மல்சிசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்சிசார் நகரம் (Malsisar) என்ற கிராமம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஜுன்ஜுனு என்ற ஊருக்கு அருகில் 28 கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது. இது மண்டாவா மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இது பஞ்சாயத்து மற்றும் வட்டத் தலைமையகங்களில் ஒன்றாகும். ஜுன்ஜுனு, பிசாவு, சாதுல்பூர் மற்றும் மண்டாவா ஆகிய பகுதிகளுக்கிடையே மல்சிசார் அமைந்துள்ளது.

பின்னணி[தொகு]

ஜுன்ஜுனுவைச் சேர்ந்த தாகூர் ஜோராவர் சிங்கின் மகன் தாக்கூர் மகா சிங் என்பவரால் ஷெகாவத் வம்சத்தில் நிறுவப்பட்ட மல்சிசார் கோட்டையின் கட்டுமானம் 1762 இல் தொடங்கியது. மல்சிசார் மற்றும் அதன் அண்டை கிராமமான அல்சிசார் ஆகிய இரண்டும் மல்சி மற்றும் அல்சி என்ற இரு சகோதரிகளின் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த கிராமங்களில் முதலில் குடியேறியவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருந்தனர். மல்சிசார் கி.பி 1760 இன் பிற்பகுதியில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது (விக்ரம் சம்வத் 1814).

மக்கள் தொகை[தொகு]

தற்போது 30,000 மக்களுடன் சுமார் 1800 குடும்பங்கள் இந்த கிராமங்களில் வாழ்கின்றனர்.

பாரம்பரிய மற்றும் சுற்றுலா தலங்கள்[தொகு]

பாபா பிரேம் கிரி ஜி மகாராஜின் மடம் (கோயில்) மல்சிசாரில் உள்ள மிகவும் பிரபலமான பாரம்பரியக் கட்டடமாகும். இது பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களையும் பின்பற்றுபவர்களையும் ஈர்க்கிறது. இது சிறீ சிறீ 1008 பாபா பிரேம் கிரி ஜி மகாராஜின் சமாதி தலமாகும். சிவன், ராதா-கிருட்டிணர் கோயில், சிறீ ரங் ஜி, பாபா ராம்தேவ்ஜி, கோகாஜி, அனுமன் (பாலாஜி) மந்திர் போன்றவை கிராமத்தில் உள்ள மற்ற பழைய கோயில்கள் ஆகும். சமீபத்தில் கட்டப்பட்ட சிறீ கிருட்டிணர் & சிவன் கோயிலும் இங்குள்ளது. 250 ஆண்டுகள் பழமையான கோட்டையும் உள்ள. மேலும் பல பிரபலமான வணிக குடும்பங்களான பாங்கா, ஜுன்ஜுனுவாலா, நாகரியா, சங்கனேரியா, சரோகி, கெடியா மற்றும் மோடி போன்ற பல பிரபலமான பாரம்பரிய குடும்பங்களும் உள்ளன. கிராமத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பின்வருமாறு: மல்சிசார் மடம், அணை மற்றும் கோட்டை.

பிரபல வெள்ளி மன்னர் சேத் மோதிலால் ஜி ஜுன்ஜுனுவாலா இந்த மல்சிசாருக்கு சொந்தமானவர். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் புல்லியன் பங்கு சந்தையில் "சில்வர் கிங்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் இவர்தான்.

பயன்பாடுகள்[தொகு]

மல்சிசாரில் பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு காவல் நிலையம் மற்றும் ஒரு பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட பல பயன்பாடுகளும் உள்ளன. இந்த கிராமத்தில் இரு அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பிரபலமான ஹெலினா கௌசிக் பெண்கள் கல்லூரி உட்பட சுமார் 35 பள்ளிகள் உள்ளன. இங்குள்ள வி.ஆர் மேல்நிலைப்பள்ளி 125 ஆண்டுகள் பழமையானதாகும். புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் சிறீ சத்ய நாராயண் ஜி என்பவர் நினைவாக சிறீ சத்ய நாராயண் பதங்காடியா சிக்சன் சன்சுதான் நிறுவப்பட்டது. அரசு மருத்துவமனைகள், பரோடா வங்கி பிகானிர் பாரத வங்கி மற்றும் ஜெய்ப்பூர் பாரத வங்கி ஆகியவை உள்ளன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்சிசார்&oldid=3762294" இலிருந்து மீள்விக்கப்பட்டது