மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'== மலேரியா =='நோய்க்கான காரணி'பிளாஸ்மோடியம்' என்னும் நுண்ணுயிரி மூலம் மலேரியா பரவுகிறது.இந்தியவில் பிளாஸ்மோடியத்தின் கீழ்காணும் வகைகள் காணப்படுகின்றன.அவை

  1. பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
  2. பிளாஸ்மோடியம் மலேரியே
  3. பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம்
  4. பிளாஸ்மோடியம் ஓவேல்

இவற்றில் பிளாஸ்மோடியம் பால்ஸிபாரம் இறப்பை ஏற்படுத்தும் கடுமையான வகை ஆகும். பரவல்மலேரியா பெண் அனாபிலிஸ் கொசு வழியாகப் பரவுகிறது. நோய் அறிகுறிகள் 1.கடும் காய்ச்சலும் பின்பு உடல் குளிர்ந்து நடுக்கமும், வியர்த்தலும் மலேரியாவிற்கான அறிகுறியாகும். விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும். 2.அடிக்கடி மலேரியாவால் தாக்கப்பட்டால்,மண்ணீரல் பழுதடைதலும் கல்லீரல் திசு அழிதலும் ஏற்படுகிறது. நோய்த்தடுப்பும் கட்டுப்பாடும் 1.கொசுக் கடியைத் தடுக்க சுகாதார் முறைகள் 2.கொசு வளர்ச்சியைத் தடுக், நீர் தேங்கியிருக்கும் இடத்தை மூடுதலும், சாக்கடையில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதலும் முக்கியமானதாகும். 3. கொசு வலைகளைப் பயன்படுத்துதல்,கொசு விரட்டி மூலம் கொசுக் கடியைத் தவிர்த்து மலேரியா நோய் வராமல் தடுக்கலாம். மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சழற்சி பிளாஸ்மோடியம்இவற்றின் பால் இனப்பெருக்கம் அனாபிலிஸ் பெண் கொசுவிலும், பாலிலா இனப்பெருக்கம் மனிதனிலும் நடைபெறுகிறது.நோயுற்ற மனிதரை அனாபிலிஸ் பெண் கொசு கடிக்கும்பொழுது பிளாஸ்மோடியம் கொசுவின் உடலுக்குள் சென்று பாலினப்பெருக்கத்தினால் பெருகி ஸ்போரோசுவாய்டுகளாக உருவாகிக் கொசுவின் உமிழ்நீர் சுரப்பியில் சேகரமாகிறது.இப்பெண் கொசு நோயுற்ற மனிதனைக் கடிக்கும்போது இந்த ஸ்போரோசுவாய்டுகள் மனித உடலில் நுழைந்து கல்லீரல் செல்களில் பெருகிப் பின்னர் இரத்தச் சிவப்பணுவைத் தாக்கி வெடிக்கச் செய்கிறது.இதன் காரணமாக "ஹீமோசோயின்" என்னும் நச்சுப்பொருள் வெளிப்பட்டுக் குளிரையும்,கடும் காய்ச்சலையும் ஏற்படுத்துகிறது.இக்காய்ச்சல் 3 முதல் 4 நாள் நீடிக்கலாம்.

மேற்கோள்[தொகு]

[1]

  1. பாடநூல் குழு (2011). மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சழற்சி. தமிழ் நாடு அரசு. பக். 24.