மலேசிய சுற்றுலா காவல் துறை
மலேசிய சுற்றுலா காவல் துறை | |
---|---|
Polis Pelancong Malaysia Malaysian Tourist Police | |
சுற்றுலா காவல் துறை சின்னம் | |
செயற் காலம் | 1985 தொடக்கம் |
நாடு | மலேசியா |
கிளை | படிமம்:Flag of the Royal Malaysian Police.svg அரச மலேசிய காவல் துறை |
பொறுப்பு | சட்ட அமலாக்கம் |
அளவு | பாதுகாக்கப் படுகிறது |
அரண்/தலைமையகம் | புக்கிட் அமான், கோலாலம்பூர் மலேசியா அனைத்து படைத்துறை |
ஆண்டு விழாக்கள் | 25 மார்ச் (காவல்துறை தினங்களின் விழாக்கள்), 31 ஆகஸ்டு (விடுதலை நாள் விழாக்கள்) |
தளபதிகள் | |
காவல்துறைத் தலைவர் | ரசாருடின் உசேன் (Razarudin Husain) |
மலேசிய சுற்றுலா காவல் துறை (மலாய்: Polis Pelancong Malaysia; ஆங்கிலம்: Malaysian Tourist Police; சீனம்: 马来西亚旅游警察) என்பது அரச மலேசிய காவல் துறையின் சிறப்புப் பிரிவு ஆகும் அமைப்பாகும். இதன் தலைமையகம் கோலாலம்பூர் மாநகரில் புக்கிட் அமான் வளாகத்தில் உள்ளது.
உள்ளூர்ச் சட்டதிட்டங்கள்; உள்ளூர்ச் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், உள்ளூர்ப் பண்பாடு; மற்றும் உள்ளூர் இடங்கள் பற்றிய தகவல்களை சுற்றுலாப் பயணிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்குவது இந்தத் துறையின் முதன்மை நோக்கமாகும்.[1][2]
பொது
[தொகு]மலேசிய சுற்றுலா காவல் துறையின் சீருடைகள் அடர் நீல நிறத்திலும்; தொப்பியின் உச்சி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இடது சட்டைப்பையின் முத்திரைப் பட்டையில் i (information) எனும் எழுத்து பதிக்கப்பட்டு இருக்கும். இது "தகவல்" என்பதற்கான பன்னாட்டுக் குறியீட்டைக் குறிப்பதாகும்.
வரலாறு
[தொகு]மலேசிய சுற்றுலா காவல் துறை 1985-ஆம் ஆண்டில் அரச மலேசிய காவல் துறையினால் நிறுவப்பட்டது. காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் அந்தத் துறைக்குத் தலைமை தாங்கினார்.
சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்க சுற்றுலா காவல் துறையினர் பெரிதும் உதவினர்.
அமைப்பு
[தொகு]கோலாலம்பூரில், தினசரி காவல் பணியை மேற்கொள்வதற்கும்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும்; நான்கு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த நான்கு காவல் பணிக் குழுக்கள்:
- நடைக் காவல் குழு - (Walking Patrol)
- விசையுந்து காவல் குழு - (Motorcycle Patrol)
- மிதிவண்டி காவல் குழு - (Bicycle Patrol)
- சுற்றுப்பணி காவல் குழு - (Patrol Car Crew)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ web@tourism-review.org, Tourism-Review org –. "Malaysia's Tourist Police Is Friendly and Fast | .TR". www.tourism-review.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Tourist police தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Royal Malaysian Police official website பரணிடப்பட்டது 2021-04-21 at the வந்தவழி இயந்திரம்
- Welcome Malaysia-Tourist Police information