மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம்
| வகை | அரசு சார்பு நிறுவனம் |
|---|---|
| முதன்மை நபர்கள் | முகமட் அனுவார் சைனி (தலைவர்) முகமது சாலேம் கைலானி (நிர்வாகி) |
| தாய் நிறுவனம் | மலேசிய நிதி அமைச்சு |
மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் அல்லது உடா சொத்துடைமை நிறுவனம்; (ஆங்கிலம்: UDA Holdings அல்லது Urban Development Authority of Malaysia; மலாய்: Perbadanan Pembangunan Bandar) (UDA) என்பது மலேசிய அரசு சார்ந்த சொத்துடைமை நிறுவனம் ஆகும். வணிகம், தொழில் மற்றும் வீட்டுவசதி தொடர்பான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி, அவற்றை மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொன்டு வருகிறது. நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இதன் பணிகளில் ஒன்றாக உள்ளது.[1]
உடா நிறுவனம் 1995 சூன் 20 அன்று, 54 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு, உடா ஓல்டிங்சு (UDA Holdings Sdn Bhd) எனப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் 1999-இல் உடா சொத்துடைமை நிறுவனம் (UDA Holdings Berhad) எனப் பெயர் மாற்றம் கண்டது. அதனைத் தொடர்ந்து அது கோலாலம்பூர் பங்குச் சந்தையின் முதன்மைப் பட்டியலில் இடம்பெற்றது. தற்போது இந்த நிறுவனம் உடா ஓல்டிங்ஸ் அல்லது உடா நிறுவனம் என அழைக்கப்படுகிறது.
2007-ஆம் ஆண்டில், உடா நிறுவனம் கோலாலம்பூர் பங்குச் சந்தையின் முதன்மைப் பங்குப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, கசானா நேசனலின் (Khazanah Nasional) முழு உரிமையுடைய துணை நிறுவனமாக மாறியது. அதற்கும் அடுத்த ஆண்டு, கசானா நேசனல் தனது அனைத்து உடா பங்குகளையும் மலேசிய நிதி அமைச்சிற்கு மாற்றியது.
வரலாறு
[தொகு]மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் (UDA) 1971 நவம்பர் 12 அன்று மலேசிய பொது நிறுவன அமைச்சின் கீழ் நிறுவப்பட்டது.[1][2] ஓர் அரசு நிறுவனமாக, 1971 முதல் 1979 வரை, உடா நிறுவனம், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் 30 திட்டங்கள், திராங்கானுவில் 15 திட்டங்கள், கிளாந்தானில் 14 திட்டங்கள், மற்றும் பேராக், கெடாவில் தலா 10 திட்டங்கள் என மொத்தம் 118 வணிகத் திட்டங்களை உருவாக்கியுள்ளது.[3]
1970-கள் மற்றும் 1980-களில் கோலாலம்பூரின் விரிவான நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்திற்கும் உடா நிறுவனம் பொறுப்பேற்றிருந்தது. இத்திட்டத்தில், 1977-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்பட்ட 16 மாடிகளைக் கொண்ட சகாயா சூரியா, மற்றும் புடு சென்ட்ரல், புடுராயா, டாயாபூமி போன்றவையும் அடங்கும்.[3][4].[3]
1996-இல், இது ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் முழுப் பெயர் உடா ஓல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் (UDA Holdings Private Limited) என மாற்றப்பட்டது. பின்னர் 1999-இல், இது ஒரு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாகத் தனது நிலையை மாற்றி, அதன் பெயரை உடா சொத்துடைமை நிறுவனம் (UDA Holdings Berhad) என மீண்டும் மாற்றிக்கொண்டது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Abdullah, Mustaza & Hj. Yahya, MatMarjani (1991). Kemahiran Hidup Bersepadu TERAS, p. 109. Dewan Bahasa dan Pustaka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-62-2316-9
- ↑ "INTRODUCTION" பரணிடப்பட்டது 2005-09-21 at the வந்தவழி இயந்திரம். Retrieved 17 February 2006.
- 1 2 3 "Urban authority may resort to legal action". Business Times (Singapore). 31 January 1979. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/biztimes19790131-1.2.14.1?qt=puduraya&q=puduraya.
- ↑ "KL shopspace glut". The Straits Times. 5 October 1978. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/biztimes19781005-1.2.24?qt=puduraya&q=puduraya.
- ↑ "UDA debuts with small premium". Business Times (Singapore). 19 November 1999. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/biztimes19991119-1.2.24.1.1?qt=uda,%20holdings&q=uda%20holdings.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- UDA Holdings Berhad (MYX: 5013), bursamalaysia.com
- Company Overview of UDA Holdings Berhad, bloomberg.com