மல்லா விஜய பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லா விஜய பிரசாத்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2009-14
தொகுதிமேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1966, (வயது 57)
விசாகப்பட்டினம்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அருணாகுமாரி
பிள்ளைகள்அனுஷா,அலேக்யா
கல்விஇளங்கலை
வேலைதொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி

மல்லா விஜய பிரசாத் (Malla Vijaya Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும், திரைப்பட தயாரிப்பாளரும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார். இவர், ஆந்திரப் பிரதேச கல்வி நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார்.

மல்லா விஜய பிரசாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 1966 இல் பிறந்தார். ஒடிசாவில் உள்ள பெர்காம்பூர் பல்கலைக்கழகத்தில் 1998இல் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் மேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பி. ஜி. வி. ஆர். நாயுடுவைத் தோற்கடித்தார். 2014 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் [2] பின்னர் 2019 ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜூலை 17, 2021 அன்று, நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். [3]

பிற தொழில்கள்[தொகு]

பிரசாத் போக்குவரத்துத் தொழிலில் பணிபுரிந்து தொடங்கினார். பின்னர் அசையாச் சொத்து வணிகத்தில் ஈடுபட்டார். பின்னர் பொறியியல் கல்லூரியையும், பட்டயக் கல்லூரியையும் தொடங்கினார்.

தெலுங்கில் திரைப் படங்களைத் தயாரித்தார். விஜயபிரசாத் நல அறக்கட்டளையை நிறுவினார். ஏழைகளுக்கான கல்வி, சுகாதார முகாம்கள் உள்ளிட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "వైఎస్సార్‌సీపీ దళపతులు". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "Malla Vijay Prasad, Karanam Dharmasri joins YSR Congress Party - Sakshi". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. ABN (2021-07-18). "పదవుల పంపకం" (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
  4. "అక్రమార్క'గణ'మా.. ప్రగతి 'ప్రసాద్‌'మా." (in தெலுங்கு). 2019-04-03. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லா_விஜய_பிரசாத்&oldid=3823635" இலிருந்து மீள்விக்கப்பட்டது