைய செரிமான நொதிகளின் குறைபாடு ஏற்படுகிறது
  • குளூட்டன் ஒவ்வாமை (சிறு குடல் புறணி அழற்சியினால் சேதமடைவதால் கொழுப்பு உறிஞ்சப்படுவது மோசமாகப் பாதிக்கப்படுகிறது)
  • குறுகிய குடல் நோய்க்குறி (இதில் சிறுகுடலின் பெரும்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. மீதமுள்ள பகுதியால் அனைத்து கொழுப்பையும் முழுமையாக உறிஞ்ச இயலாத நிலை).
  • சிறிய குடல் பாக்டீரியா அதி வளர்ச்சி நோய்க்குறி

நுண்ணோக்கி சோதனை[தொகு]

மல கொழுப்பு சோதனை எளிய முறையாகும். இதில் எடுக்கப்பட்ட மல மாதிரி மருத்துவமனையின் ஆய்வகத்திற்கு நுண்ணோக்கி ஆய்விற்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது. மலமானது சூடான் III & சூடான் IV கொண்டு சாயமேற்றப்பட்டு நுண்ணோக்கியில் காணப்படுகிறது. நுண்ணோக்கியின் வழியே மல மாதிரியில் காணக்கூடிய கொழுப்பு ஓரளவு கொழுப்பு செரிமான குறைபாட்டு நோயினைக் குறிக்கிறது.

அளவீட்டு முறை[தொகு]

இம்முறையில் மல கொழுப்பானது அளவிடப்படுகிறது. இந்த அளவீடானது வழக்கமாக மூன்று நாட்கள் செய்யப்படுகிறது.[3] இதற்கு நோயாளி மலத்தினை ஒரு கலனில் சேகரிக்கின்றார்.

கலவை கருவிகளைப் பயன்படுத்தாமல், மலமானது நன்றாகக் கலக்கப்படுகிறது. நன்கு கலக்கப்பட்ட மலத்திலிருந்து ஒரு சிறிய மாதிரி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மலத்தில் கரைப்பான்களைப் பயன்படுத்திக் கொழுப்பானது பிரித்தெடுக்கப்பட்டு சோப்பாக மாற்றப்பட்டு அளவிடப்படுகிறது.

பொதுவாக, ஒரு நாளைக்கு 100 கிராம் கொழுப்பை உட்கொள்ளும் ஒருவரின் உடலிலிருந்து 7 கிராம் வரை உறிஞ்சப்படாமல் வெளியேறும். இது வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்கு, வயிற்றுப்போக்கு கொழுப்பு உறிஞ்சுதலுக்கு இடையூறாக இருப்பதால், 12 கிராம் வரை கொழுப்பு உறிஞ்சப்படாமல் வெளியேறும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல_கொழுப்பு_சோதனை&oldid=3131924" இலிருந்து மீள்விக்கப்பட்டது