மல்லப்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மல்லபாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மல்லப்பாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,707
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635104

மல்லப்பாடி அல்லது மல்லபாடி (Mallapadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மல்லபாடி ஊராட்சிக்கு உட்பட்டது.

பெயர் வரலாறு[தொகு]

மல்லபாடியில் உள்ள சிவன் கோயிலின் குமுதப்பட்டையில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது போசள மன்னன் இராமநாதன் காலக் கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டில் இந்த ஊர் மலைப்பாடி என்று குறிப்பிடபட்டுள்ளது. மலைப்பாடி என்ற ஊர் பிற்காலத்தில் மல்லப்பாடி என திரிந்துள்ளது.[2]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான பர்கூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 247 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1840 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7707 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3902, பெண்களின் எண்ணிக்கை 3805 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 66.0 % என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

மல்லப்பாடி தமிழ்நாட்டு வரலாற்றில் சிறப்பான இடம் பெற்ற பகுதியாகும். தமிழாநாட்டிலேயே முதன்முதலாக வரலாற்று காலத்துக்கு முந்தைய ஒவியங்கள் முதன்முதலில் இங்குதான் கண்டறியப்பட்டன. அவை மல்லப்பாடி பாறை ஓவியங்கள் என அழைக்கப்படுகின்றன.

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 131. 
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Bargur/Batalapalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லப்பாடி&oldid=3754810" இலிருந்து மீள்விக்கப்பட்டது