மல்லிகா கபூர்
மல்லிகா கபூர் | |
|---|---|
| பிறப்பு | தில்லி, இந்தியா |
| பணி | நடிகை, வடிவழகி |
| செயற்பாட்டுக் காலம் | 2004–2011 |
மல்லிகா கபூர் (Mallika Kapoor) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நடிகையும், தென்னிந்தியத் திரைப்படங்களில் முக்கியமாக மலையாளம், தமிழ், கன்னட மொழிகளில் பணிபுரிந்தவர் ஆவார். இவர் ஒரு சில தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.[1]
தொழில்
[தொகு]மல்லிகா கபூர் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து தனது முதல் மலையாளப் படமான அற்புதத் தீவு மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தமிழ் அறிமுகமானது அழகை இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, பரத்துடன் இணைந்து நடித்தது. இதன் பின்னர் அர்ஜுனுடன் வாத்தியார் படத்தில் முன்னணிப் பாத்திரத்தில் நடித்தார். அல்லரி நரேசுடன் அல்லரே அல்லரி தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். 2008ஆம் ஆண்டு மாதம்பி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இவர் மேலும் ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்: செப்டம்பர் 2006 இல் வெளியான அற்புதத் தீவு (மலையாளத்திலிருந்து டப்பிங் செய்யப்பட்டது), மற்றும் தீபாவளியன்று வெளியான வாத்தியார் இத்திரைப்படங்களாகும்.
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2004 | தில் பெச்சாரா பியார் கா மாரா | நீலா | இந்தி | |
| 2005 | அற்புதத் தீவு | ராஜகுமாரி ராதா | மலையாளம் | |
| 2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | ஜோதிலட்சுமி | தமிழ் | |
| வாத்தியார் | அஞ்சலி | தமிழ் | ||
| 2007 | சவி சவி நெனப்பு | ப்ரீத்தி | கன்னடம் | |
| அல்லரே அலரி | பிரியா | தெலுங்கு | ||
| புலி வருது | காயத்திரி / செண்பகம் | தமிழ் | ||
| 2008 | இசுடேட் ரவுடி | பிரியா | தெலுங்கு | |
| கங்கை காவேரி | காவேரி | கன்னடம் | ||
| மாதம்பி | சியாமளா | மலையாளம் | ||
| 2009 | அந்தோணி யார்? | மஞ்சு | தமிழ் | |
| ஜாக் மற்றும் ஜில் | காயத்திரி | மலையாளம் | ||
| சொல்ல சொல்ல இனிக்கும் | அனுராதா | தமிழ் | ||
| ஹுஷார்[2] | அக்ஷதா | கன்னடம் | ||
| 2010 | தீராத விளையாட்டுப் பிள்ளை | நேர்காணல் செய்பவர் | தமிழ் | சிறு தோற்றம் |
| அட்வகேட்டலட்சுமணன் - பெண்கள் மட்டும் | அன்னி | மலையாளம் | ||
| தி த்ரில்லர | மேகனா | மலையாளம் | சிறு தோற்றம் | |
| 2011 | முங்காரினா மாதிரி ஹானி | கன்னடம் | ||
| கன்[3] | மல்லிகா | கன்னடம் | ||
| மகரமஞ்சு | வசுந்தரா | மலையாளம் |