உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய வரவு செலவுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய வரவுசெலவுத் திட்டம்
மலேசிய அரசாங்கத்தின் கொடி
அமைச்சர்டத்தோ அன்வார் இப்ராகிம்
2-ஆம் ஆமைச்சர்அமிர் அம்சா அசிசான்
பிரதமர்அன்வார் இப்ராகிம்
பொருளாளர்மலேசிய நிதி அமைச்சு
நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றம்
அமர்விடம்மலேசிய மக்களவை
மலேசிய மேலவை
நடப்பு திட்டம்2025

மலேசிய வரவு செலவுத் திட்டம் (ஆங்கிலம்: Malaysian Federal Budget; மலாய்: Belanjawan Malaysia) என்பது மலேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் மலேசிய நிதி அமைச்சரால், மலேசிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மலேசிய அரசாங்கத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டமாகும். வரவிருக்கும் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட அரசாங்க வருமானம் மற்றும் செலவுகளை அடையாளம் காணவும், அரசாங்கத்தின் பொருளாதார நிலைமைகளை முன்னறிவிக்கவும் மலேசிய அரசாங்கத்தால் ஆண்டுதோறும் இந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.[1]

அந்தத் திட்டத்தில் மலேசிய அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவின மதிப்பீடுகளும் அடங்கும்: மேலும் புதிய கொள்கைத் திட்டங்களை வரையறுக்கப்படுவதும் அடங்கும். மலேசிய வரவு செலவுத் திட்டங்கள் வழக்கமாக நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பு, அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும்.

அதே காலக்கட்டத்தில் மலேசியாவின் அனைத்து மாநிலங்களும் தங்களின் வரவு செலவுத் திட்டங்களை முன்வைக்கின்றன. மாநில வரவு செலவுத் திட்டம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டைச் சார்ந்து இருப்பதால், மாநில வரவு செலவுத் திட்டங்கள், பொதுவாக மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்குப் பின்னர் வெளியிடப்படுகின்றன.

மலேசிய வரிவிதிப்பு முறை

[தொகு]

மத்திய மலேசிய வரவு செலவுத் திட்டம் என்பது நிதியாண்டிற்கான ஒரு முக்கிய நிதித் திட்டமாகும். மலேசிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மலேசிய பேரரசர் அவர்களால் சட்டமாகக் கையொப்பமிடப்பட்ட பிறகு அந்தத் திட்டம் சட்டத்தின் வலிமையைப் பெறுகிறது.

வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பீடுகள்; மலேசிய வரிவிதிப்பு முறையின் (Malaysian Taxation System) மூலமாகத் திரட்டப்படுகின்றன. அரசாங்கச் செலவினம் மட்டுமே ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான பகுதியைப் பெறுகிறது. அத்துடன் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் என்பது அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் முன்னுரிமைகளின் அரசியல் அறிக்கையாகவும் செயல்படுகிறது. எனவே இந்தத் திட்டம் ஓர் ஆழமான அரசியல் பொருளாதாரத் தாக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது

வரவு செலவுத் திட்ட செயல்முறை

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தில் (மலேசிய மக்களவை) நிதி அமைச்சரால் வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. பின்னர் மக்களவை உறுப்பினர்களின் வாக்களிப்பிற்கு விடப்படுகிறது. வரவு செலவுத் திட்டற்கு எதிராக மக்களவை வாக்களித்தால், அப்போதைய அரசாங்கம் வீழ்ச்சி அடையலாம். இருப்பினும் மலேசியாவில் இதுவரையிலும் நடக்கவில்லை.

கட்சி ஒழுக்கத்தில் ஆளும் கட்சி உறுதியாகச் செயல்படும். பொதுவாக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து வெளியேற்றப் படலாம். எதிர்க்கட்சிகள் எப்போதும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது வழக்கம். 2008-ஆம் ஆண்டு முதல், எதிர்க்கட்சிக் கூட்டணி ஒரு முழுமையான மாற்று வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது வழக்கமாகும். அசல் வரவு செலவுத் திட்டத்துடன் மாற்று வரவு செலவுத் திட்டத்தையும் மலேசிய மக்களுக்கு எதிர்க்கட்சிக் கூட்டணி வழங்கி வருகிறது.

