மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம்
Malaysian National Security Council Majlis Keselamatan Negara Malaysia مجليس کسلامتن نݢارا مليسيا NSC / MKN MAGERAN | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 7 சூலை 1971 |
முன்னிருந்த அமைப்பு |
|
வகை | அரசு |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | பெர்டானா புத்ரா புத்ராஜெயா மலேசியா |
குறிக்கோள் | உத்தி, பாதுகாப்பு, இறையாண்மை Strategy, Security, Sovereignty Strategik, Keselamatan, Kedaulatan |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம் (மலாய்: Majlis Keselamatan Negara Malaysia (MKN); ஆங்கிலம்: Malaysian National Security Council (NSC); ஜாவி: مجليس کسلامتن نݢارا مليسيا) என்பது மலேசியப் பிரதமர் துறையின் கீழ் உள்ள மலேசிய அரசின் பாதுகாப்பு மன்றம்; மற்றும் மலேசியாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகிக்கும் அரசு முகமையாகும்
இந்த அமைப்பு அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும்; பொது ஒழுங்கு, பாதுகாப்பு, அரசு முதன்மைச் சேவைகளைக் கணிகாணிக்கிறது. நாட்டின் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப தன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது; மற்றும் நாட்டின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் கட்டளைகளையும் சீர்செய்கிறது.
அமைப்பு
[தொகு]இந்த மன்றம் மலேசியப் பிரதமரின் தலைமையில் செயல்படுகிறது.
நிர்வாக உறுப்பினர்கள்
[தொகு]- மலேசியப் பிரதமர் - தலைவர்
- மலேசிய துணைப் பிரதமர் - துணைத் தலைவர்
- தலைமை இயக்குநர்
- மலேசிய தற்காப்பு அமைச்சர்
- மலேசிய உள்துறை அமைச்சர்
- மலேசிய இலக்கவியல் அமைச்சர்
- மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்
- மலேசிய பாதுகாப்பு படைகளின் தலைவர்
- அரச மலேசிய காவல் துறை தலைவர்
வரலாறு
[தொகு]13 மே இனக்கலவரம்; மலேசியா போன்ற பல்லின சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், உணர்திறன்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு தரப்புகளுக்கு இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து, தேசிய செயல்பாட்டு மன்றம் (மலாய்: Majlis Gerakan Negara (MAGERAN); ஆங்கிலம்: National Operations Council (NSC) நிறுவப்பட்டது.
அப்போதைய நிலையில் நாட்டிற்கான பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது மக்களிடையே அமைதியைப் பாதுகாத்தல், நாட்டிற்குத் தேவையான முக்கியப் பொருட்களை வழங்குதல்; மற்றும் நடைமுறைல் இருக்கும் சேவைகளை மேம்படுத்துதல் போன்றவை தேசிய செயல்பாட்டு மன்றத்தின் முக்கிய இலக்காக இருந்தன.
கம்யூனிச அச்சுறுத்தல்கள்
[தொகு]நாட்டின் நிலைமை மேம்பட்டதும், 1971-ஆம் ஆண்டு தேசிய செயல்பாட்டு மன்றம் கலைக்கப்பட்டது.[1] தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பாதுகாப்புத் தன்மையை நிர்வகிப்பதற்குப் பொறுப்பான ஒரு நிறுவனம் தேவை என்று அரசாங்கம் உணர்ந்தது.
அத்துடன் அந்த வேளையில், கம்யூனிச அச்சுறுத்தல்களும் இருந்தன; மற்றும் இனங்களுக்கு இடையிலான உறவுத் தனமைகளும் சற்றே பலகீனமாக இருந்தன. இவற்றின் காரணமாக பிப்ரவரி 23, 1971 அன்று, மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தை அரசாங்கம் நிறுவியது.