மல்காஜ்கிரி
மல்காஜ்கிரி | |
---|---|
புறநகர் | |
தெலங்காணாவில் மல்காஜ்கிரியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°26′54″N 78°31′45″E / 17.44833°N 78.52917°Eஆள்கூறுகள்: 17°26′54″N 78°31′45″E / 17.44833°N 78.52917°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்காஜ்கிரி |
நகரம் | ஐதராபாத்து (இந்தியா) |
இணைக்கப்பட்டது | 1965 |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி, மஜ்கால்கிரி வட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.5 km2 (9.1 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 413,541 |
• அடர்த்தி | 18,000/km2 (46,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
• துணை அலுவல் | இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் |
|
வாகனப் பதிவு | டிஎஸ்-08 |
மக்களவைத் தொகுதி | மல்காஜ்கிரி |
சட்டப்பேரவைத் தொகுதி | மல்காஜ்கிரி சட்டபேரவைத் தொகுதி |
திட்டமிடல் நிறுவனம் | ஐததராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
மல்காஜ்கிரி (Malkajgiri) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது மல்காஜ்கிரி வருவாய் பிரிவில் உள்ள மல்காஜ்கிரி மண்டலத்தின் தலைமையகம் ஆகும். முந்தைய மல்காஜ்கிரி கிராமப் பேரூராட்சி, பின்னர் 1965ஆம் ஆண்டில் நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டில் அது மாநகராட்சியாக மாறியது. இது 2007ஆம் ஆண்டில் பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2] இது மாநிலத்தில் மாவட்டங்களை மறுசீரமைப்பதற்கு முன்பு ரங்காரெட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது அது மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ளது.[3]
புள்ளி விவரங்கள்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[4], மல்கஜ்கிரியின் மக்கள் தொகை 413,571 பேர் என்ற அளவில் இருந்தது. இதில் 51% ஆண்களும், 49% பெண்களும் அடங்குவர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 87% ஆகும். மொத்தம் 321,525 பேர் கல்வியறிவைக் கொண்டுள்ளனர். கல்வியறிவைப் பொறுத்தவரை, ரங்காரெட்டி மாவட்டத்தில் மல்கஜ்கிரி முதலிடத்தை பிடித்துள்ளது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண்கள் கல்வியறிவு 72%, பெண் கல்வியறிவு 65% ஆகும். மல்கஜ்கிரியில், மக்கள் தொகையில் 7% 6 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Malkajgiri". Census of India.
- ↑ "Medchal-Malkajgiri district" (PDF). Official website of Medchal district. 22 மார்ச் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. 30 November 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Census of India 2009: Data from the 2009 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.