மலேசிய வரவு செலவுத் திட்டப் பட்டியல்

[தொகு]
1960 - 2025
ஆண்டு தேதி வழங்கியவர் சட்டமுன்வரைவு
1960-கள்
1960 25 நவம்பர் 1959 டான் சியூ சின், துன் 1960
1961 30 நவம்பர் 1960 டான் சியூ சின், துன் 1961
1962 21 திசம்பர் 1961 டான் சியூ சின், துன் 1962
1963 28 நவம்பர் 1962 டான் சியூ சின், துன் 1963
1964 16 திசம்பர் 1963 டான் சியூ சின், துன் 1964
1965 25 நவம்பர் 1964 டான் சியூ சின், துன் 1965
1966 17 நவம்பர் 1965 டான் சியூ சின், துன் 1966
1967 19 சனவரி 1967 டான் சியூ சின், துன் 1967
1968 18 சனவரி 1968 டான் சியூ சின், துன் 1968
1969 9 சனவரி 1969 டான் சியூ சின், துன் 1969
1970-கள்
1970 மலேசிய நாடாளுமன்ற இடைநிறுத்தம்

நிர்வாகம்: மலேசிய செயல்பாட்டு மன்றம்

1971
1972 6 சனவரி 1972 டான் சியூ சின், துன் 1972
1973 6 திசம்பர் 1972 டான் சியூ சின், துன் 1973
1974 5 திசம்பர் 1973 டான் சியூ சின், துன் 1974
1975 17 நவம்பர் 1974 உசேன் ஓன், டத்தோ 1975
1976 6 நவம்பர் 1975 உசேன் ஓன், டத்தோ 1976
1977 29 அக்டோபர் 1976 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1977
1978 28 அக்டோபர் 1977 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1978
1979 20 அக்டோபர் 1978 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1979
1980 18 அக்டோபர் 1979 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1980
1981 17 அக்டோபர் 1980 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1981
1982 23 அக்டோபர் 1981 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1982
1983 22 அக்டோபர் 1982 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1983
1984 21 அக்டோபர் 1983 தெங்கு ரசாலி அம்சா, டான் ஸ்ரீ 1984
1985 19 அக்டோபர் 1984 டாயிம் சைனுதீன், துவான் 1985
1986 25 அக்டோபர் 1985 டாயிம் சைனுதீன், துவான் 1986
1987 24 அக்டோபர் 1986 டாயிம் சைனுதீன், துவான் 1987
1988 23 அக்டோபர் 1987 டாயிம் சைனுதீன், துவான் 1988
1989 21 அக்டோபர் 1988 டாயிம் சைனுதீன், டத்தோ படுக்கா 1989
1990 27 அக்டோபர் 1989 டாயிம் சைனுதீன், டத்தோ படுக்கா 1990
1991 14 திசம்பர் 1990 டாயிம் சைனுதீன், டத்தோ படுக்கா 1991
1992 1 நவம்பர்1991 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1992
1993 30 அக்டோபர் 1992 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1993
1994 29 அக்டோபர் 1993 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1994
1995 28 அக்டோபர் 1994 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1995
1996 27 அக்டோபர் 1995 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1996
1997 25 அக்டோபர் 1996 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1997
1998 17 அக்டோபர் 1997 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 1998
1999 23 அக்டோபர் 1998 மகாதீர் முகமது, டத்தோ செரி 1999
2000-கள்
2000 29 அக்டோபர் 1999 டாயிம் சைனுதீன், துன் 2000
2001 27 அக்டோபர் 2000 டாயிம் சைனுதீன், துன் 2001 பரணிடப்பட்டது 23 திசம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம்
2002 19 அக்டோபர் 2001 மகாதீர் முகமது, டத்தோ செரி 2002
2003 20 செப்டம்பர் 2002 மகாதீர் முகமது, டத்தோ செரி 2003 பரணிடப்பட்டது 22 திசம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம்
