மலேசிய வெள்ளைக் கை கிப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய வெள்ளைக் கை கிப்பன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபேட்சு
இனம்:
லார்
துணையினம்:
லார்
இருசொற் பெயரீடு
கைலோபேட்சு லார்

மலேசிய வெள்ளைக் கை கிப்பன் (Malaysian lar gibbon) கைலோபேட்சு லார் லார்) என்பது கிப்பன் வகை குரங்குகளில் ஒரு சிற்றினம் ஆகும். இது வெள்ளை கை அல்லது லார் கிப்பனின் அருகிய இனத்தின் துணையினமாகும்.[1]

பரவல்[தொகு]

மலேசிய லார் கிப்பன் மலேசியா மற்றும் தாய்லாந்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள் முழுவதும் வெள்ளை கை கிப்பன்கள் காணப்படுகின்றன. நிலநேர்க்கோடு பகுதியில், வெள்ளை கை கிப்பன்கள் கைலோபேட்சு பேரினத்தின் மிகப்பெரிய வரம்பைக் கொண்டுள்ளன.[2]

வாழிடம்[தொகு]

வெள்ளை கை கிப்பன்கள் காணப்படும் வாழ்விடங்களில் எண்ணெய் தாவரங்கள் நிறைந்த காடுகள், தாழ் நில மற்றும் சப்மண்டேன் மழைக்காடுகள், கலப்பு இலையுதிர் மூங்கில் காடுகள், பருவகால பசுமையான காடுகள் மற்றும் பீட் சதுப்பு காடுகள் ஆகியவை அடங்கும். இதனுடைய வாழிட வரம்புகள் 17 முதல் 40 ஹெக்டேர் வரை இருக்கும். இவை அதிக பட்சமாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன.[3]

உடலமைப்பு[தொகு]

மலேசிய வெள்ளைக் கை கிப்பன்கள் இரு நிறமுடையவை உரோமங்களைக் கொண்டவை. இவை இருண்ட சாம்பல் நிறமாகவோ, கருப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக இருக்கலாம் அல்லது வெளிர் களிம்பு நிறத்திலிருந்து வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். முடி இல்லாத முகம் மிகவும் குறுகிய வெள்ளை அல்லது லேசான நிறமுடைய உரோமங்களால் வளையம் போன்று சூழப்பட்டுள்ளது. மற்றும் கைகள் மற்றும் கால்கள் இரண்டும் வெண்மையானவை. இவற்றின் நீளமான முன்கைகள், கைகள் மற்றும் கால்கள் மரங்களில் வாழ்வதற்கான தழுவல்களாகும். இது வன விதானங்கள் வழியாக முதன்மையாகப் பயணிக்கும். வெள்ளை கை கிப்பன்களுக்கு வால்கள் இல்லை. ஆண் குரங்குகளின் நீளம் 43.5 முதல் 58.4 செ.மீ. வரையும் பெண் குரங்குகளின் நீளம் 42.0 முதல் 58.0 செ.மீ. வரையும், ஆண்களின் எடை 5.0 முதல் 7.6 கிலோ வரையும் பெண்களின் எடை 4.4 முதல் 6.8 கிலோ வரையும் இருக்கும்.[4]

உணவு[தொகு]

மலேசிய வெள்ளைக் கை கிப்பன்கள் பெரும்பாலும் பழங்களை உண்ணக்கூடிய விலங்குகள். இவை கொடிகள், பழுத்த பழங்கள், இலை செடிகள், பூக்கள் மற்றும் பூச்சிகளையும் உண்கின்றன. மேலும் பழங்களைத் தேர்ந்தெடுத்து உணவாகச் சுவைக்கின்றன. இவை பழுத்த பழங்களையே உண்ணும்.[5]

இனப்பெருக்கம்[தொகு]

மலேசிய வெள்ளைக் கை கிப்பன்கள் பெரும்பாலும் ஒருதார மணம் கொண்டவை. இவை 2 முதல் 6 உறுப்பினர்களைக் கொண்ட சிறு குழுக்களாக வாழ்கின்றன. சிறு குழுக்களில் ஒருதார மணமும் எண்ணிக்கை மிகுதியாகக் காணப்படும் குழுக்களில் பலதார உறவுகள் காணப்படுகிறது. பெண்கள் 6 முதல் 9 ஆண்டுகள் ஆன நிலையில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. ஆனால் 9 வயதில் முழுமையாகப் பாலின முதிர்ச்சியடைகின்றன. இவை ஒவ்வொரு 3.5 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சந்ததியை மட்டுமே பெற்றெடுக்கின்றன. கர்ப்ப காலம் 7 மாதங்கள் ஆகும். பாலூட்டுதல் காலம் சுமார் 20 மாதங்களாக நீடிக்கின்றது. சந்ததிகளை ஆண்கள் நேரடியாகக் கவனிப்பதில்லை; ஆனால் பெண்கள் தம்முடைய குட்டிகளை நன்கு கவனித்துக்கொள்கின்றன.[6][7]

ஆயுட்காலம்[தொகு]

மலேசிய வெள்ளைக் கை கிப்பன்கள் சராசரியாக 30 ஆண்டுகள் காடுகளிலும், 44 ஆண்டுகள் வரை மிருக காட்சி சாலை போன்ற வாழிடங்களில் வாழ்கின்றன.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Brockelman, W.; Geissmann, T. (2020). "Hylobates lar ssp. lar". IUCN Red List of Threatened Species 2020: e.T39881A17990986. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T39881A17990986.en. https://www.iucnredlist.org/species/39881/17990986. பார்த்த நாள்: 6 September 2022. 
  2. Gron, K. 2010. "Lar gibbon Hylobates lar" (On-line). Primate Info Net. Accessed February 12, 2013 at http://pin.primate.wisc.edu/factsheets/entry/lar_gibbon.
  3. Savini, Tommaso; Boesch, Christophe; Reichard, Ulrich H. (2009-03-25). "Varying Ecological Quality Influences the Probability of Polyandry in White-handed Gibbons (Hylobates lar) in Thailand". Biotropica 41 (4): 503–513. doi:10.1111/j.1744-7429.2009.00507.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3606. http://dx.doi.org/10.1111/j.1744-7429.2009.00507.x. 
  4. Vereecke, Evie E.; D'Août, Kristiaan; Aerts, Peter (2006-05). "Locomotor versatility in the white-handed gibbon (Hylobates lar): A spatiotemporal analysis of the bipedal, tripedal, and quadrupedal gaits". Journal of Human Evolution 50 (5): 552–567. doi:10.1016/j.jhevol.2005.12.011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0047-2484. http://dx.doi.org/10.1016/j.jhevol.2005.12.011. 
  5. Bartlett, Thad Q. (2009). Seasonal Home Range Use and Defendability in White-Handed Gibbons (Hylobates lar) in Khao Yai National Park, Thailand. New York, NY: Springer New York. பக். 265–275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-88603-9. http://dx.doi.org/10.1007/978-0-387-88604-6_13. 
  6. Raemaekers, Jeremy J.; Raemaekers, Patricia M. (1985). "Long-Range Vocal Interactions Between Groups of Gibbons (Hylobates Lar)". Behaviour 95 (1-2): 26–44. doi:10.1163/156853985x00037. பன்னாட்டுத் தர தொடர் எண்:0005-7959. http://dx.doi.org/10.1163/156853985x00037. 
  7. Savini, Tommaso; Boesch, Christophe; Reichard, Ulrich H. (2009-03-25). "Varying Ecological Quality Influences the Probability of Polyandry in White-handed Gibbons (Hylobates lar) in Thailand". Biotropica 41 (4): 503–513. doi:10.1111/j.1744-7429.2009.00507.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3606. http://dx.doi.org/10.1111/j.1744-7429.2009.00507.x. 
  8. Columbian Park Zoo, 2012. "Lar or White Handed Gibbon" (On-line). Accessed April 27, 2013 at https://www.lafayette.in.gov/egov/docs/298271201804574.htm[தொடர்பிழந்த இணைப்பு]