மலையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையூர் (லி மலையூர்) என்ற சிற்றூர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியம் லிங்கவாடி ஊராட்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மலைப் பகுதியான இக்கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. குழந்தைகள் நான்கு கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் பயணித்து தங்கள் கல்வியை தொடர்கிறார்கள். இக்கிராமத்தினர் இன்றளவும் தங்கள் பகுதியில் காலணி அணிவது கிடையாது. விஷப் பூச்சிகள் தீண்டி விட்டால் மலைக்குன்றில் உள்ள நீரை அருந்தினால் விஷம் முறிந்துவிடும் என நம்புகின்றனர். கைக்குத்தல் அரிசி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையூர்&oldid=1979099" இருந்து மீள்விக்கப்பட்டது