உள்ளடக்கத்துக்குச் செல்

மலைநாடு கிட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைநாடு கிட்டா காளை
மலைநாடு கிட்டா பசு

மலைநாடு கிட்டா (ஆங்கிலம்: Malnad Gidda, கன்னடம்: ಮಲೆನಾಡು ಗಿಡ್ಡ) எனப்படும் மாடுகள் இந்தியாவைச் சேர்ந்த குள்ள மாட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த மாடுகள் கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான மலை நாடு பகுதியில் வாழக்கூடியன. இந்த மாடுகள் உரதனா (கன்னடம்: ಊರದನ) மற்றும் வர்ஷகந்தி (கன்னடம்: ವರ್ಷಗಂಧಿ) என்றும் அழைக்கப்படுகின்றன. [1] இந்த மாடுகள் குள்ளமாகவும் நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றின் பால் மற்றும் சிறுநீர் ஆகியவை மருத்துவ மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. [2] இந்த மாடுகள் கிராமப்புற மேய்ச்சல் நிலங்கள் மற்றும் காடுகள் ஆகியவற்றை நம்பியே தாக்குப்பிடித்து வாழ்கின்றன. இந்த மாடுகள் கறுப்பு, பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. இவை மிகுந்த கூச்ச உணர்வு உடையவை. [3][4][5] இது ஒரு தனித்துவமான மாட்டு இனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. About Malnad Gidda Cattle
  2. Need for conserving Malnad Gidda dwarf cattle breed - The Hindu
  3. 3.0 3.1 Malnad Gidda gets breed status
  4. "Malnad Gidda - Indian Council of Agricultural Research". Archived from the original on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
  5. "Malenadu Gidda - Vishwagou". Archived from the original on 2015-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைநாடு_கிட்டா&oldid=3566825" இலிருந்து மீள்விக்கப்பட்டது