மலையகத் தமிழர் அமைப்புகள்
Appearance
மலையகத் தமிழர்களினால் அல்லது மலையகத் தமிழர் அக்கறைகளை நோக்கங்களாகக் கொண்டு செயற்பட்ட, செயற்படும் அமைப்புகளை மலையகத் தமிழர் அமைப்புகள் எனலாம்.
வகைகள்
[தொகு]- தொழிற்சங்கங்கள் - தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை, நலன்களை முன்னிறுத்தி செயற்படும் தொழிலாளர் அமைப்புகள்
- அரசியல் கட்சிகள் - காலனித்துவ ஆட்சியில், இலங்கையில் மலையக மக்களை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள்.
- கல்வி அமைப்புகள்
- சமூக சீர்திருத்த அமைப்புகள் - சாதிய எதிர்ப்பு, பெண்கள் உரிமைகள், மூடநம்பிக்கை ஒழிப்பு, வர்க்கப் போராட்டம் உட்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புக்கள்.
- மொழி, இலக்கியம், கலைத்துறைப் பணிகளில் ஈடுபட்ட அமைப்புகள்
- சமய அமைப்புகள்
- ஊடக அமைப்புகள்
வரலாறு
[தொகு]இலங்கையில் 1820 கள் தொடக்கம் மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள். 1900 களின் தொடக்கத்திலேயே அவர்களின் அமைப்புகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.[1]
அமைப்புகள் பட்டியல்
[தொகு]- இலங்கை இந்திய சங்கம் - நகர்புற மலையகத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உதவிய அமைப்பு
- இந்திய சங்கம் - நகர்புற மலையகத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உதவிய அமைப்பு
- உழைப்பாளர் சங்கம் - கோ. நடேசய்யர் இணைத் தலைவராக விளங்கிய அமைப்பு
- இலங்கை தோட்டத்தொழிலாளர் யூனியன் - இடதுசாரிகள் தொழிற்சங்க அமைப்பு
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- இளைஞர் தமிழ்ச்சங்கம், இளைஞர் மன்றம்
- மலையக நல்வாழ்வு வாலிபர் சங்கம்
- மலையக இளைஞர் முன்னணி
- மலையக இளைஞர் பேரவை
- மலையக மக்கள் இயக்கம்