மலேர்கோட்லா
மலேர்கோட்லா | |
---|---|
நகரம் | |
![]() குகா தியாகிகள் நினைவு மண்டபம், மலேர்கோட்லா | |
ஆள்கூறுகள்: 30°31′00″N 75°53′00″E / 30.5167°N 75.8833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | மலேர்கோட்லா மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மலேர்கோட்லா நகராட்சி மன்றம் |
பரப்பளவு 788 | |
• நகரம் | 122 km2 (47 sq mi) |
• நகர்ப்புறம் | 457 km2 (176 sq mi) |
• மாநகரம் | 456 km2 (176 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | 1,35,424 |
• அடர்த்தி | 1,100/km2 (2,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 148023 |
வாகனப் பதிவு | PB-28 |
இணையதளம் | www |

மலேர்கோட்லா (Malerkotla ), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலேர்கோட்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும் [1]. இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு தென்மேற்கே 109 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே லூதியானா 50 கிலோ மீட்டர் தொலைவிலும்; சங்குரூர் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31 வார்டுகளும், 25,218 குடியிருப்புகளும் கொண்ட மலர்கோட்லா நகரத்தின் மக்கள் தொகை 135,424 ஆகும். அதில் 71,376 ஆண்கள் மற்றும் 64,048 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.44 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 897 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.10 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 6.57 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் சீக்கியர்கள் 9.50%, இந்து சமயத்தினர் 20.71%, இசுலாமியர் 68.50%, சமணர்கள் 1.11%, கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிற சமயத்தினர் 0.06%வீதம் உள்ளனர்[2]
போக்குவரத்து
[தொகு]தொடருந்து நிலையம்
[தொகு]
மலேர்கோட்லா நகர தொடருந்து நிலையம்[3] தில்லி-அம்பாலா-லூதியானா செல்லும் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது.