மலேயா நீர் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலேயா நீர் மூஞ்சூறு
Malayan water shrew[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிப்போடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: சிமரோகலே
இனம்: சி. ஹந்து
இருசொற் பெயரீடு
சிமரோகலே ஹந்து
ஹார்ச, 1958
Malayan Water Shrew area.png
மலேயா நீர் மூஞ்சூறு பரம்பல்

மலேயா நீர் மூஞ்சூறு (Malayan water shrew)(சிமரோகலே ஹந்து), ஹந்து நீர் மூஞ்சூறு என்றும் அழைக்கப்படுகிறது. இது மலேசியா மாநிலமான சிலாங்கூரிலிருந்து மட்டுமே காணப்படுகிறது. இதனுடைய பற்கள் சிவப்பு-நிறமுடையது. இது அச்சுறு நிலையினை அண்மித்த உயிரினம் எனக் கருதப்படுகிறது.[2]

இதனுடைய சிற்றினப் பெயரானது மலாய் வார்த்தையானது ஹந்துவிலிருந்து வந்தது. ஹந்து என்பதற்குப் பேய் என்று பொருள்.

உடற்கூறியல்[தொகு]

மலேய நீர் மூஞ்சூறுவின் அடிப்பகுதி வெள்ளையாகவும், மேற்பகுதி மற்றும் பக்கங்களிலும் கருப்பு நிறத் தோலும் வால் மேற்பரப்பில் ஓரங்களில் தடித்த உரோமங்கள் உள்ளன. இவை நீச்சலும் போது பயன்படுகிறது. பல் நுனி சிவப்பாக உள்ளன. மலேயா நீர் மூஞ்சூறு சுமார் 10 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. நீளம் 20 செ.மீ. வரை இருக்கும்.

வாழ்விடம்[தொகு]

மலேசிய நீர் மூஞ்சூறு தீபகற்ப மலேசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கிறது. இது முக்கியமாக நன்னீர் ஏரிகள் மற்றும் தாவரங்களால் சூழப்பட்ட ஆறுகளில் வாழ்கிறது. இது தனது பெரும்பாலான நேரத்தை தண்ணீருக்கடியில் செலவிடுகிறது. தண்ணீருக்கடியில் இந்த மூஞ்சூறு வேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதற்காக இலைகள்/தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் தங்குகிறது. இதனைப் பயன்படுத்தி தன்னுடைய இரையான மீன், தவளைகள் மற்றும் தாவரங்களை உண்ணுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder. ed. Mammal Species of the World (3 ). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. 2.0 2.1 Chiozza, F. (2008). "Chimarrogale hantu". IUCN Red List of Threatened Species 2008: e.T4647A11058654. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T4647A11058654.en. https://www.iucnredlist.org/species/4647/11058654. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேயா_நீர்_மூஞ்சூறு&oldid=3140010" இருந்து மீள்விக்கப்பட்டது