மலை தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை தகைவிலான்
Hill Swallow (Hirundo domicola) by Dharani Prakash.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கிருன்டினிடே
பேரினம்: கிருண்டோ
இனம்: கி. தோமிகோலா
இருசொற் பெயரீடு
கிருண்டோ தோமிகோலா
ஜெர்டன், 1841

மலை தகைவிலான் (Hill swallow)(கிருண்டோ தோமிகோலா) தகைவிலான் குருவி குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பாசாரைன் பறவை. இது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இனப்பெருக்கம் செய்கிறது. சில உள்ளூர் பருவகால இயக்கங்களைத் தவிர இது பெரும்பாலும் இடம்பெயர்வதில்லை. இந்த பறவை கடற்கரையுடன் தொடர்புடையது. ஆனால் காடுகள் நிறைந்த மேட்டுப்பகுதிகளுக்குப் பரவுகிறது.[2] இது முன்னர் நாட்டுத் தகைவிலான் சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது.[3]

விளக்கம்[தொகு]

மலை தகைவிலான், ஜான் கோல்டின் ஓவியம்

இந்த சிற்றினம் 13 cm (5.1 in) செ.மீ. நீளமுடையது. இது பழுப்பு நிற இறக்கைகளையும் வாலும், சிவப்பு முகமும் மற்றும் தொண்டை மற்றும் மந்தமான அடிப்பகுதியுடன் நீல முதுகுடன் காணப்படுகிறது. இதன் குறுகிய மற்றும் சிறிய பிளவுபட்ட வாலுடன் தகைவிலானுடன் நெருங்கிய தொடர்புடையது.[2][4]

நடத்தை[தொகு]

இனப்பெருக்கம்[தொகு]

மலை தகைவிலான் கோப்பை வடிவ கூட்டினை குன்றின் மேடுகளிலோ அல்லது கட்டிடம், பாலம் அல்லது சுரங்கப்பாதை போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் சேகரிக்கப்பட்ட மண் துகள்களால் நேர்த்தியாக உருவாக்குகிறது. கூட்டில் மென்மையான பொருட்களை இடுகின்றது. மேலும் கூட்டில் நான்கு முட்டைகள் வரை இருக்கும். அமைதிப்பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மற்றும் கேரளாவின் முத்திக்குளம் காப்புக்காடுகளில் இச்சிற்றினங்களின் இனப்பெருக்க சூழலியல் பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.[3]

உணவூட்டம்[தொகு]

மலை தகைவிலான் மற்ற விலங்குகள் மற்றும் தொடர்பில்லாத உழவாரன்கள் போன்ற மற்ற வான்வழி பூச்சியுண்ணி போன்று நடத்தை கொண்டுள்ளன. இது வேகமாகப் பறக்கும் இயல்புடையது. காற்றில் பறக்கும் போது பூச்சிகளை, குறிப்பாக ஈக்களை உண்கிறது.[2]

மலை தகைவிலான்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Hirundo domicola". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22712284/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. 2.0 2.1 2.2 Turner, Angela K; Rose, Chris (1989). Swallows & martins: an identification guide and handbook. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-51174-7. https://archive.org/details/swallowsmartinsi00turn. 
  3. 3.0 3.1 Balakrishnan, Peroth (May 2010). "Breeding biology of the Hill Swallow (Hirundo domicola) in Western Ghats, India". Journal of the Bombay Natural History Society 107 (2): 109–115. https://www.researchgate.net/publication/256081222. 
  4. Grimmett, Richard; Inskipp, Carol; Inskipp, Tim (2002). Pocket Guide to Birds of the Indian Subcontinent. London: Christopher Helm Publishers Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7136-6304-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_தகைவிலான்&oldid=3477031" இருந்து மீள்விக்கப்பட்டது