உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லாண்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் மள்ளா் (பள்ளர்),வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது.

சேர, சோழ, மண்டலங்களான திருச்சி,கரூர்,தஞ்சாவூர்,நாமக்கல்,சேலம் ஆகிய மாவட்டங்களில் மருதநில பகுதியில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள் வாழும் எல்லா ஊா்களிலும் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ளது.இந்த கோவில்களில் சைவ வழிபாடு வழக்கமாக நடைபெறுகிறது. மள்ளர்களாகிய பள்ளர்கள் மட்டுமே மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை வழிபடுகின்றனர். அதே ஊர்களில் வாழும் மற்ற வகுப்பினர் யாரும் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை வழிபடுவதில்லை.மள்ளர்களாகிய பள்ளர்கள் வீடுகளில் எந்த சுபநிகழ்ச்சியானாலும் மிக பழமை வாய்ந்தத மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை, முதலில் வழிபட்டுவிட்டுதான் சுபநிகழ்ச்சியை தொடங்கும் பழக்கம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்குள்ளாக வடமொழி மயமாதலின் விளைவாக இளைய தலைமுறையினரால் மல்லாண்டார் என்ற பெயருக்கு மாற்றாக மல்லாண்டேஸ்வரர், மல்லேஸ்வரன், மல்லீஸ்வரன் ஆகிய பெயர்கள் புகுத்தப்பட்டுள்ளன. எனினும் முதியவர்கள் மல்லாண்டார் என்ற பெயரிலேயே இத் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றனர். மல்லன் என்னும் முற்காலத்தவருக்கு ஆண்டவன் என்ற அடைமொழியிட்டு அவரை மல்ல ஆண்டவன் என்ற பெயரில் வழிபட்டு பிற்காலத்தில் அதுவே மல்லாண்டவன் என்றாகி, மரியாதைப் பன்மைச் சொல்லாக மல்லாண்டவர் என்றாகி அப் பெயர் மருவி மல்லாண்டார் என வழங்கப்படுவதாக அறியப்படுகிறது.சேர,சோழ மண்டலங்களில் வாழும் பள்ளா்கள்: மல்லர் எனும் தன் இனத்தை நினைவுபடுத்தும் வகையிலும், மல்லாண்டார்சாமியை குலதெய்வமாக வழிபடும் ஆண்களில் சிலரும் மல்லன், மல்லப்பன்,மல்லையப்பன்,மல்லையன்,மல்லீசுவரன் என்னும் பெயர்களைக் கொண்டவர்களாக உள்ளனர்.

சில இடங்களில் விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லைக் காட்டு மல்லாண்டார் என்ற பெயரில் விளைநிலங்களின் காவல் தெய்வமாகவும் இத்தெய்வத்தை வணங்குகின்றனர்.


கரூா் மாவட்டம்,

குளித்தலை தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

1)குளி்த்தலை நகரம் (பாரதி நகா், மல்லையப்பநகா்,தேவதானம்,மணத்தட்டை) 2)மருதூர் 3)தண்ணீா்ப்பள்ளி 4)மேட்டுமருதூர் 5)பொய்யாமணி 6)திருச்சாப்பூர் 7)நல்லூர் 8)தேவதானம் 9)வாளாந்தூர் 10)கோட்டமேடு 11)எழுனூற்றுமங்களம் 12)வதியம் 13)ஐனூற்றுமங்களம் 14)வீரவல்லி 15)மணத்தட்டை 16)குமாரமங்களம் 17)இனுங்கூர் 18)நங்கவரம் 19)சிவாயம் 20)சீகம்பட்டி 21)இராஜேந்திரம் 22)ராஜேந்திரம் 23)கூடலூர் 24)பரளி

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

1)திம்மாச்சிபுரம் 2)கே.பேட்டை 3)கள்ளப்பள்ளி 4)பிள்ளபாளையம் 5)மேட்டுமகாதானபுரம் 6)சித்தலவாய் 7)திருக்கம்புலியூர் 8)மாயனூர் 9)கம்மநல்லூர் 10)பிச்சம்பட்டி 11)மணவாசி 12)கட்டளை 13)சிந்தலவாடி 14)புலியூர் 15)மேலப்பாளையம் 16)சிவாயம் 17)பாப்பக்காப்பட்டி 18)இரும்பூதிப்பட்டி 19)பஞ்சப்பட்டி 20)வீரராக்கியம்

கரூா் மாவட்டம், கரூா் தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

1) கரூா் நகரம் (பாலம்மாபுரம்,திருக்காம்புலியுர்,திருமாநிலையூர்,வெங்கமேடு,நீலிமேடு) 2)நெரூா் 3)பள்ளபாளையம் 4)வாங்கல் 5)புலியூர் 6)சணப்பிரட்டி 7)ஆண்டான்கோவில் 8)தோட்டக்குறிச்சி 9)வெள்ளியணை 10) மண்மங்கலம்


கரூா் மாவட்டம், கடவூர் தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

1)கடவூர்,2)டி.இடையப்பட்டி,3)கொசூர்4)மாவத்தூர்5)முள்ளிப்பாடி6)பாலவிடுதி7)செம்பியானத்தம்8)தொண்டமாங்கினம்9)வாழ்வார்மங்கலம்10)தரகம்பட்டி


திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்காவில் மள்ளா்கள்(பள்ளா்கள்) தெருக்களில் மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்)கோவில் உள்ள ஊா்கள் பின்வருமாறு:

1)காட்டுப்புத்தூர்,2)களத்தூர்,3)ஒருவந்தூர்,4)தொட்டியம்5)மோகனூர்6)தொட்டியம்7)நத்தம்8)அழகரை9)கொலக்குடி10)சித்தூர்11)காரைக்காடு12)அரசலூர்13)பிடாரமங்கலம்14)அயலூர்15)வால்வேல்புத்தூர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாண்டார்&oldid=3657335" இலிருந்து மீள்விக்கப்பட்டது