மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர், கர்நாடக அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜூலை ஐந்தாம் நாளில் பிறந்தார். இவர் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பீமசமுத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 2004-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினான்காவது மக்களவையிலும், 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.