மலையமான் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனைவர் மலையமான் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நா. இராசகோபாலன் எனும் இயற்பெயருடைய இவர் நூலகத்துறையில் பல ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக 70 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “பெரும்புகழ் எறும்புகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையமான்_(எழுத்தாளர்)&oldid=2636535" இருந்து மீள்விக்கப்பட்டது