மலேய மரநாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
Malayan weasel
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. nudipes
இருசொற் பெயரீடு
Mustela nudipes
தெசுமாரெசுடு, 1822
மலேய மரநாய் பரம்பல்

மலேய மரநாய் (Malayan weasel)மசுதெல்லா நுடிபிசு) அல்லது மலாய் மரநாய் என்பது மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது மரநாய் சிற்றினங்களுள் ஒன்று. இது செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

விளக்கம்[தொகு]

மலேய மரநாய் சிவப்பு-பழுப்பு முதல் சாம்பல்-வெள்ளை நிறமுடையதாக இருக்கும். இதன் தலை உடலின் மற்ற பகுதிகளை விட இலகுவான நிறத்தில் இருக்கும். வாலின் பின் பாதி வெளிர் ஆரஞ்சு முதல் வெள்ளை நிறத்திலிருக்கும். உள்ளங்கால் உரோமமின்றி காணப்படும். இதன் உடல் நீளம் 30 முதல் 36 செ.மீ. நீளமுடையது. வாலின் நீளம் 24 முதல் 26 செ.மீ. நீளம் உடையதாக இருக்கும்.

பரவலும் வாழிடமும்[தொகு]

மலேய மரநாய் மலாய் தீபகற்பத்தில் தெற்கு தாய்லாந்திலிருந்து தீபகற்ப மலேசியா மற்றும் சுமத்ரா மற்றும் போர்னியோ வரை காணப்படும். இது பொதுவாக வெப்பமண்டல தாழ் நிலக் காடுகளுடன் தொடர்புடையது.ஆனால் சதுப்புநிலம் மற்றும் மலைக்காடுகளில் தோட்டங்கள் பகுதிகளிலும் சுமார் 1,700 m (5,600 அடி) உயரமான மலைப் புதர்களிலும் இவை காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] வசிப்பிட விருப்பத்தேர்வுகள் பற்றிய சிறந்த புரிதலுக்கு, குறிப்பாக மலேய மரநாய்களை இலக்காகக் கொண்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஏனெனில் இது பொதுவான காணொலி பொறி, சாலை இறப்பு மற்றும் காட்சி ஆய்வுகள் மூலம் அரிதாகவே கண்டறியப்படுகிறது.[2]

போர்னியோவில், இது 177–1,032 m (581–3,386 அடி) உயரத்தில் உள்ள எண்ணைமரக் காடுகளில் காணப்படுகின்றது.[3]

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

மலேய மரநாய் குறித்த தகவல்கள் போதுமானதாக இல்லை. இவை குறைந்த அடர்த்தியில் காணப்படுகிறது. இதன் உடல் நிலத்தில் வாழும் வகையில் அமைந்துள்ளது. எனவே இவற்றால் மரம் ஏற இயலாது. இவற்றின் உணவு முறை குறித்து ஆய்வுப் பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால் மற்ற சிறிய மரநாய்கள் போலவே இருக்கும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் மாமிச உண்ணிகள். கொறித்துண்ணிகள், பறவைகள், முட்டைகள் மற்றும் சிறிய ஊர்வனவற்றை உண்ணுகின்றன. இந்தச் சிற்றினத்தின் பெரும்பாலான உயிரிகள் பகல் நேர விலங்குகளாக உள்ளன. ஆனால் மலேய மரநாய்கள் இரவாடி வகையினைச் சார்ந்தவையா என்பதைத் தீர்மானிக்கக் கூடுதல் ஆராய்ச்சி தேவை. பெரும்பான்மையான நேரத்தில் இவை ஒற்றை விலங்குகளாகக் காணப்படுகின்றன. இதன் இனப்பெருக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் நான்கு குட்டிகள் வரை ஈணுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.[2]

வகைப்பாட்டியல்[தொகு]

மலேய மரநாயில் இரண்டு துணையினங்கள் உள்ளன. அவை:

  • ம. நு. நுடிப்சு
  • ம. நு. லுகோசிபாலசு

மனிதர்களுடனான உறவு[தொகு]

மிகவும் சீரழிந்த காடுகள், தோட்டங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மலேய மரநாய்கள் மனிதர்களுடன் சகிப்புத்தன்மை கொண்டவை என்று கூறுகின்றன. மலேய மரநாய்கள் சில சமயங்களில் கிராமவாசிகளால் மருத்துவப் பயன்பாடு, உணவு, உரோமங்கள், கோழிகளைக் கொல்வதற்காகவும் கொல்லப்படுகின்றன. சில பகுதிகளில் இவை கிராமங்களில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளை வேட்டையாட அனுமதிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த எண்ணிக்கை நிலையானதாக இருந்தாலும், இதன் எண்ணிக்கை குறைவதன் காரணமாக தீபகற்ப மலேசியா மற்றும் தாய்லாந்தில் மலாய மரநாய்கள் பாதுகாக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேய_மரநாய்&oldid=3618913" இலிருந்து மீள்விக்கப்பட்டது