உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லிகார்ஜுனா பண்டிதராத்யுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகார்ஜுனா பண்டிதராத்யுடு
இயற்பெயர்
మల్లికార్జున పండితారాధ్యుడు
பிறப்புசுமார் 1110 கி.பி.[1]
திரக்சாரமம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[2]
இறப்புசுமார் 1185 கி.பி.
வேலட்டூரு (நவீன ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[3]
தொழில்கவிஞர், தத்துவஞானி
மொழிதெலுங்கு, Kannada
காலம்12ஆம் நூற்றாண்டு
வகைசைவ இலக்கியம்
இலக்கிய இயக்கம்பக்தி இயக்கம், வீர சைவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிவதத்துவசாரம்
பிள்ளைகள்கேதாரைய பண்டிதர்[4]

மல்லிகார்ஜுனா பண்டிதராத்யுடு (Mallikarjuna Panditaradhyudu) வீரசைவ பள்ளியின் இந்திய தத்துவஞானியும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்குக் கவிஞரும் ஆவார். இவர் வேலநாட்டி சோட மன்னர் இரண்டாம் இராஜேந்திர சோடரின் அரசவையில் கவிஞராக இருந்தார்.[5] சிவதத்துவசாரமு என்ற தனது முதல் படைப்பை எழுதினார். தனது சகாப்தத்தின் தனித்துவமான நபராக இருந்த இவர் ஆந்திராவில் சைவத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடியாக இருந்தார். ஆந்திராவில் பௌத்தத்தின் எச்சங்களை தனது செல்வாக்கின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்த பெருமை இவருக்குக் கிடைத்தது. தெலுங்கு மொழியில் இவரது பங்களிப்பிற்காக கவிமல்லன் எனக் குறிப்பிடப்பட்டார்.[6]

இளமை வாழ்க்கை

[தொகு]

மல்லிகார்ஜுனா ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி நகரத்தில் அமைந்துள்ள திரக்சாரமம் என்ற ஊரில் கிபி 1110 இல் ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்தார்.[7] இவரது பெற்றோர் பீமன்னா பண்டிதர் மற்றும் கௌராம்பாள் ஆவர்.[2][4] இவரின் தந்தை ஐந்து பஞ்சராம சேத்த்திரங்களில் ஒன்றான திரக்சாரமத்திலுள்ள பீமேசுவர சுவாமி கோயில் பூசாரியாக இருந்தார். இந்த இடம் ‘தெற்கின் காசி’ என்றும் அழைக்கப்படுகிறது.[2][8] கோடிப்பள்ளியைச் சேர்ந்த ஆராத்யதேவர் என்பவரிடம் கல்வி கற்றார். அவரிடமிருந்து சைவ சமயம் பற்றிய அறிவைப் பெற்றார்.[9] இவரது பிறந்த நாள் சில சைவ மக்களால் திருவோணம் அன்று கொண்டாடப்படுகிறது.[10]

படைப்புகள்

[தொகு]

மல்லிகார்ஜுனா சிவதத்வசாரமு என்ற நூலை எழுதினார். இது தெலுங்கில் முதல் சுயாதீநானே சோடா.இது 489 சிறு செய்யுள்களைக் கொண்டுள்ளது. மேலும், சைவம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.[11] பின்னர் இந்த படைப்பை இவரே கன்னடத்தில் மொழிபெயர்த்தார். இது தெலுங்கு இலக்கியத்தின் ஆரம்பகால சதங்களில் ஒன்றாகும்.[12] ::131 இவரது படைப்புகள் தெலுங்கு இலக்கியத்தின் 'சிவ கவி சகாப்தத்தில்' வைக்கப்பட்டுள்ளன. இது கிபி 1100 முதல் கிபி 1250 வரையிலான காலத்துடன் ஒத்திருக்கிறது.[13] நன்னே சோடர், மல்லிகார்ஜுனா மற்றும் பால்குரிகி சோமநாதர் மூவரும் சிவகவிதிரயம் (அதாவது சைவ கவிஞர்கள் மூவர்) என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மூவரும் பிதுபார்த்தி கவிஞர்கள் மற்றும் யாதவக்குல அன்னமையா ஆகியோருடன் இணைந்து ஆந்திரப் பிராந்தியத்தில் வீர சைவ இயக்கத்தை வளர்ப்பதில் முன்னோடியக இருந்தனர்.[14] இலிங்கோபத்வ கத்யம், அமரேசுவர சதகம், கங்கா சகஸ்ரமாலை மற்றும் உருத்ரமகிமை ஆகியவை மல்லிகார்ஜுனாவின் வேறு சில படைப்புகளில் அடங்கும்.[15]

மல்லிகார்ஜுனா பசவரால் ஈர்க்கப்பட்டார். ஆந்திரப் பிராந்தியத்தில் அவரை பாராட்டிய முதல் தெலுங்குக் கவிஞராக இவர் கருதப்படுகிறார்.[16] வேத மரபுகள் மற்றும் வீரசைவ மதத்தின் கூறுகளை உள்ளடக்கிய ஆராத்யா பிரிவின் தோற்றத்திற்கும் இவர் பங்களித்தார்.[17] மல்லிகார்ஜுனா, ஸ்ரீபதி பண்டிதர் மற்றும் மஞ்சண்ணா பண்டிதர் (சிவலேங்கா என்றும் அழைக்கப்படுகின்றனர்) ஆகியோர் ஆந்திரப் பிராந்தியத்தில் இடைக்காலத்தில் பண்டிதராத்ய சைவ பிரிவுகளை நிறுவியவர்களில் முக்கியமானவர்கள்.[18] இவர்கள் மூவரும் வீரசைவ பாரம்பரியத்தில் பண்டிததிராயம் என்று குறிப்பிடப்பட்டனர்.[19]

சுயசரிதை

[தொகு]

வீரசைவ கவிஞர் பால்குரிகி சோமநாதர் மல்லிகார்ஜுனாவின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட 'பண்டிதராத்யசரிதமு' என்ற நூலை எழுதினார்.[20]:127[21] இந்த படைப்பு தெலுங்கு இலக்கியத்தின் சரித்திரகாவியம் வகையைச் சேர்ந்தது. இது பொதுவாக ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையின் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறுகளைக் கொண்டுள்ளது. ஆந்திரப் பத்திரிகா என்ற பத்திரிக்கையின் நிறுவனரும் சுதந்திரப் போராட்ட வீரருமான காசிநாதுனி நாகேசுவரர ராவ் அவர்களின் முன்முயற்சியின் மூலம், வரலாற்றாசிரியரும் தெலுங்கு அறிஞருமான சிலுகுரி நாராயண ராவ், பண்டைய பனையோலை கையெழுத்துப் பிரதிகள் மூலம் சோமநாதரின் இந்தப் படைப்பைத் தொகுத்தார். இது பின்னர் 1939 இல் பண்டிதராத்யசரித்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[22]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. K., Lalitamba (1981). Vīraśaivism in Āndhra (in English). P.R. Krishnamurty. p. 29.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Salva, Krishnamurthi; Shu, Hikosaka; G., John Samuel (1994). A History of Telugu Literature: 1108 A.D.-1320 A.D (in English). Institute of Asian Studies.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Yasoda Devi (1993). The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.: Administration, literature and society (in English). Gyan Publishing House. ISBN 9788121204859.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 K., Lalitamba (1981). Vīraśaivism in Āndhra (in English). P.R. Krishnamurty. p. 29.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Yasoda Devi (1993). The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.: Administration, literature and society (in English). Gyan Publishing House. ISBN 9788121204859.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. Chilukuri Narayana Rao, ed. (1939). పండితారాధ్య చరిత్ర (in Telugu). Madras: Andhra Patrika Printing Press.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. K., Lalithamba (1978). "DEVOTIONAL SAIVISM IN MEDIEVAL ANDHRA". Indian History Congress 39: 535–538. https://www.jstor.org/stable/44139392. பார்த்த நாள்: 17 March 2024. 
  8. Bezbaruah, Madan Prasad (2003). Fairs and Festivals of India (in English). Gyan Publishing House. p. 21.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  9. M., Srinivas Chary (1994). The Hindu Temple Traditions of Draksharama (in English). p. 69. ISBN 9780773467651.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  10. Iyengar, Venkatesa, ed. (1932). The Mysore (in English). Mittal Publications. p. 43.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  11. K., Lalithamba (1978). "DEVOTIONAL SAIVISM IN MEDIEVAL ANDHRA". Indian History Congress 39: 535–538. https://www.jstor.org/stable/44139392. பார்த்த நாள்: 17 March 2024. K., Lalithamba (1978). "DEVOTIONAL SAIVISM IN MEDIEVAL ANDHRA". Indian History Congress. 39: 535–538. Retrieved 17 March 2024.
  12. Yasoda Devi (1993). The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.: Administration, literature and society (in English). Gyan Publishing House. ISBN 9788121204859.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)Yasoda Devi (1993). The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.: Administration, literature and society. Gyan Publishing House. ISBN 9788121204859.
  13. Datta, Amaresh, ed. (2008). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot (in English). Sahitya Akademi. p. 984. ISBN 9788126018031.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  14. R., Sri Hari, ed. (2003). Major Genres and Trends in Dravidian Literature (in English). Dravidian University. p. 49.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  15. Datta, Amaresh, ed. (1987). Encyclopaedia of Indian Literature (in English). Sahitya Akademi. p. 984. ISBN 9788126018031.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  16. Callā, Rādhākr̥ṣṇaśarma, ed. (1980). Palkuriki Somanatha : On the Life and Works of Palakuriki Somanatha, 13th Century Telugu and Kannada Poet (in English). Prasaranga, University of Mysore. p. 41.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  17. Paniker, K. Ayyappa, ed. (1997). Medieval Indian Literature: Surveys and selections (in English). Sahitya Akademi. p. 542. ISBN 81-260-0365-0.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  18. Iyengar, Venkatesa, ed. (1932). The Mysore (in English). Mittal Publications. p. 35.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  19. After The Kaktiyas (in English). Andhra Sahitya Academy. 1975. p. 11.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  20. Yasoda Devi (1993). The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.: Administration, literature and society (in English). Gyan Publishing House. ISBN 9788121204859.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  21. Roghair, Gene H.; Velchuru, Narayana Rao, eds. (2014). Siva's Warriors (in English). Princeton University Press. ISBN 9781400860906.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  22. Chilukuri Narayana Rao, ed. (1939). పండితారాధ్య చరిత్ర (in Telugu). Madras: Andhra Patrika Printing Press.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)