உள்ளடக்கத்துக்குச் செல்

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலைப்பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் (Hill Area Conservation Authority (சுருக்கமாக:HACA), தமிழ்நாடு அரசின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை 02 ஏப்ரல் 1990 அன்று வெளியிட்ட அரசாணை எண் 44[1]ன் கீழ் நிறுவப்பட்டது. இந்த ஆணையம் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள 43 வருவாய் வட்டங்களில் அனுமதியின்றி கட்டுமானங்களை எழுப்புவதை தடை செய்வதுடன், மலைப்பகுதிகளில் சுற்றுச் சூழலை காத்திடவும், காட்டுயிர்களையும் பேணவும், யானை-மனித மோதல்களைத் தடுக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.[2]பழைய தாலுகாக்களைப் பிரித்து புதிய வருவாய் வட்டங்களை நிறுவப்பட்டதால் தற்போது 55 வருவாய் வட்டங்கள் ஆணையத்தின் கட்டுபாட்டில் வந்துள்ளது.

ஆணையத்தின் கண்காணிப்பில் வரும் 44 தாலுகாக்கள்

[தொகு]
  1. உதகமண்டலம் வட்டம்
  2. குன்னூர் வட்டம்
  3. கோத்தகிரி வட்டம்
  4. கூடலூர் வட்டம்
  5. மேட்டுப்பாளையம் வட்டம்
  6. கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
  7. கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
  8. பொள்ளாச்சி வட்டம் -
  9. ஆனைமலை வட்டம்
  10. வால்பாறை வட்டம்
  11. உடுமலைப்பேட்டை வட்டம்
  12. திண்டுக்கல் வட்டம்
  13. பழனி வட்டம்
  14. கொடைக்கானல் வட்டம்
  15. பெரியகுளம் வட்டம்
  16. ஆண்டிப்பட்டி வட்டம்
  17. பேரையூர் வட்டம்
  18. உத்தமபாளையம் வட்டம் - போடிநாயக்கனூர் வட்டம்
  19. செங்கோட்டை வட்டம்
  20. தென்காசி வட்டம்
  21. அம்பாசமுத்திரம் வட்டம்
  22. நாங்குநேரி வட்டம்
  23. சங்கரன்கோயில் வட்டம்
  24. சிவகிரி வட்டம்
  25. கல்குளம் வட்டம்
  26. விளவங்கோடு வட்டம்
  27. அகத்தீஸ்வரம் வட்டம்
  28. தோவாளை வட்டம்
  29. வத்திராயிருப்பு வட்டம்
  30. இராஜபாளையம் வட்டம்
  31. சாத்தூர் வட்டம்
  32. வேலூர் வட்டம்
  33. போளூர் வட்டம்
  34. திருப்பத்தூர் வட்டம்
  35. செங்கம் வட்டம் - சமுனாமரத்தூர் வட்டம்
  36. ஏற்காடு வட்டம்
  37. ஆத்தூர் வட்டம்
  38. நாமக்கல் வட்டம்
  39. இராசிபுரம் வட்டம்
  40. சேலம் வட்டம்
  41. கள்ளக்குறிச்சி வட்டம்
  42. சத்தியமங்கலம் வட்டம்
  43. பவானி வட்டம் - அந்தியூர் வட்டம்
  44. துறையூர் வட்டம்

ஆணையத் தலைவர், செயலாளர் & உறுப்பினர்கள்

[தொகு]

இந்த ஆணையத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களாக கீழ்கண்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

  1. திட்டமிடல் & வளர்ச்சித் துறை
  2. நிதித்துறை
  3. சுற்றுச் சூழல் & வனத்துறை
  4. வேளாண்மைத் துறை
  5. கால்நடைபராமரிப்புத் துறை
  6. பொதுப்பணித்துறை
  7. தகவல் & சுற்றுலாத்துறை
  8. வீட்டு வசதி & நகர்புற வளர்ச்சித் துறை
  9. ஊரக வளர்ச்சித் துறை
  10. தொழில் துறை
  11. உள்ளாட்சி நிர்வாகம் & குடிநீர் துறை
  12. தலைவர், தமிழ்நாடு குடிநீர் விநியோகம் & கழிவு நீர் வடிகால் வாரியம்
  13. இயக்குநர், நகர்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் இயக்குநரகம்
  14. இயக்குநர், தோட்டக்கலை
  15. மாவட்ட ஆட்சியர் - நீலகிரி மாவட்டம்
  16. பிரின்சிபல் தலைமை வனப்பாதுகாவலர்

ஆணையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

[தொகு]
  1. தலைமைப் பொறியாளர் - மண் பாதுகாப்பு
  2. தலைமைப் பொறியாளர் - நெடுஞ்சாலைகள்
  3. தலைமைப் பொறியாள்ர் - பொதுப்பணித்துறை
  4. தலைமைப் பொறியாளர் - நீர் ஆதாரத் துறை
  5. இயக்குநர்- ஊரக வளர்ச்சித் துறை
  6. இயக்குநர்- கால்நடை வளர்ப்புத் துறை
  7. இயக்குநர் - சுரங்கம் & புவியியல் துறை
  8. சட்டமன்ற உறுப்பினர் - அரசால் நியமிக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் ஏதேனும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.
  9. சட்டமன்ற உறுப்பினர் - அரசால் நியமிக்கப்படும் (நீலகிரி மாவட்டம் தவிர) ஏதேனும் ஒரு மலைப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
  10. நீலகிரி மாவட்டத்தின் ஏதேனும் ஒரு ஊராட்சி ஒன்றியத் தலைவர்
  11. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத் தலைவர்
  12. 4 அரசு சார்பற்ற சுற்றுசூழல் ஆர்வலர்கள் (தமிழக அரசால் நியமிக்கப்படுபவர்)
  13. சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள தன்னார்வ அமைப்புகள்
  14. சிறப்பு அழைப்ப்பாளர்கள் - தொடர்புடைய மலைப்பகுதியின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்

இந்த ஆணையக் குழு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கூடி, வனப்பகுதிகளைப் பற்றிய அறிக்கை தயாரிக்க வேண்டும். சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மலைப்பகுதிகளை கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் 300 சதுர அடிக்கு மேல் கட்டுமானங்கள் எழுப்பினால் அதற்கு ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

பின்னணி

[தொகு]

1990களில் மலைகளில் மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் இயற்கை வளம் மற்றும் கனிம வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், சேலம் மாவட்டம் போன்ற பல மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், மலையடிவாரங்களில் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கி கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டுமானங்களை கிராம ஊராட்சிகளின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மலையை ஒட்டிய பல ஏக்கர் காடுகள் காணாமல் போனது.

மலைப்பகுதிகளிலும், மலையடிவாரங்களிலும் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு இனி மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் தொழில்நுட்ப ஒப்புதல் பெற்ற பின்னரே உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமான வரைபடத்திற்கு ஒப்புதல் தரவேண்டும் என ஆணையம் அறிவித்துள்ளது.[3]

வீட்டு மனைகளை ஒழுங்கு படுத்தும் ஆணை

[தொகு]

மலையடிவாரப் பகுதிகளில் நகராட்சி அல்லது ஊராட்சி ஒன்றியத்தின் திட்டமிடல் அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு 30 மார்ச் 2020 அன்று அரசானை வெளியிட்டது.[4]அதன்படி காப்புக் காடு அல்லது மரங்கள் அடர்ந்த பகுதிகளிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால், உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் பெறாத மனைகளை, 20 சூன் 2016 அன்று அதற்கு முன்னர் பத்திரப் பதிவு மூலம் வாங்கியவர்கள் மற்றும் பகுதி விற்கப்படாத வீட்டடி மனைகளுக்கு உள்ளாட்சி அல்லது ஊரக வளர்ச்சி அமைப்புகளிடம் உரிய கட்டணம் செலுத்தி வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் பெறலாம்

  • உள்ளாட்சி மற்று ஊரக வளர்ச்சி அமைப்புகளிடம் மனை ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் கீழ்கண்ட அலுவலர்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
  1. 5 ஏக்கருக்கு கீழ் உள்ள மனைகள் எனில் மாவட்ட வன அதிகாரி - 5 ஏக்கர் அல்லது அதற்கும் மேற்பட்ட பரப்பளவில் போடப்பட்ட மனைகளுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி
  2. செயற் பொறியாளர், வேளாண்மை பொறியல் துறை
  3. உதவி இயக்குநர் / துணை இயக்குநர் - புவியியல் மற்றும் சுரங்கத் துறை
  4. வருவாய்த் துறை கோட்டாட்சியர்
  • கீழ்கண்ட மனைகளுக்கு என்றுமே ஒப்புதல் கிடையாது.
  1. .விற்பனை ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்கள் (Power of Attorny) மூலம் விற்பனை செய்த வீட்டு மனைகள்
  2. நீர் நிலைகளில் உள்ள மனைகள்
  3. அரசுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள மனைகள்
  4. யானை வழித்தடங்களை மறித்து போடப்பட்ட மனைகள்
  5. பூங்கா போன்ற பொதுப்பயன்பாட்டிற்கு விடப்பட்ட நிலங்களில் போடப்பட்ட மனைகள்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]