உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய சமூக நீதிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சமூக நீதிக் கட்சி
Malaysian Social Justice Party
Parti Keadilan Masyarakat Malaysia
பெகெமாஸ்
சுருக்கக்குறிPEKEMAS
நிறுவனர்வீரப்பன் வீராத்தான்
டான் சீ கூன்
சையத் உசைன் அலாத்தாஸ்
தொடக்கம்1972
கலைப்பு1982
பிரிவுமலேசிய மக்கள் இயக்கக் கட்சி
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
கொள்கைசமூகவுடைமை
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
நிறங்கள்சிவப்பு, வெள்ளை, பச்சை

மலேசிய சமூக நீதிக் கட்சி அல்லது பெகெமாஸ் (ஆங்கிலம்: Malaysian Social Justice Party அல்லது Youth Front Party; மலாய்: Parti Keadilan Masyarakat Malaysia; (PEKEMAS); சீனம்: 马来西亚社会正义党) என்பது வீரப்பன் வீராத்தான், டான் சீ கூன் மற்றும் சையத் உசைன் அலாத்தாஸ் ஆகியோரால் 1972-இல் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். சூலை 19, 1974 அன்று, மலேசிய மர்கேன் கட்சியுடன் (Parti Marhaen Malaysia) இணைந்தது.[1] இருப்பினும் 1982-இல் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது.

வரலாறு

[தொகு]

இந்தக் கட்சி, 1972-ஆம் ஆண்டு, வீரப்பன் வீராத்தான், டான் சீ கூன் மற்றும் சையத் உசைன் அலாத்தாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[2] கெராக்கான் கட்சியின் இணை நிறுவனர் லிம் சோங் இயூ (Lim Chong Eu), புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பாரிசான் நேசனல் (முன்பு தேசிய முன்னணி) கூட்டணியில் கெராக்கான் கட்சியை இணைத்த பிறகு, வீரப்பன் வீராத்தான், டான் சீ கூன் மற்றும் சையத் உசைன் அலாத்தாஸ்[3] ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பாரிசான் நேசனல் கூட்டணி; இன அடிப்படையிலான கட்சிகளை ஆதரிப்பதாக உணர்ந்ததால், டான் சீ கூன் அந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தார்.[4] பெகெமாஸ் என்பது ஓர் இனவாதக் கட்சி அல்ல; அசல் கெராக்கான் கட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[5][6] இதன் பின்னர் மற்றொரு கெராக்கான் மக்களவை உறுப்பினர் வி. டேவிட் அவர்கள் பெகெமாஸ் கட்சியில் இணைந்தார்.[7]

மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை

[தொகு]

இருந்தபோதிலும், சர்ச்சைக்குரிய அரசாங்க ஆதரவு பெற்ற மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கையை டான் சீ கூன் ஆதரித்தார். அரசியலமைப்பின் 153 வது பிரிவின் கீழ் பூமிபுத்திராவுக்கு (மலாய்க்காரர்கள் மற்றும் பிற பழங்குடி மக்கள்) வழங்கப்பட்ட சலுகைகளை விரிவுபடுத்திய இந்தக் கொள்கை. மலாய்க்காரர்கலின் வறுமையைக் குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை தேவை என்று அவர் உணர்ந்தார்.[8] சூலை 19, 1974 அன்று, முன்னாள் சோசலிச முன்னணித் தலைவர் அகமது போசுதமாம் தலைமையிலான சிறிய கட்சியான மர்கேன் கட்சி (Parti Marhaen Malaysia), பெகெமாஸ் கட்சியில் இணைந்தது. இது நகர்ப்புற மலாய்க்காரர்களிடையே கட்சிக்கு ஆதரவை அதிகரித்தது.[9]

1974 பொதுத் தேர்தலில்,[10] பெகெமாஸ் கட்சி ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 36 வேட்பாளர்களில் டான் சீ கூன் மட்டுமே வெற்றி பெற்றார். அதே நேரத்தில் மாநிலத் தேர்தல்களில், பினாங்கு சட்டமன்ற பாகன் ஜெர்மால் சட்டமன்றத் தொகுதியில் ஓங் யி ஆவ் மட்டுமே வெற்றி பெற்றார்.[11]

1977=ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக டான் சீ கூன் அறிவித்தார். இருப்பினும் 1978-ஆம் ஆண்டு அவரின் பதவிக்காலம் முடியும் வரை அவர் தமது நாடாளுமன்றப் பதவியில் இருந்தார்.[12]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Straits Times – Google News Archive Search". Retrieved 25 March 2016.
  2. Gin, Ooi Keat (11 May 2009). Historical Dictionary of Malaysia (in ஆங்கிலம்). Scarecrow Press. ISBN 9780810863057.
  3. George, K. (2005). "Champion of the downtrodden", Aliran, (Go to search engine and enter "alatas" and various articles mentioning will come up) பரணிடப்பட்டது 16 பெப்ரவரி 2006 at the வந்தவழி இயந்திரம். Retrieved 14 February 2006.
  4. "PERSPECTIVE: And the roars will continue to echo - Politics - New Straits Times". www2.nst.com.my. Archived from the original on 2014-05-04.
  5. Weiss, Meredith L. (17 October 2014). Routledge Handbook of Contemporary Malaysia (in ஆங்கிலம்). Routledge. ISBN 9781317629597.
  6. Means, Gordon P. (1991). Malaysian Politics: The Second Generation, p. 29. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588988-6.
  7. K S Sandhu, A Mani, ed. (1993). Indian Communities in Southeast Asia. Institute of Southeast Asian Studies. p. 259. ISBN 978-9812100177.
  8. Loh, Kok Kin (2003). "Tan Sri Dr Tan Chee Khoon – A Life of Service" பரணிடப்பட்டது 15 பெப்ரவரி 2006 at the வந்தவழி இயந்திரம். Retrieved 14 February 2006.
  9. Malaysian Politics and the 1978 Election (PDF) (in ஆங்கிலம்). Petaling Jaya, Malaysia: Oxford University Press. 1980. p. 116. ISBN 019 580 464 3.
  10. "SEJARAH PILIHAN RAYA UMUM DI MALAYSIA – shameel iskandar". bicaradariaku.com. Archived from the original on 25 April 2013. Retrieved 25 March 2016.
  11. Hwang, In-wŏn (1 January 2003). Personalized Politics: The Malaysian State Under Mahathir (in ஆங்கிலம்). Institute of Southeast Asian Studies. ISBN 9789812301857.
  12. "Malaysia – Pilihan Raya – Pilihan Raya Umum Kelima ( 1978 )". geocities.ws. Retrieved 25 March 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சமூக_நீதிக்_கட்சி&oldid=4453527" இலிருந்து மீள்விக்கப்பட்டது