2004 12 செப்டம்பர் 2003 மகாதீர் முகமது, டத்தோ செரி 2004
2005 10 செப்டம்பர் 2004 அப்துல்லா அகமது படாவி, டத்தோ செரி 2005 பரணிடப்பட்டது 10 சூலை 2019 at the வந்தவழி இயந்திரம்
2006 30 செப்டம்பர் 2005 அப்துல்லா அகமது படாவி, டத்தோ செரி 2006
2007 1 செப்டம்பர் 2006 அப்துல்லா அகமது படாவி, டத்தோ செரி 2007
2008 7 செப்டம்பர் 2007 அப்துல்லா அகமது படாவி, டத்தோ செரி 2008
2009 28 ஆகத்து 2008 அப்துல்லா அகமது படாவி, டத்தோ செரி 2009
2010-கள்
2010 23 அக்டோபர் 2009 நஜீப் ரசாக், டத்தோ செரி 2010 பரணிடப்பட்டது 2021-01-18 at the வந்தவழி இயந்திரம்
2011 15 அக்டோபர் 2010 நஜீப் ரசாக், டத்தோ செரி 2011
2012 7 அக்டோபர் 2011 நஜீப் ரசாக், டத்தோ செரி 2012 பரணிடப்பட்டது 2021-01-18 at the வந்தவழி இயந்திரம்
2013 28 செப்டம்பர் 2012 நஜீப் ரசாக், டத்தோ செரி 2013 பரணிடப்பட்டது 2020-09-05 at the வந்தவழி இயந்திரம்
2014 25 அக்டோபர் 2013 நஜீப் ரசாக், டத்தோ செரி 2014
2015 10 அக்டோபர் 2014 நஜீப் ரசாக், டத்தோ செரி 2015 பரணிடப்பட்டது 2020-09-05 at the வந்தவழி இயந்திரம்
2016 23 அக்டோபர் 2015 நஜீப் ரசாக், டத்தோ செரி 2016
2017 21 அக்டோபர் 2016 நஜீப் ரசாக், டத்தோ செரி 2017 பரணிடப்பட்டது 2020-10-24 at the வந்தவழி இயந்திரம்
2018 27 அக்டோபர் 2017 நஜீப் ரசாக், டத்தோ செரி 2018 பரணிடப்பட்டது 2018-12-22 at the வந்தவழி இயந்திரம்
2019 2 நவம்பர் 2018 லிம் குவான் எங், துவான் 2019 பரணிடப்பட்டது 2020-09-05 at the வந்தவழி இயந்திரம்
2020-கள்
2020 11 அக்டோபர் 2019 லிம் குவான் எங், துவான் 2020 பரணிடப்பட்டது 2020-09-05 at the வந்தவழி இயந்திரம்
2021 6 நவம்பர் 2020 துங்கு சைப்ருல் துங்கு அப்துல் அசீஸ், செனட்டர் டத்தோ செரி 2021 பரணிடப்பட்டது 2020-11-13 at the வந்தவழி இயந்திரம்
2022 29 அக்டோபர் 2021 துங்கு சைப்ருல் துங்கு அப்துல் அசீஸ், செனட்டர் டத்தோ செரி 2022
2023 7 அக்டோபர் 2022 துங்கு சைப்ருல் துங்கு அப்துல் அசீஸ், செனட்டர் டத்தோ செரி 2023
2023 24 பெப்ரவரி 2023 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 2023
2024 13 அக்டோபர் 2023 அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 2024
2025 18 அக்டோபர் 2024[2] அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 2025
2026 10 அக்டோபர் 2025[3] அன்வார் இப்ராகிம், டத்தோ செரி 2026

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tengku Razaleigh Hamzah (29 October 1976). "Bacaan Kali Kedua, Rang Undang-undang Perbekalan 1977" (PDF). Parlimen Malaysia. Retrieved 1 November 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Budget 2025 was tabled in Parliament on 18 October 2024 with the theme of "Reinvigorating The Economy, Driving Reforms, And Prospering The Rakyat"". PwC (in ஆங்கிலம்). Retrieved 10 October 2025.
  3. "Budget 2026 will optimise national resources, including GLIC funds, federal bodies and government-linked firms, with public spending rising to RM470 billion from RM452 billion last year". Malay Mail (in ஆங்கிலம்). 10 October 2025. Retrieved 10 October 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]