மலேசிய புள்ளியியல் துறை
| Department of Statistics Malaysia Jabatan Perangkaan Malaysia DOSM جابتن ڤراڠكأن مليسيا | |
| அரசு துறை மேலோட்டம் | |
|---|---|
| அமைப்பு | 1949 |
| முன்னிருந்த அரசு துறை |
|
| ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
| தலைமையகம் | C6 பகுதி, வளாகம் C, கூட்டரசு நிர்வாக மையம், 62514 புத்ராஜெயா, மலேசியா. 2°55′35″N 101°41′47″E / 2.92639°N 101.69639°E |
| பணியாட்கள் | 3,190 (2020) |
| ஆண்டு நிதி | MYR 193,488,000 |
| அரசு துறை தலைமை |
|
| மூல ministry | மலேசியப் பிரதமர் துறை |
| முக்கிய ஆவணம் | |
| வலைத்தளம் | dosm |

மலேசிய புள்ளியியல் துறை (மலாய்: Jabatan Perangkaan Malaysia; ஆங்கிலம்: Department of Statistics Malaysia) (DOSM) என்பது மலேசியப் பிரதமர் துறையில், மலேசிய பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முக்கியமான அரசு துறையாகும். மலேசியாவின் பொருளாதாரம், மக்கள் தொகை, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக நம்பத்தக்க புள்ளிவிவரங்களைச் சேகரித்து வழங்குவது இந்தத் துறையின் பொறுப்பாகும்.
இந்தத் துறையின் புள்ளிவிவரங்களைத் தேசிய பொதுக் கொள்கைகளுக்காக மதிப்பிடுவதற்கும், மறுஆய்வு செய்வதற்கும், நடைமுறைப் படுத்துவதற்கும் அரசாங்கம் முதன்மையாகப் பயன்படுத்துகிறது. மலேசியப் புள்ளியியல் துறையின் தரவுகள் OpenDOSM எனும் வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன.[1]
பொறுப்புகள்
[தொகு]இத்துறை, மலேசியாவின் மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பை (MyCensus) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகிறது.[2] மலேசியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டதில் இருந்து, மலேசியப் புள்ளியியல் துறை 5 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளது. அவற்றில் மிக அண்மைய கணக்கெடுப்பு 2020-ஆம் ஆண்டில் நடைபெற்றது.[3]
பொருளாதாரப் புள்ளிவிவரங்கள்
[தொகு]பலதரப்பட்ட நிதித் தகவல்களை வழங்கும்[4] இத்துறை, தனது பல்வேறு பிரிவுகளின் மூலம், காலாண்டு மற்றும் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), தேசிய வருமானம், நுகர்வு, சேமிப்பு, செலுத்து இருப்பு (Balance of Payments) போன்ற தேசிய கணக்குகளைத் தயாரித்துத் தொகுக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.[5]
சேவைகள் புள்ளிவிவரங்கள், செலுத்து இருப்பு, பொருளாதாரக் குறிகாட்டிகள், பன்னாட்டு வணிகப் புள்ளிவிவரங்கள், தொழில்துறை உற்பத்தி மற்றும் கட்டுமானப் புள்ளிவிவரங்கள் போன்ற பிற பொருளாதாரப் புள்ளிவிவரங்களும் இத்துறையால் தொகுக்கப்படுகின்றன.[6]
வரலாறு
[தொகு]மலேசியப் புள்ளியியல் துறை, 1949-ஆம் ஆண்டு புள்ளியியல் கட்டளைச் சட்டத்தின் (Statistics Ordinance 1949) கீழ் நிறுவப்பட்டது.[7] அப்போது அது புள்ளியியல் பணியகம் என அறியப்பட்டது. மேலும் வெளிநாட்டு வணிகம் மற்றும் தோட்ட விவசாயம் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
1965-ஆம் ஆண்டில், புள்ளியியல் சட்டம் 1965-இன் விதிகளின்படி, புள்ளியியல் பணியகம் அதன் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. பொருளாதாரம் மற்றும் சமூகம் குறித்த தரவுகளையும் உள்ளடக்கும் வகையில் அத்துறையின் செயல்பாடும் பங்களிப்புகளும் விரிவுபடுத்தப்பட்டன. அச்சட்டத்தின் கீழ், சபா மற்றும் சரவாக் புள்ளியியல் அலுவலகம், மலேசியப் புள்ளியியல் துறையின் ஒரு கிளையாக மாறியது. தீபகற்ப மலேசியாவில் மாநில அலுவலகங்கள்[8] 1971 முதல் 1982 வரை படிப்படியாக நிறுவப்பட்டன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yeong, Ashley (2023-01-12). "Stats Dept launches open data portal OpenDOSM, aims to spur good policies". Malay Mail (in ஆங்கிலம்). Retrieved 2023-04-01.
- ↑ AZMAN, NUR HANANI (15 February 2022). "MyCensus' findings a guide for ageing nation policies". The Malaysian Reserve. https://themalaysianreserve.com/2022/02/15/mycensus-findings-a-guide-for-ageing-nation-policies/.
- ↑ "Introduction and Info". www.mycensus.gov.my. Retrieved 2023-04-01.
- ↑ "Malaysia's economy to grow at more moderate pace this year — DOSM". The Edge. 2023-02-28. Retrieved 2023-04-02.
- ↑ "Malaysia's real GDP to grow 5.1% in 2022: DoSM". www.thesundaily.my (in ஆங்கிலம்). Retrieved 2023-04-02.
- ↑ "Department of Statistics Malaysia Official Portal". www.dosm.gov.my. Retrieved 2023-04-01.
- ↑ "DOSM Case Study - Amazon Web Services (AWS)". Amazon Web Services, Inc. (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-04-01.
- ↑ "Department of Statistics Malaysia Official Portal". www.dosm.gov.my. Retrieved 2023-04-